“ செயல் “ – விமர்சனம்
வீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதைப்போல் வெற்றி தோல்வியைக் காட்டிலும் நல்ல நோக்கத்துக்காக நாம் செய்யும் செயல்தான் முக்கியம் என்பதை விளக்க வந்திருக்கும் கருத்துள்ள படம்தான் செயல்.ஒரு வரியில் சொல்லும்போது நன்றாக இருக்கிறது இந்தக் கதை. மிகப் பெரிய வெற்றிப் படமாக்கியிருக்க வேண்டிய கதையை ஏனோ தானோவென்ற திரைக்கதையாலும் சாதாரண காட்சிகளாலும் சுமாரான படமாக்ககிவிட்டார் இயக்குநர் ரவி அப்புலு. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய அனைத்துப் பொறுப்புகளும் இவரே
பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த ஷாஜகான் படத்தை இயக்கயது இவர்தானாம். உண்மையில் இவர்தான் ஷாஜஹான் படத்தை இயக்கினாரா என்ற சந்தேகமே வருகிறது.... வீட்டு வாசலில் இட்லி சுட்டு விற்று வாழக்கை நடத்தும் ரேணுகா தன் மகன் ராஜன் தேஜேஸ்வரை மார்கெட்டுக்கு அனுப்பி மளிகை சாமான்கள் வாங்கிவரச் சொல்கிறார். மார்க்கெட...







