Blog
காளி – விமர்சனம்
அமெரிக்காவில் வாழும் டாக்டர் விஜய் ஆண்டனி. அமெரிக்காவில் தன்னை வளர்த்தவர்கள் உண்மையான பெற்றோர் இல்லை என்றும், அவர்கள் தன்னை தத்தெடுத்தவர்கள் என்றும், தான் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் இருந்தவர் என்பதும் விஜய் ஆண்டனிக்கு ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது. இதனால் தன்னுடைய பெற்றோர்களை தேடி இந்தியா வரும் விஜய் ஆண்டனிக்கு தனது தாயார் பார்வதி இறந்துவிட்டதாகவும், அவரை கர்ப்பமாக்கி ஒருவர் ஏமாற்றிவிட்டதையும் தெரிந்து கொள்கிறார்.
தன்னுடைய தந்தை கனவுக்கரை என்ற கிராமத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்த விஜய் ஆண்டனி அந்த ஊரில் ஒரு மருத்துவமனையை போட்டு அந்த ஊரின் மக்களுக்கு தெரியாமலேயே கேம்ப் என்ற பெயரில் அனைவரின் ரத்த மாதிரியை எடுத்து அதன்மூலம் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து தனது தந்தை யார்? என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இதில் அவருக்கு வெற்றியும் கிடைக்கின்றது. தனது...
வனஷாக்ஷி கிரியேசன்ஸ் பெருமையுடன் வழங்கும் “கண்மணி பாப்பா”
வனஷாக்ஷி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி இயக்கியுள்ள திரைப்படம் “கண்மணி பாப்பா”
நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் - மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் “கண்மணி பாப்பா” திரைப்படம்.
கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவி தான் அவருக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை தந்து வருகிறார். ஒருகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய தொகை முழுதும் கிடைத்து விட, தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை வாங்க நினைக்கிறார். அதற்காக அழகான ஒரு வீட்டையும் தேர்வு செய்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நொடியிலிருந்து அவரது குழந்தையைச் சுற்றி சில அமானுஷ்ய சம்...
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் பெப்சி சிவா
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரைப்படத் துறையில் தொழிலாளர்களின் நலனுக்காக பல சங்கங்களில் பொறுப்புகளில் பதவி வகித்தவரும், தனம் படத்தை இயக்கிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர், தற்போதைய அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் மாமன்றத்தின் தலைவராக பதவி வகித்து வரும் திரு. பெப்சி சிவா அவர்கள் தமிழின போராட்டங்களான நெய்வேலி மற்றும் ராமேஸ்வரம் போராட்டங்கள் போன்று பல்வேறு தமிழின போராட்டங்களை முன் நின்று நடத்தியுள்ளார். திரைப்பட இயக்குனர் திரு.பாரதிராஜா அவர்களின் தலைமையில் திரு. சீமான், திரு.R. K. செல்வமணி, ஆகியோரோடு தமிழினத்திற்காக தமிழ்நாடு முழுக்க பரப்புரையில் ஈடுபட்டவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு பல கட்டங்களில் ஆதரவாக செயல்பட்டவரும், கலைத்துறையினராலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களா...








