Blog
சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா
தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பதை நிரூபித்து இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் "பியார் பிரேமா காதல்" படத்தில் இடம் பெற்று உள்ள high on love பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் விஸ்தரித்துக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா , தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் ( இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கரின் மகன்) நடிக்கும் பேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார். படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கவினயம். சூது கவ்வும், தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஆகிய படங்களுக்கு இவர் இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிட தக்கது.
யுவனின் நடனத்தை பற்றி அவர் கூறியதாவது "இந்த படம் ஒரு திரில்லர் படம்.திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாட...
My role in ‘Kaali’ is sketched with humour and jovialness – Anjali
Actress Anjali has her kitty overwhelming with huge projects that are depicting her in different dimensions. But what keeps her more invigorated for the moment is this week release ‘Kaali’. The actress plays one of the female lead roles opposite Vijay Antony starrer movie, directed by Kiruthiga Udhayanidhi. On sharing her experience working with Vijay Antony, Anjali says, “I must say that Vijay Antony has a huge variation when the camera lens is off and on. He is completely calm and much reserved, but he transformed into a powerhouse when camera is switched on. I am playing his partner in episodes that is set against the modern backdrops. My role in this film is sketched with humour and jovialness, which I believe audiences will enjoy and accept.
Vijay Antony has offered me ...
இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ திருப்பதிசாமி குடும்பம் “
ஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம்.G , ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா இணைந்து வழங்கும் படம் “ திருப்பதிசாமி குடும்பம் “ &nb...
21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு
47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி (World Premiere) ஜனவரி மாதம் திரையிடப்பட்டது. 187 உலக திரைப்படங்கள் போட்டியிட்ட பார்வையாளர்கள் விருதிற்கான பிரிவில் பேரன்பு (ஆங்கிலத்தில் Resurrection) முதல் 20 திரைப்படங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது. மேலும் சிறந்த ஆசிய படத்திற்கு கொடுக்கும் NETPAC விருதிற்கு போட்டிப் பிரிவில் தேர்வாகியது.
தற்போது பேரன்பு திரைப்படம் ஜூன் 16 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ள 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகியுள்ளது. ஆக சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக (Asian Premiere) பேரன்பு திரையிடப்பட இருக்கிறது.
படம் முடிவடைந்ததும் World Premiere மற்றும் Asian Premiere-க்கு பிறகு பேரன்பை வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தோம்....
ஒரு குப்பைக்கதை ஆடியோ விழா மேடையில் கண்கலங்கிய டான்ஸ் மாஸ்டர் தினேஷ்!
பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு குப்பை கதை'. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி..
மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்.
இந்த விழாவில் இயக்குனர் சீனுரா...
“அரும்பே” பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா
வரும் 18ஆம் தேதி வெளி வர உள்ள "காளி" மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகை ஆகாது.விஜய் ஆண்டனி நடித்து , இசை அமைக்க , விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் "காளி" படத்தில் வரும் "அரும்பே" இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது.அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத்,
இப்போதே ரசிகர்களின் கனவு கன்னியாகி தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார்.
" காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்த படத்தில்&...
எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் இறுதி மரியாதை
மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனை பற்றி நடிகர் சிவகுமார் பேசியது :-
பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும் அடிப்படையே அவருடைய அம்மா என்று தான் சொல்ல வேண்டும். நடுத்தர வர்க்கத்து பெண்களின் வலிகள் வேதனைகள். சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம் தர இடத்தை தந்துள்ளது என்பதை தெளிவாக எழுதக்கூடியவர் பால குமாரன். 150 நாவல்கள் எழுதுவது என்பது சாதாரணமான ஒன்று அல்ல. சினிமா மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு காதல் இருந்தது. பாலகுமாரன் எழுத்துக்களுக்கு விகடன் மற்றும் கல்கி போன்ற பத்திரிகைகள் மிகப்பெரிய உதவியாக இருந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற ஒரு தொடரையும் பிரபல பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ளார். கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய நாயகன் மற்றும் குணா படங்களுக்கு இவர் தான் திரைக்கதை வசனம். காதலன் , ஜென்டில்மேன் , ஜீன்ஸ் போன்ற பெரிய அளவில் ஓடிய படங்களுக்கு இவர் தன்னுடைய எழுத...



