Sunday, November 29

Blog

‘அமலா ஹோம்’ – அமலா பால் ஆரம்பிக்கும் தொண்டு நிறுவனம்

‘அமலா ஹோம்’ – அமலா பால் ஆரம்பிக்கும் தொண்டு நிறுவனம்

News
பெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் இந்த இளைஞர்களை வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. திரையை தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலா பால் தற்பொழுது நிரூபித்துள்ளார். கஷ்டப்படும் மக்களுக்கு சேவை செய்வதில் என்றுமே ஆர்வம் காட்டும் அவர் தற்பொழுது 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியை திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது. இது குறித்து நடிகை அமலா பால் பேசுகையில் , '' அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடை பேச்சுக்கு தயார் செய்து கொண்டிருந்தபொழுதுதான் சில முக்கியமான புள்ளிவிவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும்...
விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள் !

விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள் !

News
தென்னிந்திய சினிமாவில் தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் இருக்கிறது.இவர் சமுதாயத்தில் மிக எளிமையுடன் மேலோங்கி இருப்பவர் மட்டும் சமூம்  மேலோங்க வேண்டும் என நினைப்பவர். விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் தளபதி ரசிகர்கள் எண்ணிலடங்கா நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அதேபோல் இன்று மதுரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன் கிழக்கு  ஒன்றியம் சூர்யா அவர்கள் சார்பாக ஏற்பாடு செய்த  நலத்திட்டஉதவிகள் : *100 வேஷ்டிகள் மற்றும் 100 சேலைகள் , *40 சில்வர் பாத்திரங்கள் , *50 சில்வர் குடங்கள் , *10 மண்வெட்டிகள் , *1 கன்றுக்குட்டி  இவை அனைத்தையும் மதுரை மேலூரில் உள்ள  ஒத்தகடை பகுதியில் மதுரை வடக்கு  மாவட்ட இளைஞரணி மற்றும் மேலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் குஷிகுமார் சார்பாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு.புஸ்ஸி .N .ஆனந்த் (EX .MLA )  அவர்கள் வழங்கினார்.. இந்த நலத்திட...
“சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” –

“சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” –

News
2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் "அடிதடி". மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது. "சினிமா நடிகனும் அரசியல்வாதியும்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார். இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுதத் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ் ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை அரசியல் நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது "சினிமா நடிகனும் அரசியல்வாதியும்". தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங...
கார்த்தி-17 திரைப்படத்தின் படபிடிப்பு இனிதே துவங்கியது

கார்த்தி-17 திரைப்படத்தின் படபிடிப்பு இனிதே துவங்கியது

News
கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள “ கார்த்தி-17 “ திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் ,இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2D Entertainment  ராஜசேகர் பாண்டியன் , ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ் ,இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சிவகுமார் கிளாப் அடித்து படபிடிப்பை துவக்கி வைக்க சூர்யா கேமராவை ரோல்லிங் செய்தார். ரிலையன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் கார்த்தி- 17 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார் , இணை தயாரிப்பு ஜெய் ஜெகவீரன் , ரம்யா கிருஷ்ணன் , பிரகாஷ் ராஜ் , RJ விக்னேஷ் காந்த் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயரா...
ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய அபிசரவணன்..!

ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய அபிசரவணன்..!

News
தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி ரங்கம்மாள் பாட்டி. வடிவேலுவின் படங்களில் அடிக்கடி இவரை பார்த்திருக்கலாம். இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் ஐநூறு ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று வெளியானது. ஏற்காட்டில், நடுக்காட்டில் ‘சூரபத்மன்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் அபிசரவணன், இந்த தகவலை கேள்விப்பட்டதும் வருத்தமடைந்தார். உடனே சென்னையில் உள்ள நண்பர்களையும் நடிகர்சங்கத்தினரையும் தொடர்புகொண்டு ரங்கம்மாள் பாட்டியுடன் பேசி அவரை ஏற்காட்டில் நடைபெறும் படப்பிடிப்புக்கு அழைத்து வரச்செய்தார் அபிசரவணன்.  தன்னுடன் ஐந்து நாட்கள் அவரை தங்க வைத்ததுடன் படப்பிடிப்பிலும் அவரை உற்சாகமாக கலந்துகொள்ள செய்தார். இந...
கார்த்தி நடிக்கும் படம் இமயமலை – யுரோப் நாடுகளில்  தயாராகிறது

கார்த்தி நடிக்கும் படம் இமயமலை – யுரோப் நாடுகளில் தயாராகிறது

News
மாபெரும் வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து   கார்த்தி , ரகுல்  பிரீத்சிங் வெற்றி  ஜோடி மீண்டும்   இப்படத்தில் இணைகிறார்கள் . மேலும் பிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , RJ விக்னேஷ் , அம்ருதா , ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்  .   இவர்களுடன் முக்கிய வேடத்தில்  நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். இப்படம் மூலம் ரஜத் ரவிசங்கர் டைரக்டராக அறிமுகமாகிறார். கதை திரைக்கதை, வசனம் எழுதும் இவர் ,"எங்கேயும் எப்போதும்" இயக்குநர் சரவணன் ,  ,பிரபல  இந்தி இயக்குநர் அனுராக்காஷ்யப் , இயக்குநர்  R.கண்ணன் இவர்களுடன் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இசை : ஹாரிஸ் ஜெயராஜ் ஒளிப்பதிவு : R  வேல்ராஜ் எடிட்டிங் : ரூபன் கலை : ஜெயஸ்ரீநாராயணன் ஸ்டன்ட் : அன்பறிவ் பாடல்கள் : கபிலன் , தாமரை , விவேக் நிர்வாக தயாரிப்பு : K.V.துரை அஸோஸியேட்  தயாரிப்பு : ஜெய் ஜெகவீரன். பெயரிடப்படாத “ கார்த்தி 17...
எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைக்கிறார் ரஜினிகாந்த்

எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைக்கிறார் ரஜினிகாந்த்

News
வரும் மார்ச் 5 ஆம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர் நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நடைபெறும் விழாவில் மொரிசியஸ் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார். எம்.ஜி.ஆர் நினைவுப் புகைப்படக் கண்காட்சியை இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ்.ராதா கிருஷ்ணன் திறந்து வைக்கிறார். பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் வெண்கலைச் சிலையை பத்ம விபூசண் ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார். எம்.ஜி.ஆரின் குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் கலை, அரசு, அரசியல் ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றியவர்களுக்கு விருதுகள் கொடுக்கப்படவிருக்கின்றன.  ...
CLOSE
CLOSE