Sunday, November 29

Blog

பேரழகி ஐ.எஸ்.ஓ’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட  இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்..!

பேரழகி ஐ.எஸ்.ஓ’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்..!

News
கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி  தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ '.  'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா'  ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், விஜய் ஆண்டனியின் 'காளி'  நாயகி  ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா,  நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ்   உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 'நாகேஷ் திரையரங்கம்' புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்.. இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் அவர்கள் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்  இப்படத்தின் இசை  மற்றும் பட வெளியீடு விரைவில் நடைபெறும்....
ஹாலிவுட் பாணி திரைக்கதையில் உருவான ‘என் பெயர் ஆனந்தன்’!

ஹாலிவுட் பாணி திரைக்கதையில் உருவான ‘என் பெயர் ஆனந்தன்’!

News
காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்'.  இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைவரது ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  த்ரில்லர் படமான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார்.  குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’. ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப்  கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்  ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர...
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு

News
மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ். வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் சார்பில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் உடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார். படத்தின் நாயகி அறிவிப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி பட்டிகாட்டு பொன்னையா வரை 28 படங்களில்...
தியேட்டர்கள் அதிகரிப்பு..  மகிழ்ச்சியில்  ‘6 அத்தியாயம்’  படக்குழுவினர்…!

தியேட்டர்கள் அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் ‘6 அத்தியாயம்’ படக்குழுவினர்…!

News
கடந்த வெள்ளியன்று ‘6 அத்தியாயம்’ படம் வெளியானது.. இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பினால் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் மகிழ்ச்சியில் இருக்கிறார். இன்று 'திரைப்பட இலக்கியச் சங்கமம்' சார்பில்  டிஸ்கவரி புக் பேலஸில்  ‘6 அத்தியாயம்’  படக்குழுவினர்களுக்கு  பாராட்டு விழா நடத்தப்பட்டது.  இந்த நிகழ்வின்போது  இந்தப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி  கொண்டாடினார்கள். முன்னதாக நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மௌன அஞ்சலியும் செலுத்தினர். ஆறு இயக்குனர்கள், ஆறு அத்தியாயங்கள், எல்லா அத்தியாயங்களுக்கும் க்ளைமாக்ஸில் தனித்தனி முடிவு என உலக சினிமாவிலேயே ஒரு புதிய முயற்சியாக உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலகினரிடையேயும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் வெற்றியை தொட...
தளபதி விஜய் பற்றிய” புத்தகம் –  “THE ICON OF MILLIONS

தளபதி விஜய் பற்றிய” புத்தகம் – “THE ICON OF MILLIONS

News
தென்னிந்திய  சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கப் பொருப்பாளர் திரு. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தளபதி விஜய் பற்றிய ஓர் ஆங்கில மற்றும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.இதில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள்  கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். "THE ICON OF MILLIONS" என்று ஆங்கிலத்திலும் மற்றும் தமிழில் "கோடிக்கணக்கான மக்களின் அடையாளன் " என்ற பெயரிலும் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் நிவாஸ் என்பவரால் எழுதப்பட்டு " THALAPATHY ONLINE FANS " குரு,ரமேஷ்,மோகன்,வர்ஷா,சீனிவாசன்,மணிகண்டன் ஆகியோர் தலைமையில் இணைந்து திரு.ஹரிஹரன் என்பவரால் இப்புத்த...
CLOSE
CLOSE