Sunday, November 29

Blog

“விஜய் ஜெயித்த கதை “

“விஜய் ஜெயித்த கதை “

News
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் பற்றிய புத்தகம் ஒன்று "விஜய் ஜெயித்த கதை " என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த புத்தகத்தை எழுத்தாளர் சபீதா ஜோசப் என்பவரால் எழுதப்பட்டு, அனைவராலும் இப்புத்தகம் வாங்கி படிக்கப்பட்டது. நாளை நமதே எனும் புத்தகக் கண்காட்சி நெல்லையில் நடைபெற்றது.இதில் தமிழகத்தில் சரித்திரம் படைத்த  தலைவர்களின் புத்தகத்திற்க்கு மத்தியில் தளபதி விஜயின் திரையுலகப் பயணம் பற்றிய "விஜய் ஜெயித்த கதை" புத்தகம்  வைக்கப்பட்டிருந்தது. இந்த புத்தகத்தில் தளபதி விஜயின் 25 ஆண்டுகால திரையுலக பயணமான 1992 ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து சமீபத்தில் வெளியான மெர்சல் படம் வரை, அவர் கடந்து வந்த வெற்றி பயணத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது....
தினேஷ்  –  அதிதி மேனன் நடிக்கும் “ களவாணி மாப்பிள்ளை “

தினேஷ் – அதிதி மேனன் நடிக்கும் “ களவாணி மாப்பிள்ளை “

News
நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்து  17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது. மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “ களவாணி மாப்பிள்ளை  “   படத்தில்  தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன்,...
“ பக்கா “  படத்திற்கு U சான்றிதழ்

“ பக்கா “ படத்திற்கு U சான்றிதழ்

News
அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “                                                                                                விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார். ஒளிப்பதிவு           -  எஸ்.சரவணன் / இசை   -  C.சத்யா  / பாடல்கள்   -   யுகபாரதி, கபிலன்  கலை   -  கதிர் /  நடனம்   -   கல்யாண்,  தினேஷ் ஸ்டன்ட்   -  மிராக்கிள் மைகேல் / எடிட்டிங்    -  சசிகுமா...
தயாரிப்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் இளையராஜவுக்கு வாழ்த்து!

தயாரிப்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் இளையராஜவுக்கு வாழ்த்து!

News
கோ.ப.செந்தில்குமார் ( தலைவர் இளைஞர் அணி ஆதி பராசக்தி மேல்மருவத்தூர் ) மற்றும் ஜி.கே.எம்.தமிழ்குமரன் ( திரைப்பட தயாரிப்பாளர் ) ஆகியோர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் பட்டம் அறிவித்தமைகாக நேரில் சென்று வாழ்த்து கூறினார்கள்.
‘அறம்’ படத்தை தந்த தயாரிப்பாளர் ராஜேஷின் அடுத்த படம்…

‘அறம்’ படத்தை தந்த தயாரிப்பாளர் ராஜேஷின் அடுத்த படம்…

News
குறும் படங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது என்பது சமீபத்திய ட்ரெண்ட். அந்த வகையில் சமீபமாக லட்சுமி, மா ஆகிய குறும் படங்கள் மூலம் அனைவரையும் ஈர்த்த இயக்குனர் சர்ஜுன்,   ஒரு தாய் அன்பின் வெளிப்பாடை  அற்புதமாக காட்டிய 'Maa' மூலம் அனைத்து தரப்பிலும் பெருமளவு பாராட்டுகளையும்  வாழ்த்துகளையும் பெற்று வருகிறார். இந்த வெற்றி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தை  இயக்கம் வாய்ப்பை சார்ஜூனுக்கு பெற்றுத்தந்துள்ளது  என்பதே தற்பொழுதைய பரபரப்பு செய்தி. இந்த படத்தை 'KJR ஸ்டுடியோஸ்' ராஜேஷ் தயாரிக்கவுள்ளார். 'அறம்' என்ற தரமான படத்தை தந்தவர் ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த  ஒரு தரமான தயாரிப்பாளர்- திறமையான இயக்குனர்- உச்ச நட்சத்திரத்தின் கூட்டணி வணிக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இயக்குனர் சர்ஜுன் பேசுகையில் , ''  வாய்ப்பு தேடி அலையும் இயக்குனர்களுக்கு  குறும்பட...
ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞனின் அகால மரணம் – லாரன்ஸ் கட்டிக் கொடுத்த வீட்டு கிரகப்பிரவேசம்

ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞனின் அகால மரணம் – லாரன்ஸ் கட்டிக் கொடுத்த வீட்டு கிரகப்பிரவேசம்

News
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான இளைஞர்களில் ஒருவர் யோகேஸ்வரன்.. சேலத்தை சேர்ந்த ராஜா ,புஷ்பா தம்பதிகளின் மகனான யோகேஷ்வரனின் பெயரில் உள்ள யோகம் அவரது வாழ்க்கையில் இல்லை... போராட்டத்தில் வீரமான அந்த இளைஞன் ரயில் விபத்தில் அடிபட்டு இறந்து விட துடி துடித்து போனார்கள் பெற்றோர்கள்.. தங்களது கனவெல்லாம் தளர்ந்து விட்ட சோகத்தில் இருந்த யோகேஷ்வரனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் சொன்ன லாரன்ஸ் ,நான் உங்க மகனாக இருந்து அவர் செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்கிறேன் என்று ஆறுதல் கூறினார்.. சொன்னதோடு நின்று விடாமல் யோகேஸ்வரனின் தங்கையின் படிப்புக்காக ஏற்பாடு செய்தார்.. அத்துடன் அவர்கள் குடும்பத்தினர் வாழ்வதற்காக ஒரு இடத்தை வாங்கி அதில் அழகாக இருபத்தந்து லட்சம் ரூபாய் செலவில் ஒரு வீட்டையும் கட்டி கொடுத்திருக்கிறார் லாரன்ஸ்.. யோகேஸ்வரன் விபத்தில் இறந்த நாள் கடந்த பி...
கீழடியில் ஒலித்த ஜல்லிக்கட்டு பாடல்கள்

கீழடியில் ஒலித்த ஜல்லிக்கட்டு பாடல்கள்

News
ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீடு எங்கெல்லாம் நடந்துள்ளது, என திரைத்துறை செய்தியாளர்களை கேட்டால், நீண்ட பட்டியல் ஒன்றையே தருவார்கள். அதில் சில மேடைகள், நம் புருவத்தை உயர வைக்கும். அதைத் தாண்டி, - ஆச்சரியத்தில் முழ்க வைக்கும்... ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் முயற்சியில் பல புதிய களங்களை தனது திரைப்படத்துக்காக தேர்ந்தெடுத்துள்ளது அஹிம்சா புரொடக்ஷன்ஸ். ஆம்! தமிழ்.... தமிழர்... தாயகம்... போன்ற மண் சார்ந்த உணர்வுகள் முன்எப்போதும் இல்லாத உச்சத்துக்கு பயணிக்கும் நிலையில், இன்னொரு வரலாற்றுப் பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன. சங்கம் வைத்து மொழி வளர்ந்த தமிழன், தனது கலையிலும், கலாச்சாரத்திலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, பல படிகள் முன்னேறியிருந்தான் என்பதை, இன்றைக்கு ஆதாரத்துடன் முன்வைக்கும்.... பண்பாட்டு பாசறையாக... வளர்ந்த நாகரீகத்தை காட்டும் நல்லதொரு சாட்சியாக விளங்கும் தொல்பொருள் ஆராய்ச்ச...
ராஜூமுருகன் – ஜீவா –  இணையும் ஜிப்ஸி

ராஜூமுருகன் – ஜீவா – இணையும் ஜிப்ஸி

News
குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ஜிப்ஸி என பெயரிடப்பட்டுள்ளது.    தற்போது ராஜூமுருகன் பாலாவின் வர்மா படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இதனையடுத்து இயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ஜிப்சி கதையை கூறியுள்ளார். வித்யாசமான கதை என்பதால் ஜீவாவும் உடனே கமிட் ஆகியுள்ளார்.    இந்த படத்தை தேசிங்கு ராஜா, மனம்கொத்திப் பறவை ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார்.    இயக்குனர் ராஜூமுருகன் இதுவரை குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்கள் மூலம் சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் படங்களை கொடுத்துள்ளார். தற்போது ஜிப்ஸி படம் மூலம் ஜீவாவுடன் இணைந்து கமர்ஷியலான  சமூக வாழ்வியல் படத்தை கொடுக்கவுள்ளார். இந்த படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ராஜூமுருகன் ...
CLOSE
CLOSE