Blog
Nagesh Thiraiyarangam – Vaadi Vaadi Vaadi (Lyric Video)
https://www.youtube.com/watch?v=X70znMGzzyY&feature=youtu.be
விசிறி – விமர்சனம்
கதாநாயகர்கள் : ‘ராம்சரவணா’ & ‘ராஜ் சூர்யா
கதாநாயகி:ரெமோனா ஸ்டெபனி
ஒளிப்பதிவு: விஜய் கிரண்,
இசை: தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர்
எடிட்டிங்: வடிவேல் – விமல்ராஜ்,
வசனம்: பித்தாக் புகழேந்தி
பாடல்கள்: மதன் கார்க்கி, ஞானகரவேல், ரேஷ்மன் குமார், ஸ்ரீ ராவன்
இணை தயாரிப்பு : பூமா கஜேந்திரன், S. சரஸ்வதி சரண்ராஜ், N.K. ராஜேந்திர பிரசாத் (துபாய்)”.
நிர்வாக தயாரிப்பு : A.P.பிரகலாதன், கர்ணன் மகாலிங்கம், V.ராஜேஸ்வரி
கதை, திரைக்கதை, இயக்கம் : வெற்றி மகாலிங்கம்
எம்.ஜி.ஆர். _சிவாஜி, ரஜினி _ கமல், என்று பிரிந்து நின்று மோதிக்கொள்ளும் தீவிர சினிமா ரசிகர்கள் வரிசையில் சமகாலத்தைய ரசிகர்கள் தல அஜித் தளபதி விஜய் என்றுபிரிந்து சமூகஊடகங்கள் மூலம் மோதிக் கொண்டிருப்பதை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம். படத்தின் கதை, திரைக்கதையும் இவரே.
தீவிரமான தல ரசிகர் ர...
SPI Cinemas presents Differently Designed, an inclusive design initiative by Kai Rassi and Rubecon
கலையின் வேலையே கனித்துவமான மனோநிலையின் மூலம் தனித்துவமான முடிவுகளை கொடுப்பது தான். அதன் அழகே கலைஞன் என்னவாக இருக்கிறான் என்பதில் இருந்து வருவது தான் என்கிறார் ஆஸ்கர் வைல்டு.
லாப நோக்கற்ற அமைப்புகளான கைராசி மற்றும் ரூபேகான் ஆகியவற்றோடு இணைந்து டிஃபரண்ட்லி டிசைன்டு என்ற ஒரு முயற்சியில் கைகோர்ப்பதில் பெருமை அடைகிறது எஸ்பிஐ சினிமாஸ்.
டிஃபரண்ட்லி டிசைன்டு மாற்று திறனாளி கலைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் மேம்பாட்டிற்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கவும் ஒரு எடுக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும். இந்த கலைஞர்களின் கலை படைப்புகளை புரிந்து கொள்வதன் மூலம் பல்வேறு பிராண்டுகளுக்கு பேக்கேஜிங், அழைப்பிதழ்கள், ஸ்டேஷனரி பொருட்கள், உடைகள் மற்றும் விற்பனை பொருட்களுக்கு தேவையான டிசைன்களை உருவாக்கி கொடுக்க முடியும். இந்த மாற்று திறனாளி கலைஞர்களுக்கு அவர்களின் கண்ணோட்டத்தை அழகான, தனித்துவமான கலைப்படைப்...
லக்ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த பிரபுதேவா!
ஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் உயிரோட்டத்தால் விலை மதிப்பில்லாததாக மதிக்கப்படும். அப்படி லக்ஷ்மி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் திகைப்புடன் இருந்தார் பிரபுதேவா. பிரமோத் ஃபிலிம்ஸ் ப்ரதீக் சக்ரவர்த்தி, ஷ்ருதி நல்லப்பா பிரபுதேவாவுக்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார்கள். வழக்கமாக கடைசி நாள் ஷூட்டிங் எப்போதுமே கொஞ்சம் எமோஷனலாக அமையும், அதோடு இந்த நெகிழ்வான நிகழ்வும் கூடுதலாக அமைந்தது.
உணர்வுகளும், பிரியாவிடையும் லக்ஷ்மியில் ரொம்பவே மிகுந்திருந்தது. பிரபுதேவா முழு படப்பிடிப்பிலும் எங்களுக்கு ரொம்பவே ஆதரவாக இருந்தார். அவர் மனதுக்கு மிகவும் நெருக்கமான நடனத்தை சுற்றி நடக்கும் கதை என்பதால் மிகவும் மிகுந்த ஈடுபாட்டோடு படத்துக்காக உழைத்தார் என்றா படத்தின் தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி.
தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா கூறும்போது,...
Actor Vishal’s Statement
2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து அதனை தொடங்கியும் வைத்தார். அமரர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடவிருப்பதாக தகவல் என செய்திகள் வெளியாகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டை - திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் க்ராஸ் ரோட் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகள் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன. இந்த மதுக்கடைகளால் பெண்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசு இன்னும் அவற்றுக்கு செவி சாய்க்கவில்லை. எனவே மூடவிருக்கும...
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!
சிறந்த நுட்பமான நடிப்பு, வழக்கத்திற்கு மாறான ஆச்சரியங்கள், கணிசமான நல்ல படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெயர் துல்கர் சல்மான். அப்பழுக்கற்ற அடையாளங்களோடு இருக்கும் துல்கர், இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்திழுக்க இந்த விஷயங்களும் முக்கிய காரணம். கேரளாவில் கொண்டாடப்படும் நடிகராக இருந்தாலும், அவரது 25வது படமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' தமிழ்ப் படமாக அமைந்திருப்பது கோலிவுட்டுக்கு பெருமை. 6 வருடங்களில் 25 பேசப்படும் படங்களில் நடித்திருக்கும் ஒரு திறமையான நடிகரை பாராட்ட, ஸ்டைலிஷ் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்த கௌதம் மேனனை தவிர யாரால் முடியும். அப்படிப்பட்ட இயக்குனர் கௌதம் மேனன் தான் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் லோகோவை இன்று மாலை 6:25 மணிக்கு மகிழ்ச்சியோடு வெளியிடுகிறார்.
இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், "இந்த சர்ப்ரைஸை வெளியிட இது தான் சரியான ...





