Sunday, November 29

Blog

‘பறந்து போ’ படம் குறித்து ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்…!

‘பறந்து போ’ படம் குறித்து ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்…!

News
”இயக்குநர் ராமின் ’பறந்து போ’ மிகப்பெரிய வெற்றிப் படம்!”- ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்! ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். படம் குறித்து ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பகிர்ந்து கொண்டதாவது, ”இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படம் பார்த்தேன். ராம் சினிமாவை பார்க்கும் விதம் வேறு விதமாக இருக்கும். தனது படங்களில் மெல்லிய மனித உணர்வுகளைக் கடத்துவதில் வல்லவர். குழந்தைகள் உலகத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதை கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குநர் ராம். மகிழ்ச்சி, நகைச்சுவை, அழுகை, துக்கம் என பல உணர்வுகளை இந்தப் படத்தில் கடத்தியிருக்கிறார். அப்பாவாக நடித்திருக்...
‘சையாரா’ படத்தின் ‘துன்’ பாடல் குறித்து மோஹித் சூரி!

‘சையாரா’ படத்தின் ‘துன்’ பாடல் குறித்து மோஹித் சூரி!

News
"மிதூன், அரிஜித் மற்றும் நான் ஒன்றாக இணையும்போது, மக்கள் எங்களிடம் ஒரு மறக்க முடியாத பாடலை எதிர்பார்க்கிறார்கள்!" - சையாரா படத்தின் அடுத்த பாடலான 'துன்' பாடலுக்காக மூவரும் ஒன்றாக இணைந்தது குறித்து மோஹித் சூரி... அரிஜித் சிங், மிதூன் மற்றும் மோஹித் சூரி என மூவரும் நாளை வெளியாகவுள்ள சையாராவின் அடுத்த பாடலான 'துன்' பாடலுக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த மூவரும் ஹிந்தி திரைப்படத்துறையில் வரலாற்று அளவில் வெற்றி பெற்ற பாடல்கள் சிலவற்றை உருவாக்கியுள்ளனர்.இதில் ஆஷிகி 2 படத்திலிருந்து 'தும் ஹி ஹோ' பாடலும் அடங்கும்.மேலும், இந்த கூட்டணியில் உருவாகும் இசைக்காக மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை மோஹித் விரும்புகிறார். மோஹித் கூறுகையில், “நட்சத்திரங்கள் இணையும்போது, ​​ஆச்சரியங்கள் நிகழும் என்பார்கள். என் வாழ்க்கையில் முதலில் மிதூனையும் பின்னர் அரிஜித் சிங்கையும் கொண்டு வந்ததற்கு ந...
தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழா!

தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழா!

Uncategorized
“விஜயகாந்த்துக்கு அடுத்ததாக விமல் தான்” தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் ஆர்.வி உதயகுமார் பாராட்டு! நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எழில். இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுக...
குறும்படப் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு!

குறும்படப் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு!

News
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப், தூய்மை மிஷன், சியர் மற்றும் ரீசைக்கிள் பின் அமைப்புகள் இணைந்து நடத்தும் சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0 வில் குறும்படப் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு! ஜூன் 30 ஆம் தேதி அலையன்ஸ் பிரஞ்சைஸ் ஆப் மெட்ராஸில் (Alliance Francaise of Madras) மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. இக்குறும்படப் போட்டியை மாஸ்டரிங் கேம்பஸ் கேரியருடன் (Mastering Campus Carriers (MC2)) இணைந்து வடிவமைத்து ஒருங்கிணைக்கப்பட்டது. கடந்த ஜூன் 6 ஆம் தேதி திரைப்பட போட்டியின் விதிமுறைகளும், “அன்றொரு நாள் கழிப்பறையில்” என்ற போட்டியின் தலைப்பும் அறிவிக்கப்பட்டது. இன்று நடந்த நிகழ்ச்சியில், போட்டியின் வெற்றியாளர்களை நடுவர்கள்  திரைப்பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, திரைப்பட இயக்குனர். கிருத்திகா உதயநிதி மற்றும் கவிஞர் யுகபாரதி அவர்களும் அறிவித்தனர் . முதல் இடத்தையும்...
திரைப் பிரபலங்கள் பாராட்டும் ‘கண்ணப்பா’ திரைப்படம்!

திரைப் பிரபலங்கள் பாராட்டும் ‘கண்ணப்பா’ திரைப்படம்!

News
'கண்ணப்பா’ திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்! - பிரபலங்கள் பாராட்டு! விஷ்ணு மஞ்சு நடிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் டாக்டர்.எம்.மோகன் பாபுவின் பிரமாண்ட தயாரிப்பில், மோகன்லால், அக்‌ஷய்குமார், சரத்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில், இயக்குநர்கள் பி.வாசு, பொன்ராம், நடிகர் இயக்குநர் பிரபுதேவா, நடிகை ராதிகா, அரசியல் தலைவர் மற்றும் கல்வியாளர் ஏ.சி.சண்முகம், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் தியாகராஜன், இயக்குநர் நடிகர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் பார்த்தார்கள். படம் பார்த்த பிரபலங்கள் அ...
ஜெய் நடிக்கும் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜெய் நடிக்கும் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

News
BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! ஜெய் நடிப்பில், “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! BV Frames சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை” புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்க, நாயகன் ஜெய் அடிவாங்கி கதறுவதையும் க...
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

News
BTK பிலிம்ஸ் பேனரில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அருள் அஜித் இயக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட திரையுலக முன்னணியினர் பங்கேற்பு! BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கயிலன் ' திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள். விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில் பட...
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் சம்யுக்தா!

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் சம்யுக்தா!

News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படத்தினை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் JB மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது ! பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் பங்குபெறும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலை வெளியிடத் தொடங்கியுள்ளனர், முக்கிய நடிகர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி, படத்தை சுற்றிய ரசிகர்களின்  எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர். மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை, பூரி கனெக்ட்ஸ்  நிறுவனத்தின் சார்பில், பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார். சார்மி கவுர் இப்படத்தை வழங்குகிறார், மேலும் JB மோஷன் பி...
இசையுலகில் கலக்கலாக கால் பதித்த இளம் கலைஞர் ரித்விக் ராவ் வட்டி !

இசையுலகில் கலக்கலாக கால் பதித்த இளம் கலைஞர் ரித்விக் ராவ் வட்டி !

News
காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகை சாவித்திரி கொள்ளுபேரன், ரித்விக் ராவ் வட்டி திரைத்துறையில் இசைக்கலைஞராக அறிமுகமாகியுள்ளார் ! தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார். ஒய் ஜி மதுவந்தியின் மகனான ரித்விக் ராவ் வட்டி சாருகேசி திரைப்படத்தில் தேனிசைத் தென்றல் தேவா இசையில் பாடகராக அறிமுகமாகியுள்ளார். மேலும் அப்படத்தில் சிறு கேமியோ ரோலில் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். 2003-ஆம் ஆண்டில் பிறந்த ரித்விக் ராவ் வட்டி, ஐந்து வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் கொண்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார். அந்த வயதிலேயே கார்நாடிக் கச்சேரி பாடல்களும், மேலைநாட்டு பியானோ இசையும் பயில ஆரம்பித்து விட்டார். இளம் வயதிலேயே காரின் எஞ்சின் ஒலி, கிரிக்கெட் பந்து மற்றும் பேட் சத்தம் போன்றவற்றின் ஸ்ருதி மற்றும் பிட்ச்சை (pitch) கண்டறியத் துவங்க...
ஹிர்து ஹாரூன் நாயகனாக நடிக்கும் புதிய படம் “டெக்ஸாஸ் டைகர்”!

ஹிர்து ஹாரூன் நாயகனாக நடிக்கும் புதிய படம் “டெக்ஸாஸ் டைகர்”!

News
  ஃபேமிலி படம் இயக்குநர் செல்வகுமார் திருமாரன் இயக்கத்தில், ஹிர்து ஹாரூன் நடிக்கும் “டெக்ஸாஸ் டைகர்”! கான்ஸ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற “All We Imagine As Light” படத்தின் நடிகர் ஹிர்து ஹாரூன், “டெக்ஸாஸ் டைகர்” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளிவந்து, உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, “ஃபேமிலி படம்” படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். “ஃபேமிலி படம்” படத்தை தயாரித்த “UK Squad” எனும் நிறுவனத்தின் கீழ் சுஜித், பாலாஜி குமார், பாரதி குமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து “டெக்சாஸ் டைகர்” படத்தையும் தயாரிக்கின்றனர். படக்குழு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்டுகள் விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக வெளியாகும...
CLOSE
CLOSE