Friday, November 27

Blog

டிசம்பர் 8ஆம் தேதி நிவின் பாலியின்  ‘ரிச்சி’

டிசம்பர் 8ஆம் தேதி நிவின் பாலியின் ‘ரிச்சி’

News
நிலையாக ,உறுதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் படம், நிவின் பாலி, 'நட்டி' நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ், ராஜ் பரத் மற்றும் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி நடிப்பில், கவுதம் ராமசந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ரிச்சி'. இது நிவின் பாலியின் முதல் நேரடி தமிழ் படமாகும். இப்படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. 'விக்ரம் வேதா', 'அவள்', 'அறம்' போன்ற அசத்தலான படங்களை பெரிய அளவில் ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றி கண்ட 'Trident Arts' ரவீந்திரன் 'ரிச்சி' படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்கிறார். 'ரிச்சி' குறித்து இப்படத்தின் இயக்குனர் கவுதம் ராமசந்திரன் பேசுகையில், '' நிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். தமிழ் சினிமா ரசிகர்களிடையே அவருக்கு இருக்கும் வரவேற்பு இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. தன் சொந்த குரலிலேயே டப்பிங் செய்து, கதைக்கு தே...
திரைப்படங்களுக்கு உயிர் கொடுப்பது பின்னணி இசை – இசையமைப்பாளர் ஜிப்ரான்.

திரைப்படங்களுக்கு உயிர் கொடுப்பது பின்னணி இசை – இசையமைப்பாளர் ஜிப்ரான்.

News
ஒரு நல்ல இசையமைப்பாளரின் தனித்தன்மை என்பது படத்தின் கதைக்கு சில அம்சங்களை சேர்த்து இசையமைப்பது மட்டுமல்ல, அதற்கு உயிர் கொடுப்பதும் தான். திரைப்படங்களுக்கு இசையின் மூலம் உயிர் கொடுப்பது என்பது ஒரு கலை, அந்த கலையில் வல்லுனராக உருவாகி வருபவர் தான் இசையமைப்பாளர் ஜிப்ரான். அவரது பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையும் அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. அவரது இசையின் மூலமான கதை சொல்லலில் படத்துக்கு உயிர் கொடுத்து,  ரசிகர்களுக்கு நல்ல, மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அவரின் 'அறம்', தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் திரைப்படமாகவும், நல்ல இசையாகவும் சிறப்பானவையாக அமைந்தவை. "எந்தவொரு நல்ல திரைப்படத்திலும் உயிர் இருக்கிறது, அதை என் இசையின் மூலம் வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை. இயக்குனரின் தெளிவான சிந்தனை, சிறப்பான திரைக்கதை, திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள...
தமிழ் படத்தின்  நாயகியாக  சன்னி லியோன்

தமிழ் படத்தின்  நாயகியாக சன்னி லியோன்

News
உலகம் முழுவதும் பிரபலமான ஒரு புகழ்பெற்ற பிரபலம் தான் சன்னி லியோன். பல ஆங்கில படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தொடர்ச்சியாக பல இந்தி படங்களில் நடித்து வந்த அவர், முதன் முறையாக ஒரு நேரடி தமிழ் படத்தின்  நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபல கமெர்சியல் பட இயக்குனர் வி சி வடிவுடையான் இந்த படத்தை இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் தன்னுடைய முதல் படமாக இதை தயாரிக்க இருக்கிறார் பொன்ஸ் ஸ்டீஃபன். இன்னும் தலைப்பிடப்படாத இந்த படம், மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாகும். சன்னி லியோன் அவரின் அடையாளமாக இருக்கும் கிளாமர் ரூட்டில் இனி பயணிப்பதில்லை என்ற தைரியமான முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சரித்திர படத்தில் நடிக்க கத்திசண்டை, குதிரையேற்றம் மற்றும் மற்ற சண்டைக் கலைகளையும் கற்று வருகிறார் சன்னி லிய...
சொன்ன பட்ஜெட்டில் 20 சதவீதம் மிச்சப்படுத்திய கபாலி செல்வா

சொன்ன பட்ஜெட்டில் 20 சதவீதம் மிச்சப்படுத்திய கபாலி செல்வா

News
ஜியோஸ்டார்  நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் 12 12 1950. டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை கபாலி செல்வா மற்றும் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். வா மச்சானே, டசக்கு டசக்கு போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை தொடர்ந்து இந்த 12 12 1950 படத்தில் 3 பாடல்களை எழுதியிருக்கிறேன். செல்வா சார் படம் இயக்குகிறார் என்று கேள்விப்பட்டவுடனே அந்த படத்தில் நான் பாடல் எழுதணும் என ஆசைப்பட்டேன். அவரை சந்தித்து வாய்ப்பை பெற்றேன். ரஜினி என்ட்ரி ஆகும் போது எப்படி கைதட்டி படத்தை ரசிப்பார்களோ, அந்த மாதிரி இந்த படத்தையும் ரசிகர்கள்  ரசிப்பார்கள் என்றார் பாடலாசிரியர் முத்தமிழ். செல்வா சாருடன் மோ என்ற படத்தில் எனக்கு நட்பு ஏற்பட்டது. அப்போது தான் இந்த படத்தின் கதையை சொல்லி...
ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசு ‘வேலைக்காரன்’ – சிவகார்த்திகேயன்

ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசு ‘வேலைக்காரன்’ – சிவகார்த்திகேயன்

News
24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன்'. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயனின் அப்பா இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதை ஆர் டி ராஜா செய்து வருகிறார். ஒரு பிரமாண்ட படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும் அவர் சாப்பிடுவது சாதாரண சுந்தரி அக்கா கடையில் தான். உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் தங்கக் காசு கொடுத்த இந்த உள்ளத்துக்கு நன்றி. மொழிமாற்று படம் தான் எடுப்பார் ராஜா என பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தனி ஒருவன் என்ற படத்தை கொடுத்து மிரட்டியவர் ராஜா. ராஜாவும், ராஜாவும் சேர்ந்து மக்கள் செல்வனாக இருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு உன்னத படத்தை கொடுத்திருக்கிறார்கள் என்ற...
RK நகர் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தார் நடிகர் விஷால் !

RK நகர் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தார் நடிகர் விஷால் !

News
  நடிகர் விஷால் இன்று காலை 7:30 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு வீட்டிலிருந்து நடந்தே சென்று அம்பாளை தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி T- நகரில் அமைந்துள்ள முன்னால் முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய இல்லத்திற்கு சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அங்கிருந்து கிளம்பி ராமாவரத்தில் அமைந்துள்ள முன்னால் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய சிலைக்கு சுமார் 8:30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து அடையாறில் அமைந்துள்ள செவாலியர் சிவாஜியின் மணிமண்டபத்திலுள்ள நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுடைய சிலைக்கு 10.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னால் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர...
CLOSE
CLOSE