Friday, November 27

Blog

இசையமைப்பாளர் ஆதித்தன் காலமானார்

இசையமைப்பாளர் ஆதித்தன் காலமானார்

News
நடிகர் கார்த்திக் நடித்த,மக்கள் மனதில் இடம்பிடித்த நீங்கா இடம்பிடித்த சூப்பர் டுப்பர் ஹிட் பாடல்களான  " அமரன் " படத்திற்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63). இவர் சிறுநீரக கோளாறு  காரணமாக  ஹைதராபாத்தில் ஒருவாரமாக சிகிச்சைபெற்றுவந்தார், நேற்று மதியம்                11-மணியளவில்  சிகிச்சை பலனின்றி  காலமானார். இவரது உடல் நாளை  ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு எடுத்துவரப்படும் .நாளை மதியம் இறுதி சடங்கு நடைபெறும் .     "அமரனை" தொடர்ந்து நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், அசுரன், மாமன் மகள், சூப்பர் குடும்பம் கடைசியாக  கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.இவரது இயற்பெயர் டைடஸ் ( Titus ) ,                                                                மனைவியின் பெயர் ஷோபியா ( Sofiya )...
விநியோகஸ்தர் சங்க தேர்தல்: ஞானவேல்ராஜா தலைமையில் புதிய அணி :

விநியோகஸ்தர் சங்க தேர்தல்: ஞானவேல்ராஜா தலைமையில் புதிய அணி :

News
டிசம்பர் 24 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் சென்னை -காஞ்சிபுரம் - திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தயாரிப்பாளரும் விநியோகதஸ்ருமான ஞானவேல்ராஜா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது. இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பில் ஞானவேல் ராஜா பேசியதாவது.. . கடந்த எட்டு மாத காலத்தில் விஷால் தலைமையிலான நம்ம அணியினர் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட எழுபது சத வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். ஒன்பது ஆண்டு காலமாக வராத சிறிய திரைப்படங்களுக்கான தமிழக அரசு வழங்கும் மானியத் தொகையை உறுப்பினர்களுக்குப் பெற்று தந்திருக்கிறோம். நாங்கள் வெற்றிப்பெற்று வந்த ஐந்தரை மாத காலத்திற்குள் ஒன்பது ஆண்டு காலமாக வராதிருந்த அரசின் மானியத் தொகை அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி பெற்றுக் கொடுத்திருக்கிறோம். அறுபது வயதிற்கு மேற்பட்ட ...

  ‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பெற்ற விஜய் டிவி

News
ஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்பே ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல் வாங்குவது அப்படத்தின் வர்த்தக பலத்தையும் அப்படத்திற்கு மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பையும் குறிக்கும். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும்  'நிமிர்' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து விஜய் டிவி பெற்றுள்ளது. இந்த படத்தின் வர்த்தக பலத்தை இது மேலும் நிருபித்துள்ளது. சுவாரஸ்யமான, ஜனரஞ்சகமான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒரு முழு நீள குடும்ப படம் 'நிமிர்'. இப்படத்தை சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ளார். இது குறித்து விஜய் டிவியின் ' பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பேசுகை...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (நன்றி) அறிக்கை – 5.12.17

Uncategorized
தமிழ் திரையுலக்கிற்கு பலவித நன்மைகளை செய்து வரும் தமிழக அரசு மேலும் ஒரு பேருதவியை செய்திருக்கிறமைக்கு தமிழ் திரையுலகின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கடந்த மாதம் எங்களது தமிழ் திரையுலகில் உள்ள அத்தனை அமைப்புகளும் தலைவர் திரு.விஷால் அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தோம். அதில், திரையரங்க நுழைவு கட்டனத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்குதல். திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை முறைப்படுத்துதல் அடங்கிய மனுவினை அளித்தோம். மனு அளித்த உடனே தமிழக அரசு திரையரங்கு நுழைவு கட்டனத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்கியது. தற்போது எங்களது மற்றொரு கோரிக்கையான திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டண வசதியை முறைப்படுத்தி (corporation municipality special grade - car-rs.20, bike-rs.10, Municipalities car-rs.15, bike-rs.7, village panchayat car-rs.5, b...

நடிகர் விஷால் அறிக்கை – 5.12.17

News
இயக்குநர் சேரன் அவர்கள் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத் தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தை பழி வாங்கும் என்பது ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத் தான் பார்க்கிறேன். சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது.  எப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சிக் கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பி பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படி தான் செயல்படுகிறேன். ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதும் அப்படி மக்களின் சா...
முனி 4 காஞ்சனா 3 படப்பிடிப்பு தளத்தில் ராகவா லாரன்ஸுடன் ஓவியா

முனி 4 காஞ்சனா 3 படப்பிடிப்பு தளத்தில் ராகவா லாரன்ஸுடன் ஓவியா

News
முனி 4 காஞ்சனா 3 படப்பிடிப்பு தளத்தில் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நேற்றிரவு பங்கேற்ற காட்சி இது.. தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது
ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்

ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்

News
கைபா பிலிம்ஸ் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” என்ற தனது முதல் ஹாலிவுட்  திரைப்படத்தை அறிமுகபடுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. தொன்றுதொட்டே தமிழனுக்கும் கலைக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. நம் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்க்கும் வகையில், கைபா பிலிம்சின் மூலம் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரையுலகின் மாவீரனாக அழைக்கப்படும் நெப்போலியன் இத்திரைப்படத்தின் மூலம் அமெரிக்க திரையுலகிற்கு அறிமுகமாகிறார். எதிர்நாயகனாக தனது திரைப்பயணத்தைத் துவங்கி,  நூற்றுக்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கதாநாயகனாக உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது தளராத முயற்சியால் அரசியலிலும் களம் கண்டு, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அரசின் சமூகநீதி துறை ...
CLOSE
CLOSE