வையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து இயக்குகின்ற படம் ‘எழுமின்’.
‘சின்ன கலைவாணர்’ விவேக் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே ஆரம்பமானது.
இப்படத்தின் இயக்குநர் சமீபத்தில் வெளியான 'உரு' திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது....
"சத்யா" திரைப்படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் சத்யராஜ் பேசியது :- நான் பாகுபலி படத்தின் படபிடிப்பில் இருந்த போது சிபி என்னை தொடர்பு கொண்டு ஷணம் படத்தை பற்றி விசாரிக்கும் படி கூறினார். நான் பிரபாஸிடம் ஷணம் படத்தை பற்றி கேட்டேன். என்னிடம் அவர் “ ஷணம் “ நல்ல படம் எதற்காக கேட்குக்றீங்க என்றார். அதற்கு நான் என் மகன் சிபிராஜ் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கலாமா என்று கேட்கிறார் என்றேன். ஷணம் தரமான படம் கண்டிப்பாக வாங்கலாம் என்று சிபிராஜ் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன் பின் தான் நாங்கள் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி படத்தை ஆரம்பித்தோம். நா...
காமராஜ் திரைப்படத்தைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு எம்.ஜி.ஆர் என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
படப்பிடிப்பிற்கான அரங்கம் அமைப்பதற்காக பாலக்காடு அருகே உள்ள வடவனூரில் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீட்டை படப்பிடிப்புக் குழுவினர் பார்வையிட்டனர். தற்போது அந்த வீடு அங்கன்வாடியாகச் செயல்படுகிறது. படப்பிடிப்புக் குழுவினர் அங்குள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்து இனிப்புகள் வழங்கினர்.
பின்பு பாலக்காடு அருகிலுள்ள குழல்மந்தம் எனும் ஊரில் உள்ள எம்.ஜி.ஆரின் மனைவியார் சதானந்தவதி அம்மையாரின் பூர்வீக வீட்டையும் அதன் அருகே தனது மனைவிக்காக எம்.ஜி.ஆர் கட்டியுள்ள வீட்டையும் பார்வையிட்டனர். அந்த வீட்டில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அனேக பொருட்களை இன்றுவரை அவரது உறவினர்கள் பத்திரமாகப் பாதுகாத்து வருகின்றனர்.
அப்பகுதி...
சுவாரஸ்யமான , பெரிய நடிகர்களை ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்வது பேச்சு வாக்கில் மட்டுமே சுலபமான காரியம் . அதனை செயல் படுத்துவது அவ்வளவு கடினமாகும். ஆனால் இந்த கலையை நன்கு அறிந்த வல்லுநர் 'Cameo Films' C J ஜெயக்குமார் அவர்கள் . அவரது தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தினை அஜய் ஞானமுத்து இயக்குகின்றார். இப்படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக, ஒரு கவுரவ தோற்ற கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி - நயன்தாரா ஜோடி ஏற்கனவே 'நானும் ரவுடி தான்' படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் ஜோடியானது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடியின் மேஜிக் இப்படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'இமைக்கா நொடிகள்' படத்திற்காக விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பை இன்...