Friday, November 27

Blog

2nd IDF National DARTS Championship 2017

2nd IDF National DARTS Championship 2017

News
2 வது நேஷனல் டார்ட்ஸ் (National DARTS Championship 2017)சாம்பியன்ஷிப் தொடக்க விழா இன்று தொடங்கியது .தொழிலதிபர் ரூஸ்வெல்ட் தொடங்கி வைத்தார் .டார்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் வேணு பிள்ளை உடனிருந்தார் .இவ்விழா மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் இன்று காலையில் தொடங்கப்பட்டது .
படத்தொகுப்பாளராக மாறிய விஜய் ஆண்டனி

படத்தொகுப்பாளராக மாறிய விஜய் ஆண்டனி

News
நல்ல கதையும், அதற்கான சரியான விளம்பர யுக்திகளும் தான் சினிமாவில் வெற்றியை பெற்று தரும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இதனை நன்கு உணர்ந்து, தீவிரமாக கடைபிடிக்கும் ஒருவர் விஜய் ஆண்டனி. ஒரு இசையமைப்பாளர் மற்றும் நடிகராக மட்டும் இல்லாமல் அவர் தனது 'அண்ணாதுரை' படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராகவும் மாறியுள்ளார். தனது சினிமா பயணத்தை சிறுக சிறுக அழகாக  செதுக்கி வெற்றியை சுவைத்துக்கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. தனது அசுர தன்னம்பிக்கையாலும் , கடும் உழைப்பினாலும் இந்த இடத்தை அடைந்திருப்பவர் அவர். அவரது அண்ணாதுரை பெரிய எதிர்பார்ப்புடன்  வெளி வருகிறது. இப்படம் குறித்து விஜய் ஆண்டனி பேசுகையில், '' இந்த தலைப்பு இப்படத்திற்கு கிடைத்ததில் எனக்கு மிகவும் பெருமை. கதை தான் என்றுமே  கதாநாயகன் என்பதை உறுதியாக நம்புபவன் நான். இயக்குனர் ஸ்ரீனிவாசன் இப்பட கதையை என்னிடம் கூறியபொழுது, மிகவும் பிடித்து போய் இதில் நட...
ட்ரிப்பி டர்ட்டில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த ‘செய்’

ட்ரிப்பி டர்ட்டில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த ‘செய்’

News
முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் அதிக எண்ணிக்கையிலான ஸ்கிரீன்களில் வெளியாவதால் சிறிய படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று ‘செய் ’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சக்திவேலன் குறிப்பிட்டார். ட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில் மன்னு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இவ்விழாவில் தயாரிப்பாளர் மன்னு, திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ராஜேஷ் கே ராமன், இயக்குநர் ராஜ்பாபு, இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ், ஒளிபபதிவாளர் விஜய் உலகநாத், படத்தொகுப்பாளர் கோபி...
400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது  அண்ணாதுரை

400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது அண்ணாதுரை

News
ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்து விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்பே படத்தை நாங்கள் பார்த்து விட்டோம், சிறப்பாக வந்திருக்கிறது. விஜய் ஆண்டனி படம்  முதன்முறையாக 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. படத்தை பற்றிய நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன என்றார் அலெக்ஸாண்டர். இசை வெளியீட்டு விழாவில் ஒரு 1000 பேருக்கு மேல் இருந்த கூட்டத்தில் என்னால் பேசவே முடியவில்லை. பெரிய படம், சின்ன படம் என எல்லா படங்களுக்கும் எல்லோரும் ஒரே மாதிரி கடின உழைப்பை தான் கொடுக்கிறோம்.  இயக்குனர் சேரனின் பொற்காலம் படம் பார்த்து ...
பெரும் வரவேற்பை பெற்ற  ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.

பெரும் வரவேற்பை பெற்ற ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.

News
சமீபத்தில் ரிலீசான இப்படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்யாசமான கதையும், அது சொல்லப்பட்ட  விதமும் , நடிகர்களின் அற்புதமான நடிப்புமே இந்த பெரிய வரவேற்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தரமான படங்களை வாங்கி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யும் 'Clap Board Productions' 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தமிழக  திரையரங்க உரிமையை பெற்றுள்ளது. ஒரு ரசிகனின் பாராட்டு claps மூலமே வெளிப்படும். அந்த claps,  படம் வாங்கும் நிறுவனத்தின் பெயரிலே இருப்பது குறிப்பிடத்தக்கத்து.  இப்படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதிபதியின் புகழ் , கவுதம் கார்த்திக்கின் ஆற்றல் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் திறன் இப்படத்தை சிறப்பாகியுள்ளது எனக்கூறப்படுகிறது. '' எங்களுக்கு இந்த வளர்ச்சி சந்தோஷமளிக்கிறது . 2018 ஆம் ஆண்டை தமிழ் சினிமா ரசிகர்கள் ...
“அண்ணா துரை”  கதாநாயகி டயானா சம்பிகா

“அண்ணா துரை” கதாநாயகி டயானா சம்பிகா

News
வருகின்ற 30 ஆம் தேதி வெளி வர இருக்கும் "அண்ணா துரை" தலைப்பில் துவங்கி , எல்லா அம்சங்களும் மக்களின் எதிர்பார்ப்பை கூட்டும் படமாகவே இருந்து வருகிறது. இந்தப் படத்தில் இடம் பெறும் ஜி எஸ் டி பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலாக இருக்கிறது. அந்த பாடலின் காணொளியை கண்டவர்கள் கதாநாயகி டயானா சம்பிகாவின் அழகை பற்றியும் திறமையை பற்றியும் நிறையவே பேசி வருகின்றனர்.சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் (லயோலா)படித்து வரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிட தக்கது. தொடர்ச்சியாக கதாநாயகர்களை வழங்கி கொண்டு இருக்கும் அந்த கல்லூரியில் இருந்து வரும் முதல் கதாநாயகி டயானா என்பதுக் குறிப்பிடத்தக்கது. ஒரு விளம்பர மாடலாக பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வந்த இவர் "அண்ணாதுரை" படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பாத்திமா விஜய் ஆண்டனியை சந்திக்க நேர்ந்தது. பிறகு ஆடிஷன் மூலம் க...
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் ஹாரர் த்ரில்லர் ‘மம்மி’..!

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் ஹாரர் த்ரில்லர் ‘மம்மி’..!

News
தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரிக்கும் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் ஜேஎஸ்கே எனும் ஜே.சதீஷ்குமார். தற்போது இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’. இருபது வயதான இளைஞர் லோஹித் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் இந்தப்படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், விக்ரம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு ரீ என்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகளாக பேபி யுவினா நடிக்கிறார். பா.விஜய்யின் பட்டர்பிளை, அஜித்தின் வீரம் என பல படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் அதிகமான விளம்பரங்களிலும் நடித்தவர் தான் பேபி யுவினா. இவர்களுடன் கிறிஸ்துவ பாதிரியாராக முக்கிய கேரக்டரில் ‘கோலிசோடா’ மதுசூதனன் நடித்துள்ளார். ...
CBL- Chennai Rockers Team

CBL- Chennai Rockers Team

News
இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் விளையாட்டாகவும், விளையாட்டு செய்திகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் விளையாட்டாகவும் இருக்கிறது பேட்மிண்டன். இந்த விளையாட்டை விரும்பும் மக்கள் அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. திரைத்துறை பிரபலங்கள் மத்தியிலும் செலிபிரிட்டி பேட்மிண்டன் விளையாட்டு பிரபலமாகி, தற்போது அவர்களுக்காகவே பிரத்தியேகமாக celebrity பேட்மிண்டன் league  உருவாகி இன்று மிகவும் பிரசித்தி பெற்று இருக்கிறது.  இந்த celebrity பேட்மிண்டன்  league நிறுவனர் பிராண்ட் அவதார் நிறுவனத்தின் தலைமை அதிகாரி,  ஹேமச்சந்திரன்.மிகப்பெரிய அளவில் கடந்த ஆண்டு துவங்கிய இந்த பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசன் வரும் பிப்ரவரி மாதம் துவங்க இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. தென்னிந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் நடைபெறும்....
CLOSE
CLOSE