Blog
‘அண்ணாதுரை’ படத்தை பற்றி பாடலாசிரியர் அருண் பாரதி
விஜய் ஆண்டனியின் படங்களில் ஒவ்வொரு பாடலுக்கும் முக்கியத்துவம் இருக்கும். கதை சொல்லவும் ,அதனை மேலும் வேகமாக நகர்த்த பாடல்களை உபயோகப்படுத்துபவர் அவர். அவரது அடுத்த ரிலீசான 'அண்ணாதுரை' படத்தின் 'தங்கமா வைரமா' பாடலின் டியூனும் , மனதில் எளிதாக ஒட்டிக்கொள்ளும் பாடல் வரிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. இது கதாநாயகனின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் வரிகளை கொண்டுள்ள பாடலாகும். படத்தின் சாராம்சத்தையும், கதாநாயகனின் கதாபாத்திரத்தையும் தெளிவாக வெளிப்படுத்தும் பாடலாக இது அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை கேட்டாலே மனதில் ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு இப்பாடல் வரிகள் அமைந்துள்ளன. பாடலாசிரியர் அருண் பாரதி இப்பாடலிற்காக பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். 'அண்ணாதுரை' வரும் நவம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இப்பட இயக்குனர் ஸ்ரீனிவாசனும், கதாநாயகன் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் பாடலாசிரி...
Eshan Productions Production No.2
Eshan Productions
Production No.2
Vishnu Vishal, Nivetha Pethuraj,Yogi Babu, Mottai Rajendran & others
Producers: Abirami Dusshyanth & R.G.Dusshyanth
Screenplay & Direction: Ezhil
Music: D.Imman
Cinematography: K.G.Venkatesh Story : E Murugan Dialogues T.Jothi Arunachalam. Regards diamond Babu sir
நிவின் பாலியின் படப்பிடிப்பு தளத்திற்கு ‘சர்ப்ரைஸ் விசிட்’ அடித்த சூர்யா, ஜோதிகா
தென்னிந்தியாவின் இளம் ஹீரோக்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் நிவின் பாலி. மொழி எல்லைகளை தாண்டி அவரது ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது அனைவரும் அறிந்ததே. அவரது அடுத்த படமான 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தை '36 வயதினிலே' புகழ் ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். 'பீரியாடிக் ஆக்ஷன்' படமான இந்த படத்தை பெரும் பொருட்செலவில் 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக திரு. கோகுலம் கோபாலன் தயாரிக்கின்றார்.
மலையாள சினிமா வரலாற்றில் மிக அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்படும் படம் இது தான் என கூறப்படுகிறது. இந்த படம் பிற மொழி ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. முதல் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே இப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த இரண்டு மாத காலமாக மங்களூரில் இப்படத்தின் படப்பிடிப்பு இடை விடாமல் நடந்து வருகின்றது. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் பிரம்மாண்...
தலைப்புக்கேற்ற வகையில் பவர்ஃபுல் படம் அண்ணாதுரை
ஒரு இயக்குனருக்கு வணிக ரீதியிலான முன்னணி நடிகர், சிறந்த நடிகர்கள் மற்றும் சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்கள், அதுவும் அவரது முதல் திரைப்படத்திலேயே அமைந்து விட்டால் அந்த படத்தின் கதையையும், இயக்குனரின் திறமையையும் அது பறை சாற்றும்.
விஜய் ஆண்டனி நடிக்க, ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் 'அண்ணாதுரை', வரும் நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
படம் வெளியாக இருப்பது எனக்கு உற்சாகமாகவும், அதே சமயத்தில் பதட்டமாகவும் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு கலவையான உணர்வுக்காக தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். சினிமா கலையின் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த கதையை எனது முதல் படமாக இயக்கியதை நான் பெருமையாக நினைக்கிறேன். சினிமா கலையை கற்றுக் கொள்ள பல்வேறு இயக்குன...
கல்லூரி மாணவர்களின் கலகலப்பை கமர்ஷியலாக சொல்லும் ‘சரமாரி’. .!
நெல்லை ஜீவா தயாரிப்பில் கமல்.ஜி என்பவரது டைரக்சனில் உருவாகிவரும் படம் தான் ‘சரமாரி’. நெல்லையில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு ‘மாஸ்’ கலர்ந்த கமர்ஷியல் படமாக பரபரப்பாக உருவாகி வருகிறது இந்த ‘சரமாரி’.
அறிவழகன், ஜெயபிரகாஷ், ஆகாஷ், மனோஜ் என நான்கு பேர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகியாக ஹேமலதா நடிக்கிறார். இவர் பாயும்புலி, அறம்சினம், வேலைக்காரன் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், பாம்பே செல்வம், சுஜாதா மற்றும் தயாரிப்பாளர் நெல்லை ஜீவாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப்படத்திற்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரஷாந்த் அர்வின் இசையமைக்கிறார். பாடல்களை சஞ்சய் செல்வம் எழுதியுள்ளார் ஒருங்கிணைப்பு பணிகளை பாம்பே செல்வம் கவனிக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, பொள்ளாச்சி, திருச்சி ...
தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “
இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி,நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன்,பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் - செந்தில் / ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ்
இசை - அம்ரீஷ் / பாடல்கள் - விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத் ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன் / எடிட்டிங் - எலீசா
கலை - நித்யானந் /நடனம் - ராபர்ட்
தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சங்கர் ...




