Friday, November 27

Blog

நிவின் பாலி, நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில்  ‘ரிச்சி’

நிவின் பாலி, நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் ‘ரிச்சி’

News
எஸ் சினிமா சார்பில் ஆனந்த் பையனூர், வினோத் ஷொர்னூர் தயாரிப்பில் நிவின் பாலி, நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரிச்சி'. கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைத்துள்ளார். டிசம்பர் 8ஆம் தேதி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் பிரமாண்டமாக வெளியிடும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவை ஜிகே ரெட்டி, நிவின் பாலி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கௌதம் ராமச்சந்திரன், ஆனந்த் பையனூர், லக்‌ஷ்மி பிரியா ஆகியோர் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தனர். விழாவில் "நிவினை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை எல்லோருக்கும் நிவின் பாலியை பிடிக்கும். நிவினை பார்க்கும் போது இளம் வயது மோகன்லாலை பார்ப்பது போல் இருக்கிறது. வழக்கறிஞராக இருந்த கௌதம் இந்த படத்தை மிகச்சிறப்பாக உருவா...

அஜித் குமார் நடிக்க, சிவா இயக்கும் “விசுவாசம்”

News
பாரம்பரிய பட நிறுவனமான சத்ய ஜோதி films சார்பில் தயாரிப்பாளர் டி தியாகராஜன்,   தங்களது அடுத்த தயாரிப்பை தலைப்புடன் அறிவித்தார். அஜித் குமார் நடிக்க, சிவா இயக்கும் இந்த படத்துக்கு "விசுவாசம்"  என்று தலைப்பிட பட்டு இருக்கிறது. ஜனவரி மாதம் "விசுவாசம்" படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2018 தீபாவளி அன்று "விசுவாசம்" வெளி வரும் என தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அறிவித்தார்....
‘அறம்’ குறித்து அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்

‘அறம்’ குறித்து அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்

News
எந்த ஒரு தரமான கதையையும் மேலும் மெருகேத்தி அதன் தீவிரத்தை கூட்டுவதற்கு அக்கதையை படமாக்கும் விதமும் , உபயோகப்படுத்தப்படும் ஒளிப்பதிவு நுட்பங்களும் முக்கியமான பங்கு வகிக்கும். மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் என எல்லா தரப்பினரிடையும் பேராதரவு பெற்றுள்ள 'அறம்' படத்தின் எல்லா தொழில்நுட்ப  அம்சங்களும் பாராட்டுக்களை பெற்று வருகின்றன. இப்படத்தில்  ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவை பாராட்டாதவர்களே இல்லை என்று கூட சொல்லலாம். இப்படத்தை கொட்டப்படி J ராஜேஷ் தயாரித்துள்ளார். 'அறம்' குறித்து அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பேசுகையில் , '' எனது சினிமா வாழ்க்கையில் சிறந்த படங்களில் ஒன்று 'அறம்'. இப்படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே, அழிந்து வரும் நமது   பூமியின் அவல நிலையை சித்தரிக்க ' க்ரே ' கலரை பயன்படுத்தி , அதற்கான லைட்டிங்கை கொடுத்து, சில ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என ம...
டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் அமல்கம் இசை ஆல்பத்தை வெளியிட்ட இசைப்புயல் ஏஆர் ரகுமான்

டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் அமல்கம் இசை ஆல்பத்தை வெளியிட்ட இசைப்புயல் ஏஆர் ரகுமான்

News
கர்நாடக இசை மாமேதை, பத்மவிபூஷன் செவாலியர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் 'அமல்கம்' என்ற ஃபியூஷன் இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். நவீன, சமகால இசை பாணியில் அவரே இசை அமைத்து பாடிய இந்த ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள் இருந்தன, அவற்றை சரிகம நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தற்செயலாக இதுவே மாமேதை வக்கேயகரா அவர்கள் கடைசியாக ரெக்கார்டு செய்த ஆல்பமாகவும் அமைந்துள்ளது. ஷ்யாம் ரவிஷங்கர், நிகில் என இரண்டு இளம் இசைக் கலைஞர்கள் இந்த ஆல்பத்திற்கான பின்னணி இசைக் கோர்ப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். 21 வயதான ஷ்யாம், பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவன் மட்டுமல்லாது 650 இசை நிகழ்ச்சிகளில் வாசித்த முழுமையான ஒரு இசைக்கலைஞன். 24 வயது இளைஞரான நிகில் கேஎம் இசைக்கல்லூரி மற்றும் பெர்க்லீ இசைக்கல்லூரியில் பயின்ற ஒரு திறமையான இசை அமைப்பாளர். 30க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கும், பல்வேறு விளம்பர படங்க...
சிறந்த  பாடகியாக வேண்டும் – பிண்ணனி பாடகி நமீதா பாபு

சிறந்த  பாடகியாக வேண்டும் – பிண்ணனி பாடகி நமீதா பாபு

News
ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான பாடகர்கள் அறிமுகமாகும் தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பது எந்த ஒரு இளம்  பிண்ணனி  பாடகருக்கு சவாலான காரியமே. தமிழ் சினிமாவின் அடுத்த சிறந்த  பாடகியாக வேண்டும் என்ற கனவோடும் , அதற்கான திறமையோடும் இருக்கும்  நமீதா பாபுவின் பிண்ணனி பாடகி வாழ்க்கைக்கு ஒரு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. 'சண்டி வீரன் ' படத்தில் 'அலுங்குறேன் குலுங்குறேன்'  பாடல் மூலம் ஹிட் கொடுத்து  தனது பயணத்தை தொடங்கியவர் நமீதா பாபு. இது குறித்து நமீதா பாபு பேசுகையில் , '' எனது  பாடகி வாழ்க்கைக்கு கிடைத்திருக்கும் துவக்கம் மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளது. 'சண்டிவீரன்' படத்தில் அழகான பாடலோடு  ஆரம்பித்த எனது பயணம் 'திருநாள்' படத்தில் வெற்றிகரமாக தொடர்ந்தது. பிறகு 'மகளிர் மட்டும்' படத்தில் ஜிப்ரான் அவர்கள் இரண்டு முத்தான பாடல்களை எனக்கு தந்து எனக்கு பல பாராட்டுக்களையும் வாழ்த்துக...
CLOSE
CLOSE