Friday, November 27

Blog

கமலுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து

கமலுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து

News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலரான நடிகர் கமல்ஹாசனின்   பிறந்தநாள் இன்று சென்னையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .நடிகர் சங்கம் சார்பாக பொருளாளர் SI.கார்த்தி,அறங்காவலர் ஐசரி கணேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமன்,கோவை சரளா,பிரேம் மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்களான லலிதா குமாரி,அஜய் ரத்தினம் பொதுமேலாளர் பாலமுருகன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினார்கள்...
இந்த காலகட்டத்துக்கு தேவையான மிகவும் முக்கியமான படம்  அறம்

இந்த காலகட்டத்துக்கு தேவையான மிகவும் முக்கியமான படம் அறம்

News
KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ்  தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முன்னதாக நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இந்த படம் சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக பார்த்த என்னை சினிமாவில் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கோபி. நடிகர் நாகேஷ் கூட முதல் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் தான் நடித்தார், நீங்க நல்ல வருவீங்க என்று சொன்னார் இயக்குனர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பெரிய ரசிகன், அவருடன் நடித்த...
படதுவக்கவிழாவை பயனளிக்கும் நிகழ்வாக மாற்றிய நடிகர் ஆரி !

படதுவக்கவிழாவை பயனளிக்கும் நிகழ்வாக மாற்றிய நடிகர் ஆரி !

News
வலம்புரி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராஜ சேகர்.S  தயாரிக்கும் மௌனவலை திரைப்படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கதாநயாகன் ஆரி , இயக்குநர் பெஸ்ட் ராபர்ட் , தயாரிப்பாளர் ராஜசேகர் , கதாநாயகி ஸ்ம்ருதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் ஜாகுவார் தங்கம் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்பித்தார். வழக்கமாக நடைபெறும் பட பூஜை மற்றும் துவக்க விழா போல் இல்லாமல் “ மௌனவலை “ திரைப்படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா தனித்துவமாகவும் நாம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமைந்தது. விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வழக்கமான உணவு வழங்கப்படாமல் organic உணவு வழங்கப்பட்டது. உணவே மருந்து என்பதற்கு ஏற்றவாறு வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்ககூடிய உணவு வழங்கப்பட்டது அதன் பின்னர் அவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக சில...
நெஞ்சில் துணிவிருந்தால்  எனக்கு திருப்பு முனையாக இருக்கும் – விக்ராந்த்

நெஞ்சில் துணிவிருந்தால் எனக்கு திருப்பு முனையாக இருக்கும் – விக்ராந்த்

News
‘நெஞ்சில் துணிவிருந்தால்’ சுசீந்திரன் சார் படத்தில் ‘பாண்டிய நாட்டிற்கு பிறகு எனக்கு நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. சந்திப், சூரி அண்ணன், ஹரிஷ் உத்தமன் போன்ற மொத்த குழுவுடன் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த சந்தோஷம். இது சமூக அக்கறை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாக கொண்ட படம். ‘பாண்டிய நாடு’ எனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம். அதுபோல் அனைவருக்கும் இந்த படத்தில் அழுத்தமான உணர்சிப்புர்வமான கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. அவரவருக்கு ஏற்ற அழுத்தமான கதாப்பாத்திரத்தை அமைத்து உள்ளார் இயக்குநர். சுசீந்திரன் சார் பாண்டிய நாட்டிற்கு பிறகு என்னை அழைத்தார் நான் சென்றேன் அவர் கூறியது போல் நடித்தேன். சுசீந்திரன் சாரை பொறுத்த வரை சொல்லவே வேண்டாம் எனக்கு ‘பாண்டிய நாடு’ ஒரு முகவரி அளித்தது. அதுபோல் அவர் என்னை திருப்பி அழைத்ததே மிகுந்த சந்தோஷம். அவர் என்னை மிகப்பெ...

விழாவிற்கு வாங்க.. பரிசுகளோடு போங்க!

News
‘நட்புனா என்னானு தெரியுமா’ வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவிற்கு வாங்க.. பரிசுகளோடு போங்க! லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’..   விஜய் டிவி புகழ் 'கவின்' நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். சிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா வரும் நவ-12ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள விஜயா போரம் மாலில் மாலை 5மணி அளவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் என்ன ஸ்பெஷல் என்றால் ரசிகர்களும் இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ளலாம். ‘நட்புனா என்னானு தெரியுமா’ படக்குழுவினருடன் சேர்ந்து அங்கு நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று பல அற்புதமான பரிசுகளையும் அள்ளிச்செல்லலாம்.. பரிசுப்பொருட்கள் விப...
தங்கப் பதக்கங்களை வென்ற ரம்யா

தங்கப் பதக்கங்களை வென்ற ரம்யா

News
ஒரு காரியத்தில் முழு மூச்சாக இறங்கி , உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இதற்கு சமீபத்தைய உதாரணம்  பிரபல V J ரம்யா சுப்ரமணியன். பிரபல V J, சமூக ஆர்வலர் என்ற பல முகங்கள் கொண்டுள்ள இவர் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருபவர். சமீபகாலமாக அவர் பவர் லிப்ட்டிங்கில் [ Power Lifting ] ஈடுபடுவதற்கு   பயிற்சி பெற்று வந்தார். பல மாதங்கள் பயிற்சிக்கு பிறகு சமீபத்த்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 'Dead Lifting' போட்டியில் பங்கேற்று இரண்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இது குறித்து ரம்யா பேசுகையில், '' கடந்த சில மாதங்கள் ஒரு மறக்க முடியாத பயணமாக இருந்துள்ளது. என்னால் இந்த 'Power Lifting' போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகங்கள் எனக்குள்  இருந்தன. ஆனால் கடும் பயிற்சியினாலும், உழைப்பாலும் இந்த பதக்கங்களை வென்றுள்ளேன். நான் வாழ்வில் எது செ...
ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மதிப்பளித்த சீயான்

ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மதிப்பளித்த சீயான்

News
சீயான் விக்ரம் அவர்களின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுகவின் தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் அவர்களின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது. புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கெவின் கேர் குழும ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு, ச ராமதாஸ், திமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திரு. எம் ஆர் கே பன்னீர் செல்வம், தி மு க வின் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற...
புது முகங்களை வைத்து இயக்கி வெற்றி அடையும் போதுதான் அந்த வெற்றி இயக்குநரை சேரும் – சுசீந்திரன்.

புது முகங்களை வைத்து இயக்கி வெற்றி அடையும் போதுதான் அந்த வெற்றி இயக்குநரை சேரும் – சுசீந்திரன்.

News
'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் சந்திப், விக்ராந்த்  ஹீரோவாகவும். மெஹரின்  ஹீரோயினாகவும் நடித்துள்ளார். இந்த படம் 'நான் மகான் அல்ல', 'பாண்டியநாடு' போன்ற படம். நட்பை மையப்படுத்தி சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ளது. இமான் அவர்களுடன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணைந்துவுள்ளோம். படத்தில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது.என்னுடன் எல்லா  படத்திலும் இருக்கும் சூரி இந்த படத்திலும் இருக்கிறார்.சூரிக்கு என்னுடன் இது ஏழாவது படம். இந்த படத்தில் சூரியின் பங்கு அதிகமாக இருக்கும். மிகவும் ஆச்சரியப்படுத்தும் நபர்களில் ஒருவர் சூரி.வெண்ணிலா கபடி குழுவுக்கு பின் லட்சுமணனுடன் மீண்டும் இணையும் படம். இந்த படத்தின் கலை இயக்குநராக சேகர் பணியாற்றியுள்ளார். நிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் வெற்றி படமாக அமையும். இந்த படம் என்னுடைய பாணியில் அமைந்ததாக இருக்கும். என்னுடைய அனைத்து படங்களிலும் சமூக நீதி இருக்கும். ராஜபாட்டை ...
CLOSE
CLOSE