Blog
காமெடி கலந்த திகில் படம் – “பேய் இருக்கா இல்லையா “
டீம் வொர்க் டாக்கீஸ் என்ற பட நிறுவனம் பா.ரஞ்சித்குமார் தயாரித்து இயக்கும் படத்திற்கு “ பேய் இருக்கா இல்லையா “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் அமர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஜோதிஷா நடிக்கிறார். மற்றும் விஜயகுமார் , லிவிங்ஸ்டன், தாடிபாலாஜி, மதன்பாப், பொன்னம்பலம், அனுமோகன், மதுமிதா, ரேகாசுரேஷ், சுரேஷ், சதா, பிந்துரோஷினி, கீர்த்தி கௌடா, பட்ஜெட் லோகநாதன், சுவாமிநாதன், கூழ்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - டி.மகிபாலன் / இசை மற்றும் பாடல்கள் - ஆர்.சம்பத்
கலை - ராஜு / நடனம் - ராபர்ட், சுரேஷ், ஆன்டோ
ஸ்டன்ட் - அமிதாப் / எடிட்டிங் - ஆர்.ஜி.ஆனந்த்
நிர்வாக தயாரிப்பு - ராஜேந்திரன் ...
குரு சோமசுந்தரம் – ரகுமான் நடிக்கும் “ கதாயுதம் “
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற “ ரம்மி “ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன்.K இயக்கும் அடுத்த படத்திற்கு “ கதாயுதம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. ரம்மி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்நிறுவனம் தாயரிக்கும் படம் இது.
ஜோக்கர் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப் பட்டவர் குருசோமசுந்தரம். துருவங்கள் 16 படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்தவர் ரகுமான். இந்த இருவரும் “ கதாயுதம் “ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக இந்திய பாக்கிஸ்தான் படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட், துளசி, ரமா, பாரதிகண்ணன் ஆகியோருடன...
இயக்குநர் வெற்றிமாறனின் பாராட்டு மழையில் ‘களத்தூர் கிராமம்’
நல்ல படங்களை எப்போதும் தமிழ்சினிமா ரசிகர்க
ளும், ஆர்வலர்களும்
ஆதரித்தும் பாராட்டியும் வருகின்றனர். அந்தவகையில் ‘களத்தூர் கிராமம்’ படம் பார்த்தவர்கள், நல்ல படம் என்று பாராட்டியும், பத்திரிகைகள் மற்றும் பிரபலங்கள் சிறந்த கதைக்களம், கச்சிதமான திரைகதை, வாழ்வியல் பதிவு என பாராட்டியும் வருகின்றனர்.
அடக்குமுறையின் மற்றொரு முகத்தை காட்டியிருக்கிறது களத்தூர் கிராமம்
என இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சீனுராஜ் கூறியதாவது,
“இந்த ‘களத்தூர் கிராமம்’ படத்தை பொருத்தவரை எனக்கு மன நிறைவான படம். இரண்டுமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனது மிகுந்த மன வருத்தத்தையும் நிறைய பொருட்செலவையும் ஏற்படுத்தியது. முதல்முறை போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போன காரணத்தினாலும், இரண்டாவது முறை ரிலீஸ் தேதி அறிவித்தபோது தயாரிப்பாளர் சங்...
மாஸ் ஹீரோவின் பட ரிலீசுக்கு இணையாக வெளியாகவுள்ள ‘அறம்’
பெண் சமத்துவம் என்பதை வெறும் பேச்சில் மட்டுமே கொண்டுள்ள பல துறைகள் இருக்கும் இக்காலத்தில், அதனை நடைமுறையிலும் செயலாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா துறை. மிக வலுவான முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள 'அறம்' படத்தை கோபி நைனார் இயக்கியுள்ளார். இது ஒரு சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படமாகும்.
இப்படத்தை தயாரித்துள்ள KJR ஸ்டுடியோஸ், பிரம்மாண்ட விளம்பர யுக்திகளை கையாளவுள்ளனர். ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் பட ரிலீசுக்கு இணையாக இப்படத்திற்கு மிகப்பெரிய பேனர்கள் தமிழகமெங்கும் பல திரையரங்கங்களில் எழுப்பப்படவுள்ளன. '' 'அறம்' படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது. நயன்தாரா அவர்களின் பெரிய மார்க்கெட் வேல்யூவிற்கு ஈடான விளம்பர யுக்திகளை கையாள்வதே சரி'' என்கிறார் 'KJR ஸ்டுடியோஸ்' ராஜேஷ் J கொட்டப்படி. தென்னிந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரத்தை மையமாக...
உலகையே வியக்க வைத்த விஷாலின் V SHALL அப்.!
உலகில் எவ்வளவோ ஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ யாரும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இது போன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் உள்ளனர். இது போன்று உதவி தேவைப்படுவர்களையும் உதவி செய்ய காத்து கொண்டிருப்பவர்களையும் இணைப்பதற்காகவே நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் V SHALL என்ற அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
இதன் மூலமாக உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களும் உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அப்ளிகேஷன் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது....
அறப்பணியில் அறம் படக்குழு
தாங்கள் ஒதுக்கப்பட்டதுக்காகவும், புறக்கணிக்கப்பட்டதற்காகவும் நினைத்து தற்போது கொந்தளித்தும் கொண்டிருக்கும் தமிழக மக்களின் பொதுவான அதிருப்தி மனநிலையை பிரதிபலிக்கும் படமாக 'அறம்' உருவாகியுள்ளது. இந்த காரணத்திற்காகவே, நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள 'அறம்' படத்திற்கு மக்கள் இடையேயும் விநியோகஸ்தர்கள் இடையேயும் பெரும் எதிர்பார்ப்பும் ஆதரவும் உருவாகியுள்ளது. இப்படத்தில் மாவட்ட ஆட்சியாளராக அசத்தி உள்ளதாக கூறப்படும் நயன்தாரா நடித்திருக்கும் இப்படம் சமுதாய பிரச்சனைகளை பற்றி வெறுமனே வாய் பேச்சில் அலசி கொண்டிருக்காமல் , சில பல செயல் திட்டங்களையும் அலசி உள்ளதாம். ஒரு படம் வெற்றி பெற பல்வேறு யுத்திகள் பிரயோகிக்க படும் இந்தக் கால கட்டத்தில் , பெரிய பின்பலம் இல்லாமல் சமுதாயத்துக்கு உதவும் ஒரு அரிய கண்டு பிடிப்பை செய்யும் திறமை சாலிகளுக்கு அவர்களது ஆராய்ச்சி மேம்பட செய்யும் முயற்சிகளுக்கு இந்த தயாரி...
வெற்றிப்படிக்கட்டுகளில் வேகமாக ஏறும் அவள் திரைப்படம்
ஹாலிவுட் திகில் படங்களுக்கு தமிழ் திகில் படங்கள் இணையில்லை என்ற காலம் 'அவள்' படம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. கதையம்சத்திலும், சிறந்த தொழிலநுட்ப திறனாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி போட்டு பேய் ஓட்டம் ஓடிக் கொண்டு இருக்கிறது. சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி நடிப்பில், அறிமுக இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸாகியுள்ள 'அவள்',கூட்டம் கூட்டமாக மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்துள்ளது. இப்படத்தை சித்தார்த்தின் 'Etaki Entertainment' நிறுவனம், 'Viacom18 Motion Pictures' நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளது. 'அவள்' படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்துள்ள 'Trident Arts' ரவீந்திரன் அவர்கள் இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்ப்பால் உற்சாகத்தில் உச்சியில் உள்ளார்.
'அவள்' குறித்து திரு. ரவீந்திரன் பேசுகையில், ''படத்தை பார்த்துவரும் மக்களிடையும் விமர்சகர்களிடையும் இப்படத்த...
R.K.சுரேஷ் நடிக்கும் “பில்லா பாண்டி”
படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக "பில்லா பாண்டி" எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மேயாத மான்
புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார்.
சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார்.
மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில் நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின் வெளியிடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் படம் பொங்கல் அன்று வெளியிடவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
"பில்லா பாண்டி" திரைப்படம் அஜ...



