Thursday, November 26

Blog

புது வருடம்.. புதிய பாதை ; விமலை தயார்படுத்தும் ‘மன்னர் வகையறா’..!

புது வருடம்.. புதிய பாதை ; விமலை தயார்படுத்தும் ‘மன்னர் வகையறா’..!

News
விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபி ரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக ரோபோ சங்கருடன் விமல் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது படத்தின் ஹைலைட்டாக இருக்கும். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வ...
“நோட்டீஸ் ஓட்டாதீர்”

“நோட்டீஸ் ஓட்டாதீர்”

News
துணை இயக்குனராக கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் திரைப்பட துறையில் பணிபுரிந்த K.P. செல்வா இப்பொழுது "நோட்டீஸ் ஓட்டாதீர் " என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். சுவரொட்டி ஓட்டுபவர்களின் வாழ்க்கை முறையையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியலை காட்டும் குறும்படம் இது. அதே நேரத்தில் இந்த குறும்படம் இப்போது ஒரு முழு நீள திரைப்படமாக உருவாக இருக்கிறது  மற்றும் அதற்கான வேலையும் தொடங்கப்பட்டுள்ளது. எழுத்து - இயக்கம் : K.P. செல்வா தயாரிப்பு -பயாஸ்கோப் மற்றும் டைனா நிறுவனம் இசை - நந்தன் சுவாமி மற்றும் வவ்வால் ப்ரதர்ஸ் ஒளிப்பதிவு - மோகன் வேலு எடிட்டிங் - சூதர்ஷன் PRO- நிகில் முருகன் ஸ்டண்ட் – K.பார்த்திபன் நடிகர்கள்: - பாலாஜி குமார் மாரிக்கனி...
2.0 இசை வெளியீடு நிகழ்ச்சி

2.0 இசை வெளியீடு நிகழ்ச்சி

News
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. 2.0 படக்குழுவினர் மேலும் இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7நட்சத்திர ஹோட்டலான Burj- Al - Arab செல்கின்றனர். அங்கு உலகளாவிய 2.0 படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகில் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் கலந்து ...
அதர்வா- R.கண்ணன் கூட்டணி – ஸ்பெஷல் படமாக நிச்சயம் இருக்கும்

அதர்வா- R.கண்ணன் கூட்டணி – ஸ்பெஷல் படமாக நிச்சயம் இருக்கும்

News
வர்தகரீதியாக நிரூபணமான ஒரு இயக்குனர் மிகவும் நம்பிக்கைக்குரிய கதாநாயகனோடு இணைவது என்றுமே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாகும். தமிழ் சினிமாவில் வர்தகரீதியாக  நிரூபணமாகியுள்ள இயக்குனர்களில் ஒருவர் திரு R.கண்ணன். அவரது முந்தைய படம் 'இவன் தந்திரன்' தடைகள் பல தாண்டி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில்  வேகமாக பதிந்து வரும் இளம் நாயகன் அதர்வாவோடு இணைந்துள்ளார். திரை உலகில்  அதர்வா- R.கண்ணன் கூட்டணி பெரும்  சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் R.கண்ணன் பேசுகையில், '' இது ஒரு மிக விறுவிறுப்பான சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்டாகும். எல்லா கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்துள்ள ஒரு ஆக்ஷன் ட்ராமா இது. கதாநாயகனாக அதர்வா நடிக்க உள்ளதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த கதாபாத்திரத்திற்கு அதர்வா மட்டுமே  மிக பொருத்தமாக இருப்பார். அவரது சினிமா பயணத்தில் இது ஒரு ஸ...
நேர்மையான கலெக்டராக நயன்தாரா அசத்தியுள்ள  ‘அறம்’

நேர்மையான கலெக்டராக நயன்தாரா அசத்தியுள்ள ‘அறம்’

News
சமுதாய அவலங்களை பற்றி பேசும் படங்கள் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திவரும் இந்த காலகட்டத்தில், ஒரு சமுதாய பிரச்னையை அழுத்தமாகவும் அழகாகவும் கூறியுள்ள படம் தான் 'அறம்'. கோபி நைனார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கொட்டப்படி J ராஜேஷ் தயாரித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'அறம்'. 'விக்ரம் வேதா' போன்ற  தரமான படங்களை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்து , தங்களது நிறுவனத்துக்கு பெரும் பெயரை ஈன்றெடுத்த 'Trident Arts' நிறுவனம் 'அறம்' படத்தை நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளது. இது குறித்து 'Trident Arts' ரவீந்திரன் அவர்கள் பேசுகையில், '' இந்த வருடத்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக 'அறம்' இருக்கும். அவ்வளவு வலுவான கதையம்சம் கொண்ட படம் இது. இயக்குனர் கோபி நைனார் இந்த கதையை அருமையாக கையாண்டுள்ளார். ஒரு நேர்மையான கலெக்டராக நயன்தாரா அசத்தியுள்ளார். 'அறம்' படத...
பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார் – இயக்குநர் சுசீந்திரன்

பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார் – இயக்குநர் சுசீந்திரன்

News
  அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.   நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேசியது :- இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது. தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தால் கண்டிப்பாக விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. எனக்கு பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது பிடிக்காது. ஆனால் இந்த விழாவில் எனக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் வெளியே சில சர்ச்சைகள் இருந்தாலும் இங்கு வந்துள்ளேன். விக்ராந்த் என்னுடைய தம்பி , சந்தீப்பும் என்னுடைய தம்பி தான். ஆனால் அவர் பை-லிங்குவல் தம்பி. தமிழ் , தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நடித்...
தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும்  “வீரையன்”

தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும்  “வீரையன்”

News
90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “வீரையன்”. இப்படம் ஒரு பக்கம் தந்தை - மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் ஆரம்பமாகும். ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க ஆரம்பித்து பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும். சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும், தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதையாகவும் உருவாகி இருக்கிறது இப்படம். பொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்கு அப்பார்ப்பட்டதாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் நியாய, தர்மங்களை சொல்லும், சூழ...
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்

News
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். படப்பிடிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைக்கிறார். காமராஜ் The Kingmaker, முதல்வர் மகாத்மா ஆகிய திரைப்படங்களை தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக தயாரிக்கிறது. எம்.ஜி.ஆரின் வரலாறு அவரது பாய்ஸ் நாடக கம்பெனி காலங்களில் ஆரம்பித்து, அவரின் திரையுலக வாழ்க்கை, அண்ணாவுடன் சந்திப்பு, அரசியல் வாழ்க்கை, பின் தமிழக முதல்வராய் உயர்ந்தது வரை படமாக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பு மட்டுமின்றி பல்துறை வல்லுனராக இருந்தார். அவ்வாழ்வு மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது. ஏழை எளிய மக்களின் கதாநாயகராக, மக்கள் திலகமாக விளங்கி வரும் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றுத் திரைப்படம்...
CLOSE
CLOSE