Blog
கமல் வைத்திருக்கும் பன்ச்
நிலவேம்புக் கஷாயத்தை நம் நற்பணி இயக்கத்தார் விநியோகிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதை சிலர், நிலவேம்புக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு என்று செய்தியாய்ப் பரப்புவது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஆர்வக் கோளாறில் சரச்சைக் குள்ளாகி இருக்கும் மருந்தை, அளவில்லாமல் கொடுப்பதைத் தவிர்க்கவே அந்த ட்வீட்டை வெளியிட்டேன். வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் மருந்துகளை என் இயக்கத்தார் விநியோகிப்பதை நான் விரும்பவில்லை. அரசு செய்திருக்கும் ஏற்பாடு, வைத்தியர்கள் உதவியுடன். அவ்வுதவியோ, அறிவுரையோ இல்லாமல் மருந்துகள் அளவின்றி அனைவருக்கும் விநியோகிக்கப்படுவதை மட்டுமே நான் விமர்சிக்கிறேன். மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். ஆனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் ஆர்வம் மட்டுமே ஊக்கியாகச் செயல்படுதலை என் இயக்கத்தார் செய்வதைத்தான் நான் நிறுத்தி வைக்கச் சொல்லியிருக்கிறேன். சித்தா அலோபதி என்ற தன...
விஷால் கொண்டாடிய தீபாவளி
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள க்ரஸ்ட் வேய்த் ஹோம் ஆதரவற்றோர்களுக்கான ஆசரமத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 120க்கும் மேற்பட்ட நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள். நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் சென்று தீபாவளியை அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் உணவு , உடை, பட்டாசுகள் வெடித்து அவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்....
எனக்கு நானே குழந்தை – கோவைசரளா !
எனக்கு நானே குழந்தை – கோவைசரளா ! இட்லி திரைப்படத்தை பற்றிய சிறப்பு பேட்டி !!
நிருபர்: உங்களுக்கு குழந்தை இருக்கிறதா?
கோவைசரளா: எனக்கு நானே குழந்தை.
சரண்யா பொன்வண்ணன்: இராமசந்திராவில் இரண்டுபேருமே மருத்துவம் பெரியவள் மூன்றாம் ஆண்டும் சிறியவள் முதலாம் ஆண்டும் படிக்கிறார்கள்.
நிருபர்: கமல் சார் கட்சி ஆரமித்தால் அவர் கதாநாயகிகள் எல்லாம் அவர் கட்சியில் சேர்வார்களா?
கோவைசரளா: அது எனக்கு தெரியவில்லை இன்று என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை அப்படி இருக்கையில் நாளை என்ன என்பது மட்டும் எப்படி தெரியும்.
நிருபர்: இட்லி படத்தை பற்றி ஏதாவது சொல்லுங்க?
சரண்யா பொன்வண்ணன்: ஒரு படத்தை கதாநாயகனை நம்பி எடுப்பார்கள், இயக்குநரை நம்பி எடுப்பார்கள் ஆனால் இயக்குநர் கதையை மட்டுமே நம்பி எடுப்பது தான் சாமர்த்தியம்.அப்படி தற்போது வந்தபடம் மகளிர்மட்டும் அதில் கதைக்கு யார் தேவையோ அவர்களை மட்டும் வைத்தார்கள்...
“ வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3
சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் “ வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3
இப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார் ரோஷன். இயக்குநர் ஹரியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய முருகேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தை பற்றி நாயகன் ரோஷன் கூறியது :-
பொய் பேசுபவர்கள் யாரும் பிடித்து பொய் பேசுவதில்லை. அப்படி பொய் பேசுபவர்கள் யாரும் எங்கள் படத்தை பார்த்தால் நிச்சயம் பொய் பேசமாட்டார்கள்.அரசியல்வாதிகள் அதிகமாக பொய் பேசுவார்கள். அவர்கள் பொய் பேசகூடாது. இந்த படத்தை பார்த்த பிறகு அவர்கள் எல்லோரும் பொய் சொல்ல தயங்குவார்கள். அந்த அளவுக்கு இந்த படத்தில் புரட்சிகரமான ஒரு கருத்து உள்ளது. இந்த படமே ஒரு புரட்சிகரமான படம்தான். நான் இந்த படத்தில் சேகுவேரா போன்றதொரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.சேகுவேரா செஞ்சி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து மைக் செட்காரனாக இரு...
தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு நிகழ்வுகளின் இணைப்பாக உருவாகும் ‘தொட்ரா’..!
J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’
.
இந்தப்படத்தை இயக்குனர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது
இயக்கத்தில்
தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்..
நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்..
சரவணக்குமார் புது வில்லனாக அறிமுகமாகிறார். "மெட்ராஸ்" பட வில்லன்களைப் போல இதில் முழுக்க முழுக்க விளையாடியிருக்கிறார். ஒரு படம் வெற்றியடைய கதாநாயகனை எதிர்ப்பவர் சரியான தேர்வாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவராக சரவணக்குமார் இப்படத்தில் பார்ப்பவர்களுக்கு பயமேற்படுத்தும் பாத்திரத்தில...






