Thursday, November 26

Blog

இயக்குநராகிறார் நடிகரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ்,

இயக்குநராகிறார் நடிகரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ்,

News
சினிமா இயக்கத்தின் மீது அயராத காதலும் அதற்கான திறமையும் இருக்கும் ஒருவர் நிச்சயம் ஒரு நாள் இயக்குனர் ஆவார் . பாடலாசிரியராகயும் பாடகராகவும் பல ஹிட்டுகளை கொடுத்து புகழ் பெற்ற அருண்ராஜா காமராஜ் இயக்குநராகிறார் என்பதே தற்பொழுதைய பரபரப்பான செய்தி. பல திறமைகள் கொண்ட அருண்ராஜா காமராஜ், இயக்குனராக தன்னை நிரூபித்துக்கொள்ள முனைப்போடு உள்ளார். அருண்ராஜாவையும்  அவரது இயக்குனர் கனவையும் அறிந்தவர்கள் அதற்காக அவர் போட்டுள்ள உழைப்பையும் நன்கு அறிவார்கள். தனது முதல் இயக்கம் குறித்து அருண்ராஜா காமராஜ் பேசுகையில், '' நான் சினிமாவுக்கு வர முதல் மற்றும் முக்கிய  காரணமே இயக்குநராக வர வேண்டும் என்றுதான். இயக்குனராவது எனது வாழ்நாள் ஆசையாகவும் கணவாகவும் இருந்து வருகிறது. இதற்கு முன்பு பல குறும்படங்களை எழுதி இயக்கி குறும்பட போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.'வேட்டை மன்னன்' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமும் என...
‘ப்ரேமம்’ கூட்டணியின் அடுத்த அசத்தல்

‘ப்ரேமம்’ கூட்டணியின் அடுத்த அசத்தல்

News
'ப்ரேமம்' படத்தில் நண்பர்களாகவே வாழ்ந்த நிவின் பாலியும் அல்தாப் சலீமும் இணைந்து நடித்துள்ள 'ஜண்டுகளூடே நட்டில் ஓரிடவேளா' இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. வரும் ஓணம் திருநாளானன்று வெளி ஆகி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது. கேரளாவை தாண்டியும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் நிவின் பாலியே இப்படத்தை தயாரித்துள்ளார்.பெரும் வெற்றி பெற்ற 'ஆக்ஷன் பிஜு' படத்திற்கு பிறகு அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது தான். இப்படத்தின் டீசரும், 'எந்தாவூ' பாடலும் ஏற்கனவே வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக  புது முக கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். முன்னாள் பிரபல நடிகை ஷாந்தி கிருஷ்ணன் இப்படத்தின் மூலம் நடிப்பில் மீண்டும் பலவருடங்கள் கழித்து களமிறங்கியுள்ளார் . இவரின் வருகையாலும் 'ப்ரேமம்' நடிகர்களின் கூட்டணியாலும்  இந்த ஜனரஞ்சகமான...
ஆக்சன் கிங் அர்ஜுனின்  “சொல்லிவிடவா”

ஆக்சன் கிங் அர்ஜுனின் “சொல்லிவிடவா”

News
முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்-2 போன்ற தேசப்பற்றுமிக்க திரைப்படங்களின் நாயகன் ஆக்சன் கிங் அர்ஜுன், எழுதி, இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் “சொல்லிவிடவா” தீபாவளிக்குத் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக-முக்கிய வேடத்தில் நடிக்க, தேசப்பற்றோடு காதலையும் சேர்த்து ஒரு புதிய பரிமாணத்தில் படைத்திருக்கிறார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இத்திரைப்படத்தில், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இணையாக புதுமுகம் சந்தன் குமார் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் கதைக்களம் வெகு சுவாரசியமானது. இதுவரை காணாத வகையில், ஒரு முற்றிலும் புதிய பின்னணியில் இந்த கதை பயணிக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும், தங்களுடைய வேலையில் உள்ள ஆபத்துகளையும், நெருக்கடிகளையும் தாண்டி, எப்படி தங்கள் காதல் வாழ்விலும் பயணிக்கிறார்கள் என்பதை பிரமிக்கும் வகையில் இத்திரைப்படம்...
இயக்குனர் அமீர் நாயகனாக  நடிக்கும் எம்.ஜி.ஆர். பாண்டியன்

இயக்குனர் அமீர் நாயகனாக நடிக்கும் எம்.ஜி.ஆர். பாண்டியன்

News
  பழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், எம்.ஜி.ஆர். என்ற ஒரு மாபெரும் அரசியல் தலைவரின் பெயரையும், பாண்டியன் - என்ற சூப்பர்ஸ்டாரின் திரைப்பட பெயரையும் இணைத்து, எம்.ஜி.ஆர். பாண்டியன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இத்திரைப்படம் டைட்டிலிலேயே அதிரடியை கிளப்பியிருக்கிறது இப்படத்தை தயாரித்து, இயக்கும் ஆதம்பாவா கூறியது இத்திரைப்படம் அமைதிப்படைக்குப்பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும். எம் ஜி ஆர் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம் ஜி ஆர் ரசிகனை இப்படத்தில் காணலாம். அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது கதையின் தேவைக்கேற்ப நடிகர்கள் ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மற்றும் மகதி சங்கர், ராஜ் கபூர், கசாலி, ராஜசிம்மன், சம்பத் ராம், பாவா லக்ஷ்மண...
தனித்துவம் மிக்க “சோலோ” படப் பாடல்கள்

தனித்துவம் மிக்க “சோலோ” படப் பாடல்கள்

News
கடம்பன், சண்டி வீரன், தர்மதுரை, ஸ்ட்ராபெர்ரி, விழித்திரு ஆகிய படங்களை தொடர்ந்து ட்ரெண்ட் மியூசிக் நிறுவனம் மிகவும் எதிர்பார்புக்குள்ளாகி இருக்கும் துல்கர் சல்மானின் சோலோ படத்தின் தமிழ் மற்றும் மலையாள இசை உரிமையை கைப்பற்றியுள்ளது. ரசிகர்களை ஈர்த்த அருமையான டீசரை தொடர்ந்து படத்தின் நாயகன் துல்கரின் ருத்ரா கதாபாத்திரத்தை சுற்றிய 4 பாடல்களை வெளியிட்டது படக்குழு. பீட்சா, டேவிட், சைத்தான் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து பிஜாய் நம்பியார் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் படமாக இந்த சோலோ படத்தை கொடுக்கும் வேளைகளில் தீவிரமாக இருக்கிறா. துல்கர் சல்மானின் சமீபத்திய ஓகே கண்மணி, பெங்களூர் டேஸ் பாடல்களும் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடக்க விஷயம். தொடர்ந்து தரமான படங்களின் உரிமையை கைப்பற்றுவதில் நாங்கள் பெருமையடைகிறோம், சோலோ அதற்கு சாட்சியாக இருக்கும் என்பது உறுதி. சோலோ நிச்சயம் ரசிகர்களின் ட்ரெண்டு மற்ற...
CLOSE
CLOSE