டேவ் கிபன்ஸ் மற்றும் மார்க் மில்லர் இணைந்து எழுதிய காமிக் புத்தகமான 'தி ஸீக்ரெட் ஸர்வீஸ்'சை தழுவி உருவாக்கப்பட்ட படம்தான்,கிங்ஸ்மேன்: தி ஸீக்ரெட் ஸர்வீஸ்'. 2014 ஆம் ஆண்டு வெளியான அந்த படம், மிக பெரிய வெற்றியை பெற்றது!
X-மேன்: ஃபர்ஸ்ட் கிளாஸ் படத்தை இயக்கியிருந்த மேத்யூ வாகன் தான் அதனையும் இயக்கி இருந்தார்! அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை, சண்டை காட்சிகளில் புதிய யுக்திகள் என அந்த படம் படு சுவாரஸ்யமான முறையில் உருவாகி, வியாபார ரீதியாக உச்சத்தை தொட்டது!
ஜேன் கோல்ட்மேன் மற்றும் மேத்யூ வாகன் இருவரும் இணைந்து திரைக்கதை அமைக்க, மீண்டும் மேத்யூ வாகன் இப்படத்தையும் இயக்கியுள்ளார்!
கோலின் ஃபிர்த், தாரோன் எகேர்டன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் தோன்ற, ஜூலியானா மூர் வில்லியாக தோன்றி அசர வைத்துள்ளார்!
மற்றும் ஆஸ்கர் பரிசு பெற்ற ஹேலி பெரீ, ஜெஃப் ப்ரிட்ஜஸ்,...
ஆணுக்கு பெண் எந்த விதத்திலும் சளைத்தவர் அல்ல என்பது தற்போதய சமுதாயத்தில் உறுதியாக நிரூபணமாகியுள்ளது. நமது நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி சினிமாவிலும் பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு வெற்றி படங்கள் என்றுமே வந்த வண்ணமுள்ளன. 'தரமணி' படத்தின் மூலம் தரமான வெற்றியை தந்த JSK Film Corporation நிறுவனம் தனது அடுத்த படமான 'ஹௌரா பிரிட்ஜ்' படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு திரில்லர் படமாகும். தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை லோஹித் இயக்கவுள்ளார். JSK Film Corporation தயாரிப்பில் பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தயாரிக்கப்படவுள்ள மற்றொரு சுவாரஸ்யமான கதை இது. இப்படத்தின் வசனத்தையும் பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். பிரியங்கா உபேந்திரா இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.நடிகை ஐஸ்வர்யா, ப்ரியங்காவின் மகளாக நடிக்கவுள்ளார். க...
சினிமாவில் என்றுமே அழியாததும், அழிக்கமுடியாததும் காதல் கதைகளே. காதல் கதைகளுக்கு எல்லைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது. பல ஸ்டார்களும் சூப்பர் ஸ்டார்களும் காதல் கதைகள் மூலமாக பிறந்து வளர்ந்து இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளுக்கும் காதல் காவியங்களும் பஞ்சம் இருந்ததேயில்லை. தற்பொழுது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் 'அபியும் அனுவும்' இப்பட்டியலில் சேர முனைப்போடுள்ளது . இப்படத்தில் மலையாள திரை உலகில் துரித வேகத்தில் வளர்ந்து வரும் நாயகன் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை B R விஜயலக்ஷ்மி இயக்கியுள்ளார். 'அபியும் அணுவும்' படத்தை குறித்து அதன் இயக்குனர் B R விஜயலக்ஷ்மி பேசுகையில், '' இது ஒரு புதுமையான, இது வரை சொல்லப்படாத கதை. இதே போல் பல இயக்குனர்கள் முன்பு கூறியிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அனால் இது அது போல் கிடையாது. ...
அசத்தலான கூட்டணிகளை அமைத்து தனது படத்தை மேலும் பெரிதாக்குவதில் தேர்ந்து வருகிறவர் 'பலூன்' பட இயக்குனர் சினிஷ். ஜெய்-அஞ்சலி கூட்டணியின் மூலம் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் உண்டாக்கிய சினிஷின் 'பலூன்' தற்பொழுது மற்றோரு பலமான கூட்டணியை அமைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் தற்பொழுது இசையமைப்பாளர் அனிருத் ஒரு சுவாரஸ்யமான பாடலை பாடியுள்ளார். யுவன்-அனிருத் கூட்டணி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது.
''ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ விளம்பர யுக்திகளும் அவ்வளவு முக்கியம் என்பதை நம்புபவன் நான். இன்றைய சினிமாவில் விளம்பர யுக்திகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன. சுவாரஸ்யமான கூட்டணிகளை அமைப்பது படத்தின் விளம்பரத்திற்கு பேராதரவாக இருக்கும். 'பலூன்' படத்தின் ஒரு பாடலிற்கான விவாதத்தில் நானும் அதன் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜா இர...
மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றிப்பட தலைப்புகள் இன்றும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. அனைவராலும் ரசிக்கப்படும் நடிகராக வெற்றி ரதத்தில் வேகமாக பயணித்து கொண்டிடுருக்கும் G V பிரகாஷ், பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் தான் முதல் முறையாக இயக்கவிருக்கும் படத்தில் கதநாகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 'குப்பத்து ராஜா' என்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் தலைப்பை சூட்டியுள்ளனர். இப்படத்தினை 'S Focuss' சார்பில் திரு. எம்.சரவணன், திரு. எஸ்.சிராஜ் மற்றும் திரு.T. சரவணன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இவர்களோடு இணைந்து படூர் ரமேஷ் இணை தயாரிப்பு செய்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளர் கர்ணாராஜா. இப்படத்தில் G V பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா மற்றும் பல்லக் லால்வானி நடித்துள்ளனர். இப்படத்தில் பார்த்திபன், M S பாஸ்கர், யோகி பாபு மற்றும் 'ஜாங்கிரி' மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்...