Wednesday, November 25

Blog

விருது ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது”; விமல் நெகிழ்ச்சி..!

விருது ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது”; விமல் நெகிழ்ச்சி..!

News
2௦09 முதல் 2014 வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுபெற்ற பலரும் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.. அந்தவகையில் 2011ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதுபெற்றுள்ள நடிகர் விமலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.. இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது.. “2009ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘பசங்க’ படமும், 2010ஆம் வருடத்தின் இரண்டாவது சிறந்த படமாக ‘களவாணி’ படமும்  2011ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘வாகை சூடவா’ படமும் சிறந்த படங்களுக்கான விருது பெற்றிருக்கின்றன.. மேலும் 2014ஆம் வருடத்திற்கான சிறந்த இயக்குனருக்கான விருது ‘மஞ்சப்பை’ பட இயக்குனர் ராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான இந்த நான்கு படங்களிலும் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியுடன் பெருமையும் அடைகிறேன். மேலும் ‘வாகை சூட...
உதவி இயக்குனரான நடிகை இனியா!

உதவி இயக்குனரான நடிகை இனியா!

News
தமிழக அரசின் 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை விருது பெற்ற நடிகை இனியா நடிப்பில் முதன் முறையாக வெளிவரும் சமூக சிந்தனையுள்ள மியூசிக் வீடியோ . இதில் நடிகை இனியா புதிய தொழில்நுட்ப கலைஞர்களுடன் சேர்ந்து உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். விரைவில் வெளியாகும் இந்த மியூசிக் வீடியோவின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று வெளியிட்டார். இயக்கம்- மகேஷ். ஒளிப்பதிவு- அபி ரெஜி, லாவெல், ஜெயன். நடனம்- அருண் நந்தகுமார் பாடலாசிரியர்- கோவர்தன் பழனிசாமி...
ஒளிப்பதிவாளர்  இயக்குனராகிறார்

ஒளிப்பதிவாளர் இயக்குனராகிறார்

News
மலையாள சினிமா உலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஜோமோன் T ஜான்  'கைரளி' என்ற ஒரு பிரம்மாண்டமான படத்தை  நிவின் பாலியை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார் . 'சார்லி', 'என்னு நின்டே மொய்தீன்', 'திரா' போன்ற மலையாள படங்களுக்கும், பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கிய 'கோல்மால் 4' கும் ஒளிப்பதிவு செய்து இந்திய சினிமாவில் புகழ் பெற்றவர் ஜோமோன் T ஜான்.இவரது இயக்கத்தில் இவரது முதல் படமான 'கைரளி' 1979'ல் மர்மமான முறையில் மாயமாக 49 பேர் கொண்ட கேரளாவின் முதல் கப்பல் 'MV கைரளி' பற்றியதாகும். தேசிய விருது பெற்ற சித்தார்தா சிவா 'கைரளி' க்கு  திரைக்கதை எழுதவுள்ளார். இப்படத்தை நடிகர் நிவின் பாலியின் 'Jr பிக்ச்சர்ஸ்சுடன் சேர்ந்து 'ரியல் லைப் ஒர்க்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நிவின் பாலியின் 'தட்டத்தின் மறயது', 'ஒரு வடக்கன் செல்பி' , ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்யம்' படங்களுக்கு ஜோமோன் T ஜான் ஒளிப்பதிவு ச...
உதய நிதி ஸ்டாலின் வெளியிடும்  ‘ஒரு குப்பை கதை’!

உதய நிதி ஸ்டாலின் வெளியிடும் ‘ஒரு குப்பை கதை’!

News
ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில்  நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும்  'ஒரு குப்பை கதை'! ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதய நிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.   மாஸ்டர் தினேஷ்!   கோடம்பாக்கத்தில் கோலோச்சும் ஒரு சில  நடன இயக்குநர்களில் முதல் வரிசையில் நிற்பவர். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர்.  தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர்.   ஒரு குப்பை கதை படத்தின் நாயகன் இவர்தான். முதல் முறையாக இந்தப் படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.    தன் உதவி இயக்குநர் காளி ரங்கசாமியை இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாக்கியுள்ள அஸ்லம், அவருக்காக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.    நல்ல கதைக்கு 'ஒரு குப்பை கதை' எனப் பெயரிட்டு களமிறங்கியுள்ளனர் இருவரும். ஆரம்பத்தில் என்ன குப்பை கதையா? என  முகம் சுழித்தவர்கள் பின் கதையைக் காது...
உற்சாகமும் பெருமையும்  தருகிறது தமிழக அரசு விருது – நடிகர் ஜீவா

உற்சாகமும் பெருமையும் தருகிறது தமிழக அரசு விருது – நடிகர் ஜீவா

News
தமிழக அரசு விருது உற்சாகமும் பெருமையும்  தருகிறது  என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.  தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2012 க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் ஜீவா  தேர்வாகியுள்ளார். 2012ல்  கெளதம் வாசுதேவ் மேனன் . இயக்கத்தில்  'நீதானே என் பொன் வசந்தம்'  படத்தில்  நடித்ததற்காக அவர்  இவ்விருதைப்  பெறுகிறார். இது பற்றி நடிகர்    ஜீவா பேசும் போது " ஒரு நடிகருக்கு படத்தில் நடித்ததற்கு வணிக ரீதியான வெற்றி முக்கியம் அது போல் விருதுகளும் முக்கியம்  . கிடைக்கிற விருது அங்கீகாரம் கலை ஞர்களை உற்சாக மன நிலைக்கு இட்டுச் செல்லும்.  அது மட்டுமல்ல மேலும் உழைக்க ஊக்கம் தரும். அவ்வகையில் 'நீதானே என் பொன் வசந்தம்' படம் விமர்சன ரீதியில் பெரிதும் பாராட்டப்பட்ட படம்  .இப்படி பேசப்படும் வகையில்  அந்தப் படத்தை கெளதம் மேனன் சார் உருவாக்கியிருந்தார். அந்தப் படத்துக்காக  என்னைச்  சிறந்த நடிகராகத் ...
10 வருதுகளை  அள்ளிய ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்…

10 வருதுகளை அள்ளிய ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்…

News
தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனம், நேற்று தமிழக அரசாங்கம் அறிவித்து இருந்த மாநில விருதுகள் 10 விருதுகளை பெற்று இருக்கிறது. "என்னுடைய திரை உலக பயணத்தில் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாகும். பல்வேறு தேசிய, சர்வதேச விருதுகள் என்னுடைய படங்கள் மூலம் பெற்று இருந்தாலும்,நம் தாய் தமிழ் நாட்டின் விருதுகள் கிடைக்க பெற்றதில் பேரானந்தம்.  நிறுவனம் துவங்கிய சில வருடங்களில் விருதுகள் பல வென்றது எங்களது நிறுவனத்துக்கும் எனக்கும் பொறுப்பு உணர்ச்சியை அதிகம் கூட்டுகிறது என்கிறது என்று தான் சொல்லுவேன். நான் சார்ந்து இருக்கும் திரை உலகிகின் சார்பில் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்பிமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்கிறேன். இதை போலவே இன்று விருதுகள் கிடைக்க பெற்ற ஏனைய திரை உலகினருக்கும் என் வாழ்த்துக்கள். சவால்கள்...
From the Desk of Divya Sathyaraj

From the Desk of Divya Sathyaraj

News
Last week pharmaceutical manufacturers from America tried to bribe and threaten Divya to prescribe supplements with steroids and harmful ingredients to her patients.Divya Sathyaraj has written an open letter to Modi requesting him to prevent unapproved and dangerous medicines in India.Divya has also expressed her concern about NEET exams and has requested the prime minister to look into medical negligence and malpractice in medical admissions.  
CLOSE
CLOSE