அரசு விருது புத்துணர்வும் புதிய பலமும் தருகிறது – நடிகர் கரண்
தமிழக அரசு விருது புத்துணர்வும் புதிய பலமும் தருகிறது என்று நடிகர் கரண் கூறியுள்ளார்.
தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2009 க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் கரண் தேர்வாகியுள்ளார்.
2009 -ல் கரண் நடிப்பில் வெளியான ' மலையன் 'படத்தில் நடித்ததற்காக அவர் இவ்விருதைப் பெறுகிறார்.
இது பற்றி நடிகர் கரண் பேசும் போது
" ஒரு நடிகருக்கு விருது என்பது பல படிகள் ஏறிச் சென்று உயர்ந்த உணர்வைத் தரும். அந்த வகையில் மலையன் படத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கிடைத்து இருக்கிறது . அந்தப் படத்தில் நடிக்கும் போது சிரமப் பட்டுப் பல சவால்களைச் சந்தித்து நடித்தேன். அந்த வலி நினைவுகள் எல்லாம் விருது என்கிற மகிழ்ச்சி மூலம் காணாமல் போய் விட்டது . இப்போது புத்துணர்வும் புது பலமும் பெற்றுள்ளதாக உணர்கிறேன். அந்தப் படத்துக்காக என்னை சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ள தமிழக அரசு க்...








