Blog
Aadhan Film Tamil Lyric Video Release By Vijay Sethupathi
https://www.youtube.com/watch?v=61m-Rlo1PZY
Theru Naaigal Single Track – Kangal Kathai Pesutho Lyrical Song
https://www.youtube.com/watch?v=XOB-N7tW2VA
வனமகன் வெற்றி தொடர்கிறது…
கடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படமும் நல்ல விமர்சனங்களோடும், ரசிகர்களின் ஆதரவோடும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி அல்லாமல் மாநில அரசு தனியாக 30 சதவீத கேளிக்கை வரியை தமிழ் சினிமா மீது விதித்தது. இதனால் தமிழ்நாடு முழுக்க உள்ள திரையரங்குகள் ஜூலை 3ஆம் தேதி முதல் காலவரையரைன்றி மூடப்பட்டன. கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி அனைத்து தமிழ் சினிமா சங்கங்களும் தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் திரையரங்குகள் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்று நாளை திரையரங்குகளை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து பேச வனமகன் மற்றும் இவன் தந்திரன் படக்குழுவும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் அழகப்பன், கௌதம் க...
இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா அறக்கட்டளை
மறைந்த இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் அறக்கட்டளை சென்னையில் நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளையை இசைஞானி இளையராஜா தொடங்கிவைத்தார். இவ்விழாவில் திரு.T.V.
கோபாலகிருஷ்ணன், திரு. நல்லி குப்புசாமி செட்டி ,திருமதி. சுதா ரகுநாதன் , திரு.உன்னி கிருஷ்ணன் மற்றும் cleaveland சுந்தரம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இவ்விழாவில் திரு.நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் பேசுகையில்,'' பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் ஒரு இசை மாமேதை. ஒரு முறை நான் அவரிடம் , உங்கள் இசை கச்சேரிகளில் வாசிக்கும் கலைஞ்சர்கள் எல்லாம் பதட்டமாக இருக்கையில், நீங்கள் மட்டும் எப்படி இப்படி பதட்டமே இல்லாமை அமைதியாக இருக்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர், '' இசை சரங்கள் மட்டும் தன் பதட்டமாக இருக்கவேண்டுமே ஒழிய , அதை மீட்டும் விரல்கள் பதட்டமாகக்கூடாது '' என புன்னகையுடன் கூறினார். இசைஞானி இளையராஜா அவர்கள் இந்த அறக்கட்டளையை தொடங்கிவைத்த...
’கொலை விளையும் நிலம்’ – ஆவணப்படம்
கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததோடு காவிரியில் தண்ணீர் வராததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலம் முழுக்கவே விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளின் தற்கொலைகளும் அதிர்ச்சி மரணங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தன. இந்த துயர சம்பவம் ’கொலை விளையும் நிலம்’ என்ற பெயரில் ஆவணப்படமாகிறது.
தமிழகமெங்கும் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் வறண்டன. சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகினர். காய்ந்து போன பயிர்களை பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும், பயிர்கள் கருகிப்போன விரக்தியில் தற்கொலை செய்துகொண்டும் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் ஆவணப்படமாக உருவாகிறது.
முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றிய பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இந்த ஆவணப்படத்தை இயக்குகிறார். கொலை விளையும் நிலம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் சுமார் 50 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உருவாகியுள...
எம்.ஜி.யார்,கலைஞர்,ஜெயலலிதா சினிமாவை காப்பாற்றினார்கள்?
ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக P.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு " நான் யாரென்று நீ சொல்" என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார்.கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா இவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார். அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
எடிட்டிங் : பிரேம்
பாடல்கள் : இளையகம்பன்
ஸ்டண்ட் : பம்மல் ரவி
இசை : ஜான் பீட்டர்
ஒளிப்பதிவு : பாஸ்கர்
நடனம் : ரவிதேவ்
தயாரிப்பு : R.மணிமேகலை
எழுதி இயக்கி இருப்பவர் - A.M.பாஸ்கர்
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் விக்ரமன்.நான் வழக்கமாக இது மாதிரி இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி மட்டும் தான் பே...
கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை
APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் " உறுதி கொள்"
கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் இசை விழாவில் பரபரப்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது...
கமலஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால் GST மற்றும் மாநில வரி செலுத்த வேண்டி இருக்கும் இதையே தயாரிப்பாளர் சங்கமே ஒரு APP. துவங்கி அதன் மூலம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும் என்று ஆரி பேச.
தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு..அது தான் சினிமாவை வாழ வைக்கும். சினிமா...


