அதாகப்பட்டது மகாஜனங்களே…
நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின் டீசர் வெளியீட்டு விழாவும் பத்திரிகையாளர்கள் சந்திப்பும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனை இளைய சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய சிவகார்த்திகேயன், இங்கு பேசிய சிலர் எனக்கு சில பட்டங்களைக் கொடுத்தார்கள். ஆனால் அதை நான் என் வாயால் சொல்ல மாட்டேன். காரணம் இது போன்ற பட்டங்களிலிருந்து விலகியிருக்கவே நான் விரும்புகிறேன். மக்களா மகிழ்விப்பதுதான் என் வேலை. எனது படங்கள் மக்களுக்குப் பிடித்திருந்தால் அதுவே எனக்குப் போதும் என்றார்.
மற்றொரு சிறப்பு விருந்தினரான இயக்குநர் பிரபு சாலமன், புதுமுக நாயகன் உமாபதியின் நடனத் திறமையை வியந்து பாராட்டியதுடன், நாகேஷ் மகன்...








