Wednesday, November 25

Blog

தைரியமான எழுத்தாளராக நான் ராஜா ரங்குஸ்கி படத்தில்   நடிக்கிறேன்” – சாந்தினி தமிழரசன்

தைரியமான எழுத்தாளராக நான் ராஜா ரங்குஸ்கி படத்தில் நடிக்கிறேன்” – சாந்தினி தமிழரசன்

News
'வில் அம்பு' படம் மூலம் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களின் உள்ளங்களையும்  கொள்ளை அடித்து சென்ற சாந்தினி தமிழரசன், தற்போது 'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' புகழ் தரணிதரன் இயக்கி வரும்   'ராஜா ரங்குஸ்கி' படத்தில்  கதாநாயகியாக நடித்து வருகிறார். 'மெட்ரோ' புகழ் ஷிரிஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை  சக்தி வாசன் மற்றும் 'பர்மா டாக்கீஸ்' இணைந்து தயாரித்து வருகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார்.  மேலும் அவரது இசையில் 'ராஜா ரங்குஸ்கி' படத்திற்காக சிலம்பரசன் ஒரு பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. "இந்த படத்தில் ரங்குஸ்கி (பிரபல  எழுத்தாளர் சுஜாதாவின் செல்ல பெயர்)  என்கின்ற ஒரு தைரியமான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கின்றேன்.  நகர்ப்புற பெண் வேடத்தில் நான் நடிக்கும் இந்த கதாபாத்திரம், நான் நடித்த மற்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். 'ராஜா' கதாபாத்திரத்தில் ...
பட்டாபி என்ற அடையாளத்தை பெற்ற நான், மூர்த்தி என்கின்ற புதிய அடையாளத்தை பெற்று இருக்கிறேன்”

பட்டாபி என்ற அடையாளத்தை பெற்ற நான், மூர்த்தி என்கின்ற புதிய அடையாளத்தை பெற்று இருக்கிறேன்”

News
ஒரு தரமான திரைப்படத்திற்கு பிரம்மாண்ட தயாரிப்பும், நட்சத்திர நடிகர் நடிகைகளும் அவசியம் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறது, சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் '8 தோட்டாக்கள்' திரைப்படம்.  இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர் அவர்களுக்கு, எல்லா தரப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிக்கின்றன.  'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  'பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்'  -  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து, இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும்  '8 தோட்டாக்கள்'  திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இயக்குநர் ஸ்ரீ கணேஷை நேரில் சந்தித்த எம் எஸ் பாஸ்கர், அவருக்கு தங்க நகையை அணிவித்து, அவரை கௌரவப்படுத்தினார். "பி...
சமுத்திரகனி – சாம் ஜோன்ஸ் நடிக்கும்  “ஏமாலி”

சமுத்திரகனி – சாம் ஜோன்ஸ் நடிக்கும் “ஏமாலி”

News
லதா புரோடக்ஷன்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக M. லதா தயாரிக்க முகவரி, தொட்டி ஜெயா, நேபாலி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் V. Z . துரை “ஏமாலி” எனும் புதிய படத்தை இயக்குகிறார். எதார்த்த நடிகர் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க  அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார். “ஏமாலி” படத்தின் பூஜை இனிதே முடிந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்கியுள்ளது. நடிகர்கள் : சமுத்திரகனி சாம் ஜோன்ஸ் சிங்கம் புலி பால சரவணன் அதுல்யா ரவி தொழில்நுட்ப கலைஞர்கள் : தயாரிப்பு – M. லதா இயக்குனர் – V. Z . துரை வசனம் – ஜெயமோகன் ஒளிப்பதிவு – M. ரத்திஷ் கண்ணா, I. பிரகாஷ் இசை – சாம் D ராஜ் பாடல்கள்..மோகன்ராஜ்-VZ.துரை படத்தொகுப்பு – R.சுதர்சன் ...
பேய் இல்லாத திகில் படம் “உரு”

பேய் இல்லாத திகில் படம் “உரு”

News
  வையம் மீடியாஸ் படநிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துவரும் புதிய படம் உரு. இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் விக்கி ஆனந்த் கூறியதாவது, உரு என்றால் பயம் என்று பொருள் உண்டு. பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை என்பதால் இப்படத்திற்கு உரு என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.   கதைப்படி நாயகன் கலையரசன் நல்ல குடும்பக்கதைகளை எழுதி வரும் எழுத்தாளர். ஆனால் இன்றைய மாறிவிட்ட சூழலில் இவரின் கதைகள் வரவேற்கப்படாமல் போகவே, தனது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை மிகவும் கவரும் திரில்லர் கதைகளை எழுத முடிவுஎடுத்து, மேகமலை என்ற ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் கதை எழுதத் தொடங்கும் போது அவரைச் ...
Cupping therapy introduced in India by Vidyut Jammwal

Cupping therapy introduced in India by Vidyut Jammwal

News
Advocated by Olympic athletes like Michael Phelps, the cupping therapy that is known to heal the body has made its way to India through action superstar Vidyut Jammwal. Hollywood celebrities like Jennifer Aniston, Victoria Beckham, Freida Pinto, and Gwyneth Paltrow swear by this technique and now, our very own desi Commando is setting the trend for it in India. Vidyut underwent cupping therapy to ensure better blood flow, muscle and joint relaxation and for a general physical and psychological well-being. For someone whose physical training regime is beyond a normal gym enthusiast’s imagination, Vidyut decided to give his body a dose of this incredible form of therapy as a method of overall rehabilitation and rejuvenation. Whether this is a result of his physical training for Comm...
டிஜிட்டல் பதிப்பில் வெளியாகி, அமோக வெற்றி பெற்ற ‘பாட்ஷா’

டிஜிட்டல் பதிப்பில் வெளியாகி, அமோக வெற்றி பெற்ற ‘பாட்ஷா’

News
நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறிய 'பாட்ஷா' திரைப்படம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியாகி, தமிழ் திரைலகிலும், உலகெங்கும் உள்ள  தீவிர ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. இந்த டிஜிட்டல் பதிப்பிற்கு மூல காரணமாக செயல்பட்ட திரு தங்கராஜ் (திரு ஆர்.எம் வீரப்பனின் மகன்) அவர்களை, சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்தினார். "தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 120 திரையரங்குகளில் இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறிய 'பாட்ஷா' திரைப்படம் வெளியாகி உள்ளது. மேலும், ஐம்பது வருடம் பழமை வாய்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம், 22 வருடத்திற்கு முன் தாங்கள் வெளியிட்ட அதே படத்தை மீண்டும் ஒருமுறை பிரம்மாண்டமாக வெளியிட்டிருப்பது,  தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.   ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக இளம் ரசிகர்கள் மத்...

பிரபாஸ் – உலகமேங்கும் உற்று நோக்கும் உச்ச நட்சத்திரம்

News
பல தெலுங்கு வெற்றி படங்களில் நடித்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் தனது பிரம்மாண்ட நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து உலகமே உற்று நோக்கும் உச்ச நட்சத்திரமானார்.   பிரம்மிப்பையும் பிரம்மாண்டத்தையும் இணை சேர்த்து அனைவரையும் கவர்ந்த S.S.ராஜமௌலியின் ’பாகுபலி’ படத்தின் வெற்றி உலகம் அறிந்ததே. தற்போது S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகமே பெரிதும் எதிர்பார்க்கும் 'பாகுபலி 2' திரைப்படம் உலகமெங்கும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ளது.   ஒவ்வொரு நடிகருமே ஒரு படத்தை ஒரு வருடத்துக்குள்ளாவது முடித்துவிட்டு, அடுத்த படத்துக்கு சென்றுவிடுவார்கள். ஆனால், 'பாகுபலி' 2 பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 3 ஆண்டுகள் ஒதுக்கி நடித்து முடித்துள்ளார் பிரபாஸ். படத்துக்கான அவருடைய உழைப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஒரு நடிகர் சினிமா மீது கொண்ட காதலினாலும் தனது ரசிகர்கள் மீது கொண்ட பாச...
பெஞ்ச் பிலிக்ஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘பங்காரு’

பெஞ்ச் பிலிக்ஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு ‘பங்காரு’

News
திறமையான  இளம் கலைஞர்களை கண்டறிந்து, அவர்களின் படைப்புக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை செம்மையாக செய்து கொண்டிருக்கிறது, இந்தியாவில் முன்னணி குறும்பட தயாரிப்பு நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும்  'பெஞ்ச் பிலிக்ஸ்' . இவர்களின் அடுத்த படைப்பு இயக்குநர் ஷியாம் சுந்தர்  இயக்கி இருக்கும் 'பங்காரு' . மாமன்னர்களும், அரசர்களும் வாழ்ந்த இடங்களில் நிச்சயமாக ஏகப்பட்ட தங்கம் மறைக்க பட்டிருக்கும். அப்படிபட்ட ஒரு இடம் தான், பங்காரு. யாராலும் கண்டுபிடிக்க முடியாத விதத்தில், பல்லாயிரம் கிலோ தங்கம் மறைக்கப்பட்டிருக்கிறது. அதை கண்டுபிடிக்க பல துப்புக்களும், வழிகளும் இருந்தாலும், அந்த தங்கத்தை கண்டுபிடிக்க முடிந்ததா என்பது தான் இந்த 35 நிமிடம் ஓடக்கூடிய 'பங்காரு' குறும்படத்தின் கதை....
சிபிராஜ் – நிகிலா விமல் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது

சிபிராஜ் – நிகிலா விமல் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது

News
தனித்துவமான கதைக்களங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சிபிராஜ், தற்போது அறிமுக இயக்குநர் வினோத் (இயக்குநர் V Z துரையின் இணை இயக்குநர்) இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாக இருக்கும் இந்த தலைப்பிடப்படாத படத்தை, 'பாஸ் மூவீஸ்' சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கிறார். நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் துவங்கியது. தொடர்ந்து 21 நாட்கள் இங்கு படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. "தற்போது நாங்கள் காஷ்மீரில் உள்ள குல் மார்க் மற்றும் பால் காம் பகுதிகளில், எங்கள் படத்தின் சில முக்கியமான காட்சிகளை  படமாக்கி  வருகின்றோம்.  கடுமையான பனி பொழிவின் காரணமாக இங்கு எல்லா பள்ளிகளுக்கும்  விடுமுறை அறிவிக்க  பட்டிருக்கிறது. எனினும் எங்கள் படக்குழுவினரின் முழு ஒத்துழைப்பால் நாங்கள் படப்பிடிப்...
CLOSE
CLOSE