Wednesday, November 25

Blog

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படப்பிடிப்பு 31.03.2017 துவங்குகின்றது

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படப்பிடிப்பு 31.03.2017 துவங்குகின்றது

News
அருள்நிதி - மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் - 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. ஒரே இரவில் நடைபெறும் சம்பவத்தை மையமாக கொண்டு நகரும் இந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்க, 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி டில்லிபாபு தயாரிக்கிறார். அஜ்மல் மற்றும் ஆனந்தராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் பூஜை, இன்று (30.01.2017) 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' வளாகத்தில் நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இந்த பட பூஜையில், இதே நிறுவனத்துக்காக தற்போது  படங்கள்  இயக்கி வரும் இயக்குநர்கள் 'முண்டாசுப்பட்டி' ராம், சரவண் (மரகத நாணயம்) மற்றும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் குழுவினரான இயக்குநர் மு மாறன், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் டோரதி ஜெய் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.   ரசி...
‘அதி மேதாவிகள்’ திரைப்படம்  அரியர்ஸ் மாணவர்களுக்கு ஓர்  சமர்ப்பணம்

‘அதி மேதாவிகள்’ திரைப்படம் அரியர்ஸ் மாணவர்களுக்கு ஓர் சமர்ப்பணம்

News
நட்பையும்  நகைச்சுவையையும்  மையமாக கொண்டு  உருவாகி இருக்கின்றது, அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும்   'அதி மேதாவிகள்'  திரைப்படம். 'அப்சலூட் பிச்சர்ஸ்' சார்பில் மால்காம் தயாரித்து வரும் இந்த  'அதி மேதாவிகள்' திரைப்படத்தில் பிரபல தொகுப்பாளர் சுரேஷ் ரவி (அறிமுகம்) மற்றும் 'சதுரங்க வேட்டை' புகழ் இஷாரா நாயர் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது (கோலி சோடா) மற்றும் மாரி படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பது  குறிப்பிடத்தக்கது. "நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எங்கள் மேல் நம்பிக்கை வைத்து, இந்த படத்தை தயாரித்தது மட்டுமின்றி எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும்  பேராதரவாக இருந்த எங்கள் அதி மேதாவிகள் படத்தின் தயாரிப்பாளர் மால்காம் அவர்க...

’12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்திய விஷால்…!’

News
விஷாலை வைத்துப் படமெடுத்து அவமானப் பட்டேன்!-  ஒரு தயாரிப்பாளரின் கண்ணீர்க் குமுறல்! தன்னை வைத்துப் படமெடுத்த 12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர் விஷால் என்று கலைப்புலி எஸ். தாணு ஆவேசமாகப் பேசினார். அதற்கு சாட்சியாக சமர் படத்தை எடுத்து நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடு பத்திரிகையாளர்களிடம் செல்போனில் பேசினார். வரும் ஏப்ரல் 2- ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களம் இப்போது சூடு பிடித்துள்ளது. பரபரப்பான இத்தேர்தலில் முழு வீச்சில் களம் இறங்கியுள்ள 'தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி' சார்பில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் ஆய்வுக் கூடத்தின் திரையரங்கில் நடைபெற்றது. முன்னதாக இன்னொரு அணியாகப் போட்டியிட்ட கலைப்புலி ஜி சேகரன் மற்றும் ஆதரவாளர்கள் திடீர் திருப்பமாகப் போட்டியிலிருந்து விலகி முன்னேற்ற அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.. இது இ...
‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம்   கதாநாயகியாகிறார்  அபர்ணா பாலமுரளி

‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கதாநாயகியாகிறார் அபர்ணா பாலமுரளி

News
'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  'பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்'  -  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும்   திரைப்படம் '8  தோட்டாக்கள்'.  இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி வரும்  '8தோட்டாக்கள்' படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்  'மஹேஷிந்தெ பிரதிகாரம்' புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மாண்ட விளம்பர யுக்திகளால், ஒட்டுமொத்த தமிழக  ரசிகர்களின்  எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கும் '8 தோட்டாக்கள்' படத்தை, வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று 'சக்திவேல் பிலிம் பேக்டரி' சார்பில்   வெளியிடுகிறார்  சக்திவேல். "முழுக்க முழுக்க இளமையான திறமையாளர்களை கொண்டு உருவான இந்த 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் நான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்ச...
A Request to Superstar Rajinikanth and Ulaga Nayagan Kamal Hassan

A Request to Superstar Rajinikanth and Ulaga Nayagan Kamal Hassan

News
அன்புக்கும் மரியாதைக்குமுரிய தமிழ்சினிமாவின் அசைக்கமுடியாத அரசனாக நாங்கள் முடிசூட்டி வைத்திருக்கும் அய்யா சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு பணிவார்ந்த வணக்கங்கள்... நான் சுரேஷ் காமாட்சி. தமிழ் சினிமாவின் ஒரு சிறு தயாரிப்பாளர். உங்களை ஆச்சரியமாகப் பார்க்கும் கோடிக்கணக்கானவர்களில் கடைக்கோடியன். உங்களுக்கு எதையும் அறிவுறுத்தவோ வலியுறுத்தவோ தகுதியற்றவன். ஆனாலும் என்னைப் போன்றவர்களின் பரவலான ஆதங்கம் உங்களைச் சென்றடைய வேண்டுமே என்ற நோக்கத்திலும்,  சென்று சேரும் என்ற நம்பிக்கையிலும் எழுதுகிறேன். அய்யா, தாங்கள் பல நேரங்களில்  நீங்கள் செயல்படும் விதத்தில் நேர்மையானவராகவும், மக்களின் உணர்வுகளை சீராய்ந்து மதிப்பவராகவும் நடந்துவந்திருக்கிறீர்கள். மக்களை எந்தவிதத்திலும் உங்கள் புகழின் மூலமும் ஆளுமையின் மூலமும் பாதிக்கப்பட்டவர்களாக்க துணிந்ததேயில்லை. சின்னச் சின்ன முன்னெடுப்புகளை மேற்கொள்கையில்,...
மிஸ்டர் அண்ட் மிஸ் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017

மிஸ்டர் அண்ட் மிஸ் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017

News
சென்னையின் முன்னணி மாடலிங் நிறுவனங்களுள் ஒன்றான ‘சென்னை மாடல்ஸ்’, ‘மிஸ்டர் அண்ட் மிஸ் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017’ என்ற போட்டியை நடத்தியது. தகுதியும், திறமையும் கொண்ட மாடல்களைத் தேர்ந்தெடுப்பதோடு, புதியவர்கள் மாடலிங் துறையில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையிலும் இந்தப் போட்டி நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்தப் போட்டி, ரெஜிஸ்ட்ரேஷன், ஆடிஷன், கால் இறுதி, அரையிறுதி ஆகியவற்றைக் கடந்து, கடந்த 26ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற்றது. 64 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், இறுதிப்போட்டிக்கு 20 பேர் (ஆண்கள் 10, பெண்கள் 10) மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள டெக்கான் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், நடிகர்கள் ஷாம், சீமோன், தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ், சுரேஷ் காமாட்சி, பி.ஆர்.ஓ.க்கள் ஜான், வி.கே.சுந்தர், சங்கர், காஸ்டிங் டைரக்டர்ஸ் அருண் - ...
CLOSE
CLOSE