Blog
பாம்புச் சட்டை இயக்குநர் ஆடம்தாசனுக்கு இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டு!
பாம்புச் சட்டை படம் பார்த்துவிட்டு, அந்தப் படத்தை இயக்கிய ஆடம் தாசனுக்கு இயக்குநர் பா ரஞ்சித் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், முக்தா பானு உள்ளிட்டோர் நடித்த பாம்பு சட்டை படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இந்தப் படம் பார்த்த பலரும் இயக்குநர் ஆடம் தாசனைப் பாராட்டியுள்ளனர்.
சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்தார் பிரபல இயக்குநர் பா ரஞ்சித். பார்த்தவுடன் இயக்குநர் ஆடம்தாசனை நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
படம் குறித்து பா ரஞ்சித் கூறுகையில், "நல்ல சினிமா தரவேண்டும் என்ற ஆடம்தாசனின் முயற்சி படம் முழுக்க தெரிகிறது. அனைவரும் தியேட்டருக்குப் போய்ப் பார்க்க வேண்டிய படம் இது. மிகத் துணிச்சலான கதை, பாத்திரப் படைப்பு அருமை,", என்றார்....
அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் அஜ்மல் மற்றும் ஆனந்தராஜ்
அருள்நிதி - மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்கும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக தற்போது நடிகர்கள் அஜ்மல் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி டில்லி பாபு தயாரித்து, விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி அன்று ஆரம்பமாக இருக்கின்றது.
"ஆனந்தராஜ் சாரின் கதாபாத்திரம் எங்கள் படத்தின் கதைக்கு மேலும் பலம் சேர்க்கும். அவரின் உடல் பாவனைகளும், வசனங்களும் நிச்சயமாக ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க செய்யும். அருள்நிதி சார் - அஜ்மல் - ஆனந்தராஜ் சார் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி, நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை வெல்லும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'இரவுக்கு...
‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ கதாநாயகியாக ‘குக்கூ’ மாளவிகா நாயர்
'குக்கூ' படம் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவர்ந்து சென்றவர் மாளவிகா நாயர். தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் இருக்கும் இவர், தற்போது 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விநியோக துறையில் நிலையான வெற்றியை தழுவி வரும் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் (குறும்பட மற்றும் விளம்பர பட இயக்குநர்) இயக்குகின்றார். 'ராஜதந்திரம்' புகழ் வீரா கதாநாயகனாக நடிக்கும் இந்த அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படத்தில் மேட்லி ப்ளூஸ் இசையமைப்பாளராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
"நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகை தான் எங்கள் படத்தின் கதைக்கு ஏற்றவராக இருக்க முடியும். அந்த வகையில் எங்கள் அனைவரின் மனதிலும் தோன்ற...
‘பலூன் படத்தின் உரிமையை மொத்தமாக வாங்கி இருக்கின்றது ‘Auraa Cinemas’
ஒரு தரமான திரைப்படத்தின் வெற்றிக்கு, சரியான விநியோகமும், பிரம்மாண்ட விளம்பரங்களும் மிக அவசியம். அத்தகைய சிறப்பம்சங்களை சிறப்பாக பெற்று, விநியோக துறையில் சிறந்து விளங்கி கொண்டிருக்கும் 'Auraa Cinemas' மகேஷ் கோவிந்தராஜ், தற்போது ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பலூன் படத்தின் உரிமையை ஒட்டுமொத்தமாக வாங்கி இருக்கிறார். '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த 'பலூன்' படத்தை சினிஷ் இயக்கி இருக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் 'பலூன்' படத்தின் முதல் பதிப்பு உரிமை, FMS, satellite மற்றும் சர்வதேச விநியோக உரிமை என அனைத்து உரி...
பார்த்தவர்களை வியக்க வைத்த ஆல்பம்!
இயக்குநர்களின் முதல் கதாநாயகன் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள்தான் என்று
'ரஜினி முருகன்' புகழ் இயக்குநர் பொன்ராம் ஒரு விழாவில் பேசினார் .இதோ இது
பற்றிய விவரம்:
ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய 'ஒரு காதலின் புதுப்பயணம்' ஆல்பத்தின்
வெளியீட்டு விழா இன்று பிரசாத் ஆய்வுக்ககூடம் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் ஆல்பத்தை பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி,பிரஜின்
,நிஷாந்த் தயாரிப்பாளர் இளையஅரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
*விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசும்போது*
" இந்தக் குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது
வாய்ப்பு தரமுடியவில்லை .அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால்
அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.
புதிய படமும் வந்து விட்டது. ஒருவரை நம்பி படவாய்ப்பு கொடுப்பது என்பது
சாதாரணம் அல்ல. முத...
Director Bharathiraja about Naalu Perukku Nallathuna Ethuvum Thappilla
https://www.youtube.com/watch?v=hyfmxOVNSGo&feature=youtu.be


