Blog
வைகை எக்ஸ்பிரஸ் _ விமர்சனம்
படத்தின் தலைப்பே சொல்லிவிடும் கதைக்களம் எதுவென்பதை...
சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் ஒரு பெண் காெலை செய்யப்படுகிறார். அடுத்த கூப்பேயில் பயணித்த பெண் தற்கொலை செய்து கொள்கிறார். மூன்றாவதாக ஒரு பெண்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட, அந்தப் பெண் உயிர் தப்பினாலும் கிட்டத்தட்ட கோமா நிலைக்குச் சென்று விடுகிறார்.
இதே ரயிலில் தீவிரவாதி ஒருவனும் பயணம் செய்கிறான். நடந்த கொலைகளுக்கு இவன்தான் காரணமாக இருப்பானோ என்று ஆரம்பத்தில் தோன்றும் ஐயப்பாடு சில நிமிடங்களிலேயே மறைந்து விடுகிறது.
கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க ரயில்வே துறையின் சிறப்புப் பிரிவு அதிகார் ஆர்.கே. களம் இறங்கியதும் கதை சூடு பிடிக்கிறது. சும்மா சொல்லக்கூடாது...வைகை எக்ஸ்பிரஸ் ரயில்தான் என்றாலும் விறுவிறு வேகத்தில் ஜெட் அளவுக்ககு இருக்கிறது.
எண்பதுகளில் தொடர்சியாக வெளி...
லைஃப் (LIFE) -ஆங்கிலம்
உருவாக்கம்-சோனி(Sony) பிக்சர்ஸ்
அறிவியல் ரீதியான படங்கள் எப்போதுமே தொழில்நுணுக்கத்தில் சிறப்பாக இருக்கும். சமீபத்திய வெளியீடான இந்த 'லைஃப்' திரைப்படமும் அது மாதிரியான படம்தான். கணிப்பொறி தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவற்றை திரையில் வடித்துள்ள விதம் பாராட்டதக்கது.
டானியல் எஸ்பினோசா(Daniel Esspinosa) வின் இயக்கத்தில் அமைந்துள்ள இப்படம், இகில உலக விண் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை சேர்ந்த ஒரு குழு, மார்ஸ்(Mars) கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய முற்படும் வேளையில், விசித்திரமான உருவம் கொண்ட ஓர் உயிரினம், அவர்களை எதிர்நோக்குகிறது!
எதிர்பாராத விதத்தில் அவர்களை, அது தக்க முற்படுகிறது! அவர்களை, ஒருவர் பின் ஒருவராக தாக்கி, கொன்று விடுகிறது! ஆராய்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட அவர்களது பணி, ஆபத்தை கொண்டுதருகிறது! அவர்கள் பயணிக்கும் விண் களத்தில் புகுந்...
Poet Manushya Puthiran talks about Vizhithiru
https://www.youtube.com/watch?v=VT4iA9EuNCA&feature=youtu.be
தென் திரையுலகின் வர்த்தக நாயகி ஸ்ருதி ஹாசன்
தெலுங்கில் தொடர்ந்து 6 வெற்றி படங்களையும், கடந்த 2016 ஆம் ஆண்டில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் 4 தொடர் வெற்றி படங்களையும் கொடுத்த ஸ்ருதி ஹாசன், தற்போது தமிழிலும் - தெலுங்கிலும் இரண்டு மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்து, இந்த 2017 ஆண்டை வெற்றிகரமாக துவங்கி இருக்கிறார். தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து, வர்த்தக உலகின் நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசனுக்கு, சமீபத்தில் வெளியான பவன் கல்யாணின் 'கட்டமராயுடு' திரைப்படம் மேலும் பெருமையை சேர்த்துள்ளது.
இதை பற்றி திரையுலக வர்த்தக துறையில் இருக்கும் நிபுணர் ஒருவர் கூறுகையில்:
"வர்த்தக உலகில் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை பதித்து இருக்கும் ஸ்ருதி ஹாசன், கட்டமராயுடு படம் மூலம் தொடர்ந்து தெலுங்கில் ஆறு வெற்றி படங்களை கொடுத்து இருக்கும் கதாநாயகியாக உருவெடுத்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, தமிழ் - தெலுங்கில் வெளியான '...
”8 தோட்டாக்கள் படத்திற்காக தேசிய விருதை வாங்குவார் எம் எஸ் பாஸ்கர்” – நடிகர் நாசர்
இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் திரைப்படம் '8 தோட்டாக்கள்'. 'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் 'பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்' - ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த '8 தோட்டாக்கள்' திரைப்படத்தை, 'சத்திவேல் பிலிம் பேக்டரி' சார்பில் சக்திவேல் தமிழகமெங்கும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் 'மஹேஷிந்தெ பிரதிகாரம்' புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் இசை உரிமையை 'யு 1 ரெகார்டஸ்' நிறுவனத்தின் சார்பில் யுவன்ஷங்கர் ராஜா வாங்கிய அடுத்த கணமே, இந்த படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து விட...
இசையமைப்பாளர் Mr. X இன் பிண்ணனியில் இருக்கும் மர்மம் என்ன?
தமிழக ரசிகர்கள் உள்ளங்களில் தற்போது காட்டுத் தீ போல பரவி வரும் ஒரு கேள்வி, தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தான். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் 'மறு வார்த்தை பேசாதே' பாடலும் ரசிகர்கள் மத்தியிலும், இசை பிரியர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற ஆரம்பித்ததுமே, இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தேடும் பணியில் ரசிகர்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் தனுஷ், - மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 'தள்ளி போகாதே' புகழ் தாமரையின் வரிகளில், சிட் ஸ்ரீராமின் மெய் சிலிர்க்கும் குரலில் உதயமான 'மறு வார்த்தை' பாடல் , இசை பிரியர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களின் உள்ளங்களையும் கவர்ந்து சென்று இருக்கின்றது.
M...
‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த படைப்பு – ‘டிப்பன் பாக்ஸ்’
குறுகிய நேரத்தில் ஒரு வலுவான கருத்தை ரசிகர்களின் உள்ளங்களில் விதைக்க செய்வது தான், குறும்படங்களின் சிறப்பம்சம். அத்தகைய தரமான குறும்படங்களையும், அதன் படைப்பாளிகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவது மட்டுமின்றி, தமிழ் திரையுலகிற்கும் அறிமுகப்படுத்தும் பணியை செம்மையாக செய்து வருகின்றது, இந்தியாவில் குறும்படங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் 'பெஞ்ச் பிலிக்ஸ்'. இவர்கள் வெளியிட்டிருக்கும் அடுத்த குறும்படம், கார்த்திக் கோபால் இயக்கி இருக்கும் 'டிப்பன் பாக்ஸ்'.
இந்த உலகத்திலேயே கள்ளம் கபடம் இல்லாத மனித பிறவிகள் குழந்தைகள் தான். ஆனால் அவர்களிடமும் இந்த உலகம் கொடுமையான விதத்தில் தான் நடந்து கொள்கின்றது. அந்த கொடுமை ஒரு சாதாரண டிப்பன் பாக்ஸில்' இருந்து கூட ஆரம்பிக்க கூடும். இது தான் 18 நிமிடம் ஓடக்கூடிய இந்த 'டிப்பன் பாக்ஸ்' படத்தின் ஒரு வரி கதை....




