Blog
காதலை கவித்துவமாக கூறும் “ஏனோ வானிலை மாறுதே”
வெளியான நாள் முதல் யூ டியுபில் தொடர்ந்து முதல் #10 Trendingக்குள் வலம் வந்த Youthful Magic "ஏனோ வானிலை மாறுதே" குறுத்திரை படத்தை வெள்ளித்திரை தரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி ரசனையாக இயக்கியுள்ளார் இயக்குனர் புனித்.
ஒவ்வொரு Shotம் Sweetஅஹ் Cuteஅஹ் கண்ணுக்கு குளிர்ச்சியா ஒளிப்பதிவு செய்துள்ளார் வினோத்ராஜேந்திரன். புனித்தின் கதை களத்திற்கும் வினோத்தின் ஒளிப்பதிவிற்கும் இணைந்து காவியமாய் அமைந்துள்ளது சித்துகுமாரின் இசை.
தமிழ்குமரனின் எடிட்டிங் ஏனோ வானிலை மாறியதை எதார்த்தமாய் காட்டியிருக்கிறது. இந்த ஒட்டு மொத்த குழுவின் உன்னத உழைப்பு மக்களின் ஆதரவிலும் படத்தின் தரத்திலும் தெரிகிறது.
இன்று இணையத்தை ஆட்கொண்டிருக்கும் "ஏனோ வானிலை மாறுதே" இளைஞர்கள் மனதில் "அழகாய் காதல் தூருதே"
ஏனோ வானிலை மாறுதே குறும்படம் காதலர்களை காதலுக்கும் கடத்தி செல்லும் கவிதை.
வெளியிட்டதிலிருந்து 9 நாட்களில் ...
‘யாக்கை’ திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி வெளியாகிறது
குழந்தை வேலப்பன் இயக்கத்தில், கிருஷ்ணா - சுவாதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'யாக்கை' திரைப்படம், வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியாகின்றது என்பதை உறுதிப்படுத்தினார், 'யாக்கை' படத்தின் தயாரிப்பாளரும், 'பிரிம் பிச்சர்ஸ்' நிறுவனத்தின் நிறுவனருமான முத்துக்குமரன்.
"யாக்கை படத்தின் இறுதி பதிப்பை பார்த்தவர்கள், எங்களுக்கு ஒரு விதமான புத்துணர்ச்சியை அளித்துள்ளனர். உன்னதமான தொழிலாக அனைவராலும் கருதப்படும் மருத்துவ துறையில் நடக்கும் மோசடிகளை இந்த யாக்கை படம் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருக்கின்றோம்.மருந்துகள் மீதும், மருத்துவத்தின் மீதும், குருட்டுத்தனமான நம்பிக்கை வைத்து ஏமாறும் மக்களுக்கு சிறந்ததொரு விழிப்புணர்வு திரைப்படமாக எங்களின் யாக்கை இருக்கும். இளைஞர்கள் பலர் இணைந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் இந்த நாட்களில் வெளியாகும் எங்களின் யாக்கை திரைப்படம், ...
“465” Movie Official Tamil Teaser
https://www.youtube.com/watch?v=vJQL4-AufiI&feature=youtu.be
யுவன்ஷங்கர் ராஜாவின் இருபது வருட இசை பயணம்
யுவன்ஷங்கர் ராஜா திரையுலகில் அடியெடுத்து வைத்து இன்றுடன் (27.02.2017) இருபது ஆண்டு காலம் நிறைவு பெறுகின்றது. அவருடைய இசை, பல நட்சத்திரங்களின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம். புகழின் உச்சியில் இருக்கும் யுவன்ஷங்கர் ராஜா, இந்த மகிழ்ச்சிகரமான நாளை எப்போதும் போல, எளிமையாக கொண்டாடினார்.
"நான் இப்போது இந்த நிலையில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் என்னுடைய ரசிகர்களின் அன்பும், இசை பிரியர்களின் ஆதரவும் தான். அவர்களுக்கு என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். இருபது வருடங்கள் நிறைவு பெற்றாலும், நேற்று தான் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பது போல நான் உணருகின்றேன். இந்த இருபது வருட காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஏற்றங்களும் இறக்கங்களும், என்னை எந்த விதத்திலும் பின்னடைய செய்யவில்லை. இந்த வருடங்களின் எண்ணிக்கையை...
சிபிராஜின் ‘கட்டப்பாவ காணோம்’ மார்ச் 17 ஆம் தேதி வெளியாகிறது.
சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'கட்டப்பாவ காணோம்'. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி, 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி வெளியாகின்றது.
"இதுவரை இது போன்ற கற்பனை கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் தமிழ் படங்களில், நாய், பூனை, குரங்கு, யானை போன்றவைகளை தான் ரசிகர்கள் பார்த்து இருப்பார்கள். ஆனால் எங்களின் 'கட்டப்பாவ காணோம்' படத்தில் முதல் முறையாக அவர்கள் ஒரு உயிருள்ள மீன், மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை பார்க்க போகிறார்கள். சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின்...
விஜய் சேதுபதி வெளியிட்ட ‘பீச்சாங்கை’ படத்தின் டீசர்
அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி, 'கர்ஸா என்டர்டைன்மெண்ட்' சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் 'பி ஜி மீடியா ஒர்க்ஸ்' சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் 'பீச்சாங்கை'. சமீபத்தில் விஜய் சேதுபதி வெளியிட்ட இந்த 'பீச்சாங்கை' படத்தின் டீசர், வெளியான சில நாட்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. புதுமுகங்கள் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
"தற்போது ஒட்டுமொத்த உலகினரும், ஆஸ்கார் வருது பெற்ற பல திறமையான கலைஞர்களை பாராட்டி கொண்டிருக்கிறது. இன்றைய நாட்களில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஏனென்றால், உலக சினிமாவால், அவர்களின் ரசனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது. அந்த வகையில், முற்றிலும் வித்தியாசமான கதைக்...


