அறிமுக இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகும் "எட்டு தோட்டாக்கள்" வளர்ந்து வரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஈன்று வரும் படம் ஆகும்.புது முகங்கள் வெற்றி மற்றும் அபர்ணா பால முரளி இணையாக நடிக்க இவர்களோடு நாசர், எம் எஸ் பாஸ்கர், அம்மா creations சிவா,mime கோபி, மீரா மிதுன் ஆகியோர் நடிக்க ,புதிய இசை அமைப்பாளர் கே எஸ் சுந்தர மூர்த்தி இசை அமைக்க, புதிய பட நிறுவனமான வெற்றிவேல் சரவணா சினிமாஸ் மற்றும் பிக் பிரிண்ட் pictures இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் டீசரை
நாளை 27 பிப்ரவரி மாலை 6 மணிக்கு இயக்குனர் வெற்றி மாறன் வெளி இட உள்ளார். "வெற்றி மாறன் சார் எனக்கு ஒரு ஆசான். நான் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற போது அவரை சந்தித்து பேசியது என் மனதில் நீங்கா இடம் பெற்று உள்ளது. இப்பொழுது அவரே என் முதல் படத்தின் டீசரை வெளி இடுவது எனக்கு மிக மிக பெருமை. படப்பிடி...
கிரைம் - திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் "களவு" படத்தில் கலையரசன், கருணாகரன், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், மைம் கோபி மற்றும் அபிராமி ஐயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எதிர்பாராத சம்பவங்களால் மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு தம்பதிகளின் வாழ்க்கை மாறுகின்றது. இது தான் "களவு" படத்தின் ஒரு வரி கதை. நம் சமுதாயத்தில் நடைபெறும் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் "களவு" படம், சென்னையில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய நண்பர்களோடு இருக்கும் போது குதூகலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஐ டி ஊழியர் கலையரசன், தன்னுடைய வீட்டிற்கு சென்றவுடன் முழுவதுமாக மாறி விடுகிறார். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு தான் "களவு" படத்தின் கதை நகர்கின்றது. இரவு பணிகளில் வேலை பார்க்கும் ஒரு BPO நிறுவன ஊழியராக கருணாகரன் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருட...
சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற திரைப்படங்கள் என்றால் நத்தை வேகத்தில் நகரும் கதையும், பொறுமையை சோதிக்கும் காட்சியமைப்புகளும் கொண்டதாக இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றியமைத்திருக்கிறது அருண் சிதம்பரம் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் கனவு வாரியம் திரைப்படம். கணிதத்தில் ஆர்வமாக இருந்த ராமானுஜனைப்போல் அறிவியலில் மிகுந்த ஆர்வம் காட்டும் மாணவனாகத் திகழ்கிறார் அருண் சிதம்பரம். ஆனால் அந்த ஆர்வத்துக்கு நமது கல்விமுறை சரியான வழிகாட்டியாக இருந்து விடுமா என்ன... விளைவு... ரேடியோ போன்ற மின்சாதனப் பொருள்களின் பழுதுகளை சரி செய்துதரும் கடையில் வேலைக்கு சேர்கிறார். இந்த சமயத்தில் மிகக்கடுமையான மின்வெட்டு காரணமாக ஊரே மிகவும் பாதிக்கப்படுகிறது. மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வுகாண முயற்சிக்கிறார் அருண். தகவல் தொழில் நுட்பத்துறையில் கை நிறைய சம்பாதித்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, ...
Kalavu is a crime thriller , revolving around an unforeseen incident that binds and changes the life of 3 youngsters and a couple . Set in the suburbs of chennai, the story narrates real incidents that take place in our society .
Cast: Kalaiarasan, Karunakaran, Pandiyarajan ,Chinni Jayanth, Mime Gopi and Abhirami iyer
play the lead.
The story takes us through the contrasting lives of kalaiarasan , a young man working in IT. He is cheerful as ever while he is with friends and turns into an introvert while at home .
Karunakaran plays the role of a BPO employee working night shifts who mostly keeps to himself . His actions seem bizarre but there are deeper meanings to it.
This thriller is Directed by debutant Murali Karthik who has made several short films in the past and has al...
தரமான வெற்றி திரைப்படங்கள் மூலம் விநியோக துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பதித்து இருப்பவர் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ். இவர் தற்போது 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' திரைப்படம் மூலம் முதல் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 'ராஜ தந்திரம்' புகழ் வீரா நடிக்கும் இந்த 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் (குறும்பட மற்றும் விளம்பர பட இயக்குநர்) இயக்கி வருகிறார். இந்த படத்தின் தலைப்பை ஒரு தனித்துவமான காணொளி மூலம் படக்குழுவினர் உருவாக்க, அதை சமீபத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டார். வெளியான சிறிது நேரத்திலேயே இந்த காணொளியும், படத்தின் தலைப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
"அரசியில் கதைக்களத்தில் உருவாகும் இந்த படம், முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் உருவாகின்றது. இ...
ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிக்க வடிவுடையான் இயக்கத்தில் அம்ரிஷ் இசையில் பரத், நமீதா, இனியா சிருஷ்டி டாங்கே நிக்கேஷ் ராம் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள பொட்டு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிப்ரவரி 25 ம் தேதி மாலை கோலாலம்பூரில் நடைபெற்றது...
விழாவில் நமீதா, இனியா, டாங்கே, அம்ரிஷ் நிகேஷ்ராம் மற்றும் படத்தின் இயக்குனர் வடிவுடையான், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் , ஜோன்ஸ் நடிகை ஜெயசித்ரா பாடலாசிரியர் சொற்கோ ஒலிப்பதிவாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டார்கள்...ஆயிரக்கணக்கான மக்களின் கைத் தட்டல்களுக்கிடையே படத்தின் இசை வெளியிடப் பட்டது...
விழா மேடையில் இசையமைப்பாளர் அம்ரீஷ் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது....
'யோகி & பார்ட்னர்ஸ்' சார்பில் இசையமைப்பாளர் - பாடகர் ரெஹானா தயாரித்து இருக்கும் திரைப்படம், 'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' . கற்பனை கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ரெஹானாவின் நண்பர்களான சுபா மற்றும் ஆசீர்வாதம் ஆகியோர் இணை தயாரிப்பு செய்திருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று ஜெயம் ரவி வெளியிட்ட இந்த படத்தின் டிரைலர், யுடியூப் டிரெண்டிங் வரிசையில் இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் வி. விக்னேஷ் கார்த்திக் கதை எழுதி இயக்கி இருக்கும் 'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' படத்தில் புதுமுகம் அசார் மற்றும் 'சூது கவ்வும்' புகழ் சஞ்சிதா ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களிலும், யோகி பாபு, மன்சூர் அலி கான், 'வழக்கு என் 18/9' புகழ் முத்துராமன், உமா பத்மநாபன், 'இருக்கு ஆனா இல்ல' புகழ் ஏதேன், சிங்கப்பூர் தீபன், ராமர், டாக்டர் ஷர்மிலி மற்றும்...