சிவகார்த்திகேயன் – மோகன் ராஜா கூட்டணியில் ‘வேலைக்காரன்’
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தொழிலாளர்கள். அந்த வகையில் ஒவ்வொரு ரசிகர்கரையும் உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் பணியை தங்களின் கடின உழைப்பால் சிறப்பாக செய்து வருகின்றனர் கலைஞர்கள். அப்படி ஒரு கலைஞனாக உருவெடுத்து, தன்னுடைய அயராத உழைப்பால் கடந்த சில வருடங்களில் வெற்றி சிகரத்தை அடைந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படத்திற்கு 'வேலைக்காரன்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று இந்த தலைப்பை பற்றிய அறிவிப்பு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் - ஆர் டி ராஜா கூட்டணியில் உருவான 'ரெமோ' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது அவர்கள் மீண்டும் இந்த வேலைக்காரன் படத்திற்காக, அதுவும் மோகன் ராஜா போன்ற தலைச் சிறந்த இயக்குநருடன் இணைந்து இருப்...








