Tuesday, November 24

Blog

.ஹாலிவுட் திரைப்படத்திற்கு தமிழரால் இசையமைக்கப்பட்ட தமிழ்பாடல்

.ஹாலிவுட் திரைப்படத்திற்கு தமிழரால் இசையமைக்கப்பட்ட தமிழ்பாடல்

News
பரபல ஹாலிவுட் நட்சத்திரம் மில்லா ஜோவோவிச் நடிப்பில் கடந்த 15 வருடமாக வெளிவந்து கொண்டிருக்கும் ரெசிடனட் ஈவில் தொடரின் நிறைவு பகுதி திரைப்படமாக பிப்ரவரி 3ஆம் தேதி வெளிவரவுள்ளது. ரெசிடனட் ஈவில், ஃபைனல் சாப்டர் (Resident Evil ; Final Chapter ) எனப் பெயரிடப்பட்டுள்ளது, சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. அநியாயத்திற்கான பெரும்போராட்டம் இனிதே முற்றுப்பெறுகிறது. ஆலிஸ் கதாப்பாத்திரத்திற்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி மக குறைவு. பல்வேறு ஆக்‌ஷன் காட்சிகளின் அநாயசமும், கடினமான பல்வேறு படபடிப்பு இடங்களின் தாக்கமும் எங்களை திடமாக்கியுள்ளது. உலகத்தை காக்கும் எண்ணம் பண்பும், பரிவும் கற்றுக்கொடுத்துள்ளது. ஆக்‌ஷன் அதிரடி நிறைந்த மற்றமொரு பொழுதுபோக்கு திரைப்படம் மக்கள் பார்வைக்கு விரைவில். மேலும், சோனி பிக்சர்ஸ் நிறுவனம் 'கட்டபாவ காணோம்' 'இனிமே இப்படிதான்' புகழ் சந்தோஷ் தயாநிதி இசையில் சுனி...
இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக அசோக் அமிர்தராஜ்

இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக அசோக் அமிர்தராஜ்

News
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரும், சர்வதேச விம்பிள்டன் டென்னிஸ் வீரருமான அசோக் அமிர்தராஜ் ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவில், நீடித்த வளர்ச்சி திட்டங்களுக்கான இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹைட் பார்க் எண்டர்டெய்ன்மெண்ட் குழுமத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கும் திரு. அமிர்தராஜ், ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவின் முதல் தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.   சர்வதே அளவில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான அஷோக் அமிர்தராஜ் தனது 30 வருட திரையுலக வாழ்வில் 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். அவரது வெற்றிகரமான திரை வாழ்க்கையில் உலகளாவிய பாராட்டுகளையும், 2 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வசூலையும் அவர் படங்கள் பெற்றுள்ளன. இந்தியாவையும், ஹாலிவுட்டையும் திரைப்படம் மற்றும் ஊடகம் மூலமாக இணைப்பதில் முன்னோடியாக இருந்தவர் அமிர்தராஜ்.   இந்த கவுரத்தை ஏற்ற...

நயன்தாராவின் ‘டோரா’ படத்திற்குக் குரல் கொடுத்த அனிருத்

News
நேமிசந்த் ஜபக் சார்பாக தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், தாஸ் ராமசாமி இயக்கத்தில், நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'டோரா'. விவேக் - மெர்வின் இசையமைப்பில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'எங்க போற டோரா' மற்றும் 'வாழ விடு' ஆகிய பாடல்கள் தனித் தனி ட்ராக்காக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் குரலில் 'ரா ரா ரா' எனும் பாடல் வெளியாக இருக்கிறது. மிகவும் ஆக்ரோஷமான இந்தப் பாடல்,  தீய சக்திகளை நயன்தாரா எப்படி வெல்கிறார் என்ற காட்சியமைப்பில் உருவாகியிருக்கிறதாம். அனிருத்தின் வசீகரமான குரலும், நயன்தாரா பேசியுள்ள வசனங்களும் பாடலுக்கு வலு சேர்த்துள்ளதாகக் கூறுகிறார்கள். மேலும் புதிய முயற்சியாக ‘டோரா’ படத்தின் இசைத் தொகுப்பில் படத்தின் பிண்ணனி இசை மற்றும் தீம் மியூசிக் உள்ளிட்டவை இடம் பெற உள்ளதாம். ...

நான்கு விருதுகளை பெற்று இருக்கின்றது, இயக்குநர் பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’ திரைப்படம்

News
'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபுதேவா - டாக்டர் கே கணேஷ் மற்றும் 'திங்க் பிக் ஸ்டுடியோஸ்' சார்பில் இயக்குநர் விஜய் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் 'சில சமயங்களில்'. இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி,  பல சர்வேதச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற இந்த திரைப்படம் தற்போது 'ஜெய்ப்பூர் சர்வேதேச திரைப்பட விழாவில்' மூன்று விருதுகளையும், சென்னை சர்வேதச திரைப்பட விழாவில் ஒரு விருதையும் பெற்று இருக்கின்றது. பிரகாஷ் ராஜ், நாசர், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரங்களிலும், வருண் மற்றும் சண்முகராஜன் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் இந்த 'சில சமயங்களில்' திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. "விருது பெறுவது என்பது உழைப்புக்கும் சிந்தனைக்கும் கிடைக்கும் அங்கீகாரம்  ஆகும். திறமையான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப க...

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘டியூப்லைட்’ படத்தை உருவாக்கி இருக்கின்றோம்”

News
திரையுலகை பொறுத்தவரை படைப்பாற்றல் என்பது மிக மிக முக்கியம். உலக சினிமா மூலம் தங்களின் ரசனைகளை வளர்த்துக்கொண்டே போகும்  ரசிகர்கள், தங்களின் எதிர்பார்ப்புகளையும்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றனர். அப்படி ஒரு தனித்துவமான கதையம்சத்தில் உருவாகி இருக்கின்றது,  'ஆஸ்ட்ரிட்ச் மீடியா புரொடக்ஷன்' சார்பில்  ரவி நாராயணன் தயாரித்து, அறிமுக இயக்குநர் இந்த்ரா இயக்கி நடித்திருக்கும் 'டியூப்லைட்'  திரைப்படம். புதுமுகங்கள் இந்த்ரா - அதித்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த 'டியூப்லைட்'  திரைப்படத்தில் நடிகர் பாண்டியராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்திலும், 'டம்மி டப்பாசு' புகழ் பிரவீன் பிரேம் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமின்றி இசையமைப்பாளர் இந்த்ரா, ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் (ராம்ஜியின் உதவியாளர்), படத்தொகுப்பாளர் சி எஸ் பிரேம் (குற்றம் கடிதல்), கல...
‘எமன்’ திரைப்படம் மூலம் அரசியலில் கால் பதிக்கிறார் விஜய் ஆண்டனி

‘எமன்’ திரைப்படம் மூலம் அரசியலில் கால் பதிக்கிறார் விஜய் ஆண்டனி

News
எதிர்மறையான தலைப்புகளை கொண்டு, கலை களத்தில் வெற்றிகளை குவித்து வரும் நடிகர் - இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் 'எமன்' திரைப்படம் மூலம் தன்னுடைய இமாலய  வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார். வர்த்தக உலகினரின் நம்பிக்கைக்குரிய நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி, இந்த 'எமன்' திரைப்படம் மூலம் முதல் முறையாக அரசியல்வாதி அவதாரம் எடுத்து இருக்கிறார். விஜய் ஆண்டனி - மியா ஜார்ஜ் நடிப்பில்,  'நான்' படப்புகழ் ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் 'எமன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  வெளியான கொஞ்சம்  நாட்களிலேயே 'பேஸ்புக் டிரெண்டிங்' வரிசையில் முன்னிலை வகித்தது மட்டுமின்றி, 'யூடூபில்'  ஏறக்குறைய ஆறு லட்சம்  பார்வையாளர்களை பெற்று, யுடியூப் டிரெண்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தையும்  பெற்று இருக்கின்றது இந்த ...
ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் !

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் ‘இதுதாண்டா ஜல்லிக் கட்டு ‘ பாடல் !

News
ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில் இசை அமைப்பாளர் சாம் டி ராஜ் இசையில்,  பத்திரிகையாளர்  சு. செந்தில் குமரனின் எழுத,  விஜயலட்சுமி, உத்ய, ஷரவன் ஆகியோர் பாடிய இதுதாண்டா ஜல்லிக்கட்டு என்ற கம்பீரமான பாடலை சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர்  யூ டியூபில் வெளியிட்டு வாழ்த்தினார் . இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வி இசட் துரையும் கலந்து கொண்டார்.இது பற்றிய விவரம் பின் வருமாறு, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற  முழக்கத்தின் மூலம் சக மனிதன் மேல்  உலகளாவிய நட்பு காட்டிய இனம் தமிழ் இனம் . விலங்குகளிடத்தில்  அதிலும் விவசாயம் மூலம் தனக்கு உதவும் காளை , மாடு உள்ளிட்ட விலங்குகளிடத்தில் அவன் காட்டும் நேசம் கலந்த நன்றியின் நேரிய வடிவமே மாட்டுப்  பொங்கல் . அந்த மாட்டுப் பொங்கலை ஒட்டி தனக்கு வாழ்நாள் முழுக்க உதவும் காளை மாடுகளை கம்பீரப்படுத்தி  தானும் கம்பீரப் படுவதற்காக தமிழன் நடத்தும...
விஜயகுமார் அறிக்கை

விஜயகுமார் அறிக்கை

News
நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இந்நாள் வரை எனக்கும் என் நடிப்பில் வெளிவந்த படங்களுக்கும் தாங்கள் தொடர்ந்து அளித்துவரும் பேராதரவிற்கு எனது இதயம் கனிந்த நன்றிகள். நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்க கோரி போராடும் நம் இளைய சமுதாயத்தினரின் வேகத்தையும், விவேகத்தையும் பார்க்கையில் எனக்கு பெருமையாவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நான் 1976ம் வருடம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த தாயில்லா குழுந்தை படத்தில் கதாநாயகனாக நடித்தது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாகும். அவ்வருடம் தணிக்கை குழு படங்களில் சண்டைக்காட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் தாயில்லா குழுந்தை படத்தின் முதல் காட்சியும் கடைசி காட்சியும் காளை மாட்டை நான் அடக்கும் காட்சி படமாக்கப்ப...
CLOSE
CLOSE