Sunday, November 29

Blog

ஆந்தணி தாசனின் சுயாதீன தமிழ் பாடல்!

ஆந்தணி தாசனின் சுயாதீன தமிழ் பாடல்!

News
ஆந்தணி தாசனின் தமிழ் இண்டி சூப் பாடல் “போனாலே போனாலே” – பிரேக்-அப்புகளை நகைச்சுவையுடன் சிந்தனையூட்டும் பாடல் மே 28-ஆம் தேதி வெளியாகிறது* தன் முதல் தமிழ் இண்டி ஹிட் “காதல் ஊத்திகிச்சு” எனும் வெற்றிப் பாடலுக்குப் பிறகு, ஸ்வான் ஸ்டூடியோஸ் தனது இரண்டாவது இயல்பான சிங்கிளான “போனாலே போனாலே” மூலம் திரும்பி வந்துள்ளது — இதயம் நிறைந்த உணர்வுகளும் கூர்மையான நகைச்சுவையும் கலந்த ஒரு புதிய பிரேக்-அப் பார்வையை இந்த பாடல் முன்வைக்கிறது. இந்தப் பாடலின் மையக் கரு, காதல் முறிவுக்குப் பிறகான உணர்ச்சி அமுக்கங்களை சித்தரிக்கிறது. தனது தோழரான கலைஞரிடம் தன் இதயவலி பற்றி ஒரு பாடலாகக் கொண்டு வரக் கோரும் ஒரு இளைஞனின் பார்வையில் கூறப்படும் இந்த கதை, காதலில் முழுமையாக விழுந்து பின்னர் தனியாக விலகியவர்களுக்கெல்லாம் நெருக்கமாகத் தோன்றும். இசை ஒலிப்புத்தாக்கம் கீர்த்தன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் ஆன்ம...
ஸ்கூல் _ விமர்சனம்

ஸ்கூல் _ விமர்சனம்

Reviews
வெற்றி தோல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல... எதையும் சுலபமாக எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்பதை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உணர்த்துவதற்கு உருவாக்கப்பட்ட படம் ஸ்கூல். இரண்டாம் இடத்தில் உள்ள தனது பள்ளியை முதல் இடத்திற்கு கொண்டுவர,  அதன் தாளாளர் முயற்சிக்கிறார். இதற்காகவே பள்ளியின் தலைமை ஆசிரியர் பக்ஸ் பகவதி பெருமாள் 'மைண்ட் செட் ஆஃப் சக்சஸ்' என்ற நூலை எழுதி வெளியிடுகிறார். தலைமை ஆசிரியர் எதிர்பார்த்த நேர்மறை சிந்தனைக்கு மாறாக,  இந்த நூல் எதிர்மறை சிந்தனைகளை மாணவர்கள் இடையே விதைக்கிறது. தொடர்ந்து பல அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. மாணவ மாணவியர் பலரின் உயிரை பலி வாங்கும் அளவுக்கு நிலைமை செல்கிறது. பள்ளியில் உலவும் ஆவிகளை கட்டுப்படுத்தி, அங்கு நடக்கும் அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக சாமியார் ஆர்கே வித்யாதரன் வருகிறார். அவரது முயற்சி வெற்றி அடைந்ததா இல்லையா என்பது...
விக்ராந்த் – சோனியா அகர்வால் கூட்டணியில் உருவான ‘ வில்’!

விக்ராந்த் – சோனியா அகர்வால் கூட்டணியில் உருவான ‘ வில்’!

News
விக்ராந்த் - சோனியா அகர்வால் கூட்டணியில் உருவான ' வில் 'பட டீஸர் வெளியீடு! தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான விக்ராந்த்- சோனியா அகர்வால் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் 'வில் 'எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான அருண் விஜய் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தின் உருவாகியுள்ள 'வில்' திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன் , 'லொள்ளு சபா' சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். டி. எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடிகை சோனியா அகர்வாலின் சகோதரரான சௌரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார். நீதிமன்ற பின்னணியில் நடைபெறும் இந்த திரைப்படத்தை ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக...
‘ஜின் – தி பெட்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!

‘ஜின் – தி பெட்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!

News
முகேன் ராவ் நடிக்கும் 'ஜின் - தி பெட்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா! 'பிக் பாஸ் சீசன் 3' வெற்றியாளரும், 'வேலன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜின் - தி பெட்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, 'நிழல்கள்' ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்...
சூரியகாந்தி பூக்களோடு “பறந்து போ” படம் பார்க்க வாருங்கள்!

சூரியகாந்தி பூக்களோடு “பறந்து போ” படம் பார்க்க வாருங்கள்!

News
வணக்கம். நான் இயக்குநர் ராம். எங்களுடைய “பறந்து போ” திரைப்படம் வரும் ஜூலை 4-ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அதனுடைய முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதற்கு ‘Sunflower – not a single not a teaser’ என்று பெயரிட்டு இருக்கிறோம். பாடலோடு சில காட்சித் துண்டுகளும் இடம் பெறுவதால் இவ்வாறு பெயரிட்டு இருக்கிறோம். எல்லோரையும் போல் எனக்கும் சூரியகாந்தியை மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல சூரியோதயத்தில் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடிக்கிற ஒரு அரும் வாய்ப்பு என்னுடைய முதல் படத்தில் எனக்குக் கிடைத்தது. கற்றது தமிழின் இன்னும் ஓர் இரவு பாடலை ஆந்திர மாநிலத்து கடப்பாவின் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடித்தோம். தங்கமீன்களின், ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி தோட்டத்தில் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால் கேரளாவில் உள்ள அச்சன்கோவிலின் பனிபெய்யும் மலைகள் மீது ...
ஆகக்கடவன_ விமர்சனம்

ஆகக்கடவன_ விமர்சனம்

Reviews
2009ஆம் ஆண்டு வெளிவந்த 'The hangover' என்ற ஆங்கில படம் பெண்களே நடிக்காமல் முழுக்க முழுக்க ஆண்கள் நடித்து வெளியானது. 2010 முதல் 2014 வரை ஸ்ட்ரீம் ஆன  'தி எக்ஸ்பென்டபிள்ஸ் 'என்ற வெப் சீரியஸிலும் பெண் கேரக்டரே இல்லாமல் முழுக்க முழுக்க ஆண்களே நடித்திருந்தனர் . இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான 'ஆகக் கடவன'  தமிழ் படம் இதே போல் முழுக்க முழுக்க ஆண்களே நடித்து வெளியான படம் என்ற சிறப்புக்குரியதாகும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து மருந்தகம் ஒன்றில் வேலை பார்க்கும் மூன்று இளைஞர்கள் நெருங்கிய நண்பர்களாகின்றனர். சொந்தமாக மருந்தகம் ஒன்றை நடத்த வேண்டும் என்று ஆசைப்படும் மூவருக்கும் தங்கள் முதலாளியே தன் சொந்த தேவைக்காக அந்த மருந்தகத்தை விற்பதற்கு தயாராக இருக்கிறார் என்று தெரிய வருகிறது. எனவே மூவரும் கஷ்டப்பட்டு தங்களுக்கு தேவையான பணத்தை புரட்டித் தயாராக வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் எதிர...
சின்ன பட்ஜெட் படங்களை வெளியிட உதவும் ஸ்ரீனிக் ப்ரடக்ஷன்!

சின்ன பட்ஜெட் படங்களை வெளியிட உதவும் ஸ்ரீனிக் ப்ரடக்ஷன்!

Photos
ரிலீஸாக முடியாமல் தேங்கி கிடக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு கதவை திறந்துவிடும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்! *ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக மாறும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்* தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 2௦௦ படங்களாவது வெளியாகி வருகின்றன. இவற்றில் சுமார் 15௦ படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள் தான்.. ஆனாலும் சமீப வருடங்களில் படம் முடிவடைந்தும் கூட, பல்வேறு பிரச்சனைகளால் ரிலீஸ் செய்ய முடியாமல் நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் தேங்கி கிடக்கின்றன. தற்போது இதுபோன்று சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் நல்ல படங்களுக்கு வாசலை திறந்துவிடும் விதமாக ஒரு விடிவெள்ளியாக மாறி ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளது ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ் (SRiNIK PRODUTIONS) நிறுவனம். ஸ்ரீனிக் புரொடெக்ஷன்ஸ் சதீஷ்குமார் மற்றும் பாலசுப்ரமணியம் இருவரும...
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கும் ” ஸ்கூல் ” படக்குழுவினர்!

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கும் ” ஸ்கூல் ” படக்குழுவினர்!

News
Quantum Film Factory என்ற பட நிறுவனம் தயாரிப்பில், R. K. வித்யாதரன் இயக்கத்தில்,யோகிபாபு, பூமிகா சாவ்லா, கே.எஸ். ரவிகுமார் ஆகியோறது நடிப்பில் நேற்று ( 23.05.2025 ) வெளியான " ஸ்கூல் " திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பெற்றோர்களுடன் " ஸ்கூல் " படம் பார்ப்பதற்கு திரையரங்கிற்கு வரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவச டிக்கெட் தருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முழுக்க முழுக்க பள்ளியில் நடக்கும் கதை இது மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எவ்வாறு போராட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை எப்படிப்பட்ட அணுகு முறையில் வளர்க்க வேண்டும் என்பதையும் சொல்லுகிறது இந்த படம். இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்த இலவச டிக்கெட் பெற 9514799128 இந்த நம...
தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் யாஷின் தாய் புஷ்பா அருண்குமார்!

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் யாஷின் தாய் புஷ்பா அருண்குமார்!

News
இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு: தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் யாஷ்-ன் தாய் புஷ்பா அருண்குமார்! ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு "கொத்தாலவாடி" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் குறிக்கோளுடன் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது. நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மனைவி பரவதம்மா ராஜ்குமார் போன்று புஷ்பா அருண்குமார் இளம் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளார். தற்போது கன்னட திரையுலகில் பயணத்தை தொடங்கியுள்ள பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். ...
ஏஸ் _ விமர்சனம்

ஏஸ் _ விமர்சனம்

Reviews
மலேசியாவில் வேலை பார்க்கும் யோகி பாபு, அங்கு வரும் விஜய் சேதுபதியை தனது உறவினர் என்று தவறாக நினைத்து அடைக்கலம் கொடுக்கிறார். ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேரும் விஜய் சேதுபதி,  எதிர் வீட்டில் வசிக்கும் காவல்துறை அதிகாரி பப்லுவின் மகளான ருக்மணியை காதலிக்கிறார். காதலிக்கு விலை உயர்ந்த ஆடை ஒன்றை பரிசளிப்பதற்காக வட்டிக்கு கடன் வாங்க செல்கிறார். அப்போது அங்கு நடக்கும் பெரிய அளவிலான சூதாட்டத்தில் பங்கு கொண்டு ஆரம்பத்தில் ஜெயிக்கிறார். பின்னர் பணம் அனைத்தையும் வில்லன் அவிநாசிடம் இழந்து வசமாக சிக்கிக் கொள்கிறார். அதே சமயம் யோகி பாபுவின் தோழி வாங்கிய கடனை அடைக்க, யோகி பாபுவுக்கும் பெரிய தொகை  தேவைப்படுகிறது. இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்காக வங்கிப் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் விஜய் சேதுபதி. தனி ஒருவனாகவே சென்று வங்கிப் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு,  யோகி பாபு தயாராக இர...
CLOSE
CLOSE