“முன்னோடி” படத்தை மதனின் எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
ஸ்வஸ்திக் சினி விஷன் தயாரிப்பில் உருவான “முன்னோடி” படத்தை மதனின்
எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிடுகிறது!விண்ணைத் தாண்டி வருவாயா, அழகா் சாமியின் குதிரை, கேடி பில்லா கில்லாடி
ரங்கா, வருத்தப்படாத வாலிபா் சங்கம், தேசிங்கு ராஜா, மான் கராத்தே, கயல்,
மாப்பிள்ளை சிங்கம், கொடி போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தயாரித்த
நிறுவனம் எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்.
தற்போது “என்னை நோக்கி பாயும் தோட்டா”, விக்ரமின் அடுத்த படம் என
சுறுசுறுப்பாக இருக்கும் மிக முக்கிய தயாரிப்பாளரான மதன் தனது எஸ்கேப்
ஆா்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பாக முன்னோடி படத்தை வாங்கி வெளியிடுகிறார்.
ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே
அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும்.
'வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது
முக்கியம்' என்கிற இக...







