Sunday, November 29

Blog

‘ப்ளட் ரோஸஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

‘ப்ளட் ரோஸஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

News
தெலுங்கு மற்றும் தமிழில் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் படமான ப்ளட் ரோஸஸ் படப்பிடிப்பு நிறைவடைந்தது! இயக்குனர் எம்.ஜி.ஆர் எழுதி இயக்கி ஹரிஷ் கே தயாரிப்பில் .பி.ஆர் சினி கிரியேஷன்ஸின் நாகண்ணா மற்றும் கே. லக்ஷ்மம்மா வழங்க, யெல்லப்பா இணைந்து தயாரித்திருக்கும் படம் 'பிளட் ரோஸஸ்'. இந்தப் படத்தில் ரஞ்சித் ராம் மற்றும் அப்சரா ராணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீலு மற்றும் கிராந்தி கில்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், சுமன், கோலடி ஸ்ரீனிவாஸ், டார்ஜான், ராஜேந்திரா, ஜூனியர் ரேலங்கி, ஜெகதீஸ்வரி, மணி குமார், துருவா, அனில், நரேந்திரா, பிரக்யா, நவிதா, ஜபர்தஸ்த் ஜிஎம்ஆர், ஜபர்தஸ்த் ராமு, ஜபர்தஸ்த் பாபு, ஈடிவி ஜீவன், மம்தா மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குநர் எம்.ஜி.ஆர். இந்தப் படத்தை, ஒரு அழுத்தமான திரைக்கதையின் மூலம், பார்வையாளர்களை கவரும் வகையில் படமாக்கியுள்ளார். "பிளட் ...
கேத்தரின் தெரசா நடித்த “பனி” மே மாதம் வெளியாகிறது!

கேத்தரின் தெரசா நடித்த “பனி” மே மாதம் வெளியாகிறது!

News
கேத்தரின் தெரசா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் "பனி"* மே மாதம் உலகெங்கும் வெளியாகிறது! OMG புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் மீனாட்சி அனிபிண்டி தயாரிக்கும் இந்த படத்தை வி என் ஆதித்யா இயக்குகிறார். கேத்தரின் தெரசா படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் , இவரோடு மகேஷ் ஸ்ரீராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் பாம்பு ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வருகிறது. உயர்தர அனிமேஷன் காட்சிகள் இந்தப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள் இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது , ஆனால் மனிதன் தனக்குமட்டுமே இந்த உலகம் என்கிற எண்ணத்தில் மற்ற உயிரினங்களை பன்னெடுங்காலமாக மெல்ல மெல்ல அழித்து மனித உயிர்களே இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்தப்படம் மனித உயிர் எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே மற்ற உயிரினங்களின் உயிரும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் படமாகவும் இருக்...

இ எம் ஐ _ விமர்சனம்

Reviews
இ எம் ஐ _ விமர்சனம் பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பல பொருட்களை தவணை முறையில் வாங்கி அவற்றுக்கு ஈ எம் ஐ கட்ட முடியாமல் தவிக்கும் இன்றைய இளைய தலைமுறை பற்றிய கதை இஎம்ஐ. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ஓர் இளைஞன் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை காதலிக்கிறான். காதலிக்கும் பெண்ணிடம் தன் இமேஜை உயர்த்திக்கொள்ள கடனில் பைக் வாங்கி வலம் வருகிறான். திடீரென எதிர்பாராமல் அவனது வேலை பறிபோகிறது. வருமானம் இல்லாத காரணத்தால் பைக்குக்கான இ எம் ஐ யை கட்ட முடியாத நிலை. கடன் கொடுத்த பைனான்சியர் பைக்கை பறிமுதல் செய்கிறார். இதற்குப் பிறகாவது அந்த இளைஞன் திருந்தினானா என்றால் அதுதான் கிடையாது. காதலித்த பெண்ணை மணந்து கொண்டால் சந்தோஷமாக வாழ்வதற்கு கார் ஒன்றையும் தவணை முறையில் வாங்கி விடுகிறான். காருக்கான இஎம்ஐ கட்ட முடியாமல் மீண்டும் அவதி ஆரம்பமாகிறது. பல்வேறு அவமானங்களை சந்திக்கிறான். இவனது நடவடி...
‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தை ZEE5 தளம் ஏப்ரல் 13 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !

‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தை ZEE5 தளம் ஏப்ரல் 13 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !

News
ZEE5 தமிழ் மெகா ஹிட் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்தது ! தமிழ் மெகா பிளாக்பஸ்டர் 'கிங்ஸ்டன்' திரைப்படம் ZEE5 தளத்தில், ஏப்ரல் 13 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !! தமிழின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற "கிங்ஸ்டன்" திரைப்படத்தை, வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்த திரில்லர் திரைப்படம், கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்தது. திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற இப்படம், ZEE5 டிஜிட்டல் வெளியீடு மூலம், ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. கிங்ஸ்டன் திரைப்படம், துணிச்சலான கடத்தல்காரரான கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ...
‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

News
'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு! சன் மூன் யுனிவர்ஸல் பிக்சர்ஸ் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்க, 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தீயவர் குலை நடுங்க' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்பாடலை வெளியிட்டுள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் இசையில், ஆதித்யா ஆர் கே குரலில், மனதை வருடும், துள்ளலான காதல் பாடலாக, இப்பாடல் அனைவரின் இதயத்தை கொள்ளை கொள்கிறது. இந்த அழகான பாடல், வெளியான வேகத்தில் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறத...
52 கோடி வசூலைக் கடந்து வெற்றிநடை போடும் ‘ வீர தீர சூரன் !

52 கோடி வசூலைக் கடந்து வெற்றிநடை போடும் ‘ வீர தீர சூரன் !

News
வீர தீர சூரன் வெற்றிக்கு, அனைவருக்கும் நன்றி தெரிவித்த 'சீயான்' விக்ரம் ! சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' திரைப்படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது இப்படம். ரிலீஸ் நாளில் பல தடைகள் ஏற்பட்ட நிலையில், அனைத்தையும் கட...
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’!

News
சத்யராஜ் - காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு! தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் - காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ' மெட்ராஸ் மேட்னி ' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள' மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தில் காளி வெங்கட் ,ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகதா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் அறிவியல் சார்ந்த புனைவு கதை எழுதும் மூத்த எழுத்தாளராக திரையில் ...
விஜய்க்காக அடுத்த அதிரடியில் இறங்கிய நடிகர் சௌந்தரராஜா!

விஜய்க்காக அடுத்த அதிரடியில் இறங்கிய நடிகர் சௌந்தரராஜா!

News
'தலைவன் நீயே, தொண்டன் நானே'... விஜய்க்காக நடிகர் சௌந்தரராஜா உருவாக்கும் ஆல்பம் பாடல்! தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மரம் வளர்ப்பது தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சௌந்தரராஜா இதற்காக பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதுதவிர நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளியானது முதலே சௌந்தரராஜா அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். முன்னதாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த சௌந்தரராஜா, பிறகு கட்சியின் கொடி வெளியிட்டதும் அதனை மதுரை மீனாட்சி அம்மன் சன்னதியில் வைத்து சிறப்பாக வழிபாடு நடத்தி இருந்தார். பின்னர் மாநாட்டுக்கு சைக்கிள் பேரணி ஆகியவற்றை முன்நின்று செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் விஜய் ம...
50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் ‘ஃபயர்’!

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் ‘ஃபயர்’!

News
ரசிகர்கள் பேராதரவோடு 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்' தமிழ் தயாரிப்பாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது! *இயக்குநராக முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரை பதித்த வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜெ எஸ் கே* 'தங்க மீன்கள்' மூலம் ராம், 'குற்றம் கடிதல்' வாயிலாக பிரம்மா, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஊடாக பாலாஜி தரணிதரன், 'ரம்மி' வாய்ப்பால் பாலகிருஷ்ணன் என பல்வேறு திறமைமிக்க இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியவரும், ஜெ எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் தேசிய விருது பெற்ற வெற்றிப் படங்களை தயாரித்தவருமான ஜெ எஸ் கே சதீஷ் குமார், 'தரமணி' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி, 'கபடதாரி', 'ஃபிரெண்ட்ஷிப்', 'அநீதி', 'வாழை' என நடிகராகவும் தொடர்ந்து தன்னை திறம்பட வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளி வருகிறார். ஜெ எஸ் க...

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

News
  விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு! தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தில் இடம்பெற்ற திரையிசையுலகின் சென்சேஷனல் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' லவ் மேரேஜ் ' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு , கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' பட புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்...
CLOSE
CLOSE