Thursday, November 26

Blog

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா!

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா!

News
காதல், கலாட்டா, காமெடி... ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்! ஜூலை 2026-ல் திரைக்கு வருகிறது பவிஷ் நாராயணின் புதிய காதல் பொழுதுபோக்கு திரைப்படம் ‘லவ் ஓ லவ்’! காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் ஓ லவ்’. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். இன்று நடைபெற்ற இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிக...
கரு.பழனியப்பன் இயக்கும் ‘குக்கர்’ படத்தலைப்பை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!

கரு.பழனியப்பன் இயக்கும் ‘குக்கர்’ படத்தலைப்பை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!

News
இன்று (15-06-2026), திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன் அவர்கள், சென்னை - ஆழ்வார்பேட்டையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். *அப்போது, கரு. பழனியப்பன் அவர்கள் இயக்கும் புதிய திரைப்படமான “குக்கர்” படத்தின் தலைப்பைக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.* *இந்நிகழ்வின் போது, நடிகர் திரு. காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்....
துணை குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்த திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி

துணை குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்த திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி

News
தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் திரைப்படக் கல்விக் கொள்கை முன்மொழிவைப் பாராட்டிய மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு சென்னை — இந்தியத் துணைத் குடியரசுத் தலைவரிடமிருந்து வரப்பெற்ற அதிகாரப்பூர்வ பாராட்டுச் கடிதத்தையடுத்து, தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநரும் சமகாலக் கவிஞருமான சீனு ராமசாமி தனது ஆழமான நன்றியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். துணைத் குடியரசுத் தலைவர் தனது அதிகாரப்பூர்வ கடிதத்தில், கலை, சமூகம் மற்றும் இலக்கிய உலகிற்கு இயக்குநர் சீனு ராமசாமி ஆற்றிவரும் பன்முகப் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, அவரது 'சில பூக்கள்' கவிதையை வெகுவாகப் புகழ்ந்துள்ள அவர், எவ்விதப் புகழையோ அங்கீகாரத்தையோ எதிர்பாராமல், தங்களது நற்செயல்களால் நறுமணம் பரப்பி, அமைதியா...
‘பிரிதம் & பெட்ரோ’ டிரெய்லர் வெளியீடு!

‘பிரிதம் & பெட்ரோ’ டிரெய்லர் வெளியீடு!

News
பழைய பள்ளி உணர்வு டிஜிட்டல் உலகத்தை சந்திக்கும் போது: ஜூலை 3 வெளியீட்டுக்கு முன் ‘பிரிதம் & பெட்ரோ’ டிரெய்லர் வெளியீடு! அவிநாஷ் அருண் இயக்கத்தில் அர்ஷத் வார்சி, விக்ராந்த் மாஸ்சி, விர் ஹிரானி, மோனா சிங் மற்றும் போமன் இரானி நடித்த இந்த தொடர் ஜூலை 3 அன்று, ஜியோஹாட்ஸ்டாரில் மட்டுமே வெளியிடப்படுகிறது Trailer Link: https://youtu.be/uCjkRVV0-qU?si=-0SnnbSzob1e5e_1 **ஜூன் 15, 2026:** பார்வையாளர்களுக்கு பதில்களை வழங்குவதற்குப் பதிலாக மேலும் கேள்விகளை எழுப்பிய சுவாரஸ்யமான முதல் பார்வைக்குப் பிறகு, ஜியோஹாட்ஸ்டார் இன்று ‘பிரிதம் & பெட்ரோ’வின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நகைச்சுவை, மர்மம், குழப்பம் மற்றும் எதிர்பாராத கூட்டாண்மைகளால் நிரம்பிய இந்த தொடர் ஒரு விறுவிறுப்பான அனுபவத்தை வழங்குகிறது. கோவாவின் வண்ணமயமான பின்னணியில் அமைந்துள்ள ‘பிரிதம் & பெட்ரோ’, முற்றிலும் மாறு...
புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இசை அமைப்பாளர் அனிருத்!

புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இசை அமைப்பாளர் அனிருத்!

News
அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்! இந்தியா, ஜூன் 15, 2026: மியூசிக் சென்சேஷன் அனிருத் ரவிச்சந்தர், தனது சுயாதீன இசை நிறுவனமான அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மூலம் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவுடன் கூட்டணி அமைத்து முதல் வெளியீடாக ’அரவிந்த்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், திரைப்பட இசையைத் தாண்டி பாப் மற்றும் ஹிப்-ஹாப் இசை வழியே தனித்துவமான கதைகளைச் சொல்லும் புதிய முயற்சியை அனிருத் மேற்கொண்டிருப்பதையும் காட்டுகிறது. 2012 ஆம் ஆண்டு வைரலான ’வொய் திஸ் கொலவெறி டி?’ பாடல் மூலம் அனிருத் நாடு முழுவதும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ’ஜெயிலர்’, ’கூலி’, ’விக்ரம்’, ’லியோ’ மற்றும் ’தேவரா: பார்ட் 1’ போன்ற மாபெரும் வெற்றிப் படங...
நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

News
ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு'! *15 ஜூன் 2026:* மணி அடிக்கும் முன்பே ஒரு கேள்வி மாகிபூர் முழுவதும் பேசுபொருளாகும் சுப்பு சாரின் வகுப்புக்கு உங்களை வரவேற்கிறோம். இயக்குநர் மாலிக் ராம் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர். 'சூப்பர் சுப்பு' ஜூலை 2 அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான 'சூப்பர் சுப்பு', சுப்பிரமணியம் சில்லுகுரி ராவ் (சுப்பு) என்ற நேர்மையான இளைஞரின் வாழ்க்கையை காட்டுகிறது. மாகிபூர் என்ற கிராமத்தில் செக்ஸ் எஜூகேஷன் ஆஃபிசராக வேலை கிடைத்ததும் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அனுபவமின்றி பாடத்திட்டத்தையும், கிராம மக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற சூழலில் அங்கு செல்கிறார் சுப்பு. ஆனால் ஆர்வம், குழப்பம் மற்றும் நான்கு சுவர்களுக்குள் உரையா...
கதையின் நாயகனாக ரவி மரியா நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

கதையின் நாயகனாக ரவி மரியா நடிக்கும் ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

News
ராம் தேவ் பிக்சர்ஸ் மற்றும் கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மக்கள் தலைவா ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மக்கள் தலைவா' திரைப்படத்தில் ரவி மரியா, அப்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். காமெடி வித் பொலிடிக்கல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தயாரித்திருக்கிறார். இவருடன் எஸ். வெங்கடேசன்- ஆர் .சந்திரசேகரன் - டி. ராம்குமார் ஆகியோர் இணை ...
மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’!

மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’!

News
பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் 'சின்ன சின்ன ஆசை'! பாபுஜி புரொடக்ஷன்ஸ் பேனரில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான 'சின்ன சின்ன ஆசை' திரையரங்குகளில் ஜுன் 19 அன்று வெளியாகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் ஜூன் 19 அன்று தமிழகம் எங்கும் வெளியிடுகிறது. காசி நகரில் எதிர்பாரா விதமாக சந்திக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் தருணங்களை உணர்வுப்பூர்வமாக திரையில் காட்டும் 'சின்ன சின்ன ஆசை' படத்தில் பிரபல மலையாள நடிகரும் சமீபத்தில் 'கருப்பு' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவருமான இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி முக்கிய வ...
புதிய பாணியிலான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘!

புதிய பாணியிலான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘!

News
மலையாளப் படங்களுக்கு இணையாக போட்டி போடும் க்ரைம் த்ரில்லர் 'தி டார்க் ஹெவன் ' மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியில் உருவாகியிருக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவை காலம் கடந்தும் மக்களிடம் பரவலாகப் பேசப்படுவதுண்டு.அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக 'தி டார்க் ஹெவன்' உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூன் மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப...
‘அறுவடை’ படப்பிடிப்பு நிறைவு

‘அறுவடை’ படப்பிடிப்பு நிறைவு

News
படப்பிடிப்பு முடிந்த நிறைவில் பிறந்தநாள் கொண்டாடிய தயாரிப்பாளர் M.கார்த்திகேசன்! ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் கொண்டாடும்போது மகிழ்ச்சியான மனநிலை வேண்டும்.ஏதோ ஒரு காரியத்தை செய்து முடித்து ஏதோ ஒரு நல்ல செயல் நிறைவு பெற்ற அந்த திருப்தியும் நிறைவும் இருந்தால் அந்த பிறந்தநாள் கொண்டாட்ட மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிடும்.அப்படி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் தயாரிப்பாளர் M.கார்த்திகேசன். 'லாரா' திரைப்படத்தைத் தயாரித்த இவர், தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் இரண்டாவது தயாரிப்பாக 'அறுவடை' திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். ஒரு தயாரிப்பாளராக நடிகராக அறிமுகமான M. கார்த்திகேசன் முதன் முறையில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக அவரே நடிக்க, அவருடன் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய ...
CLOSE
CLOSE