Thursday, November 26

Blog

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம்!

News
திட்டக்குடியில் “TN 2026” வெற்றி கொண்டாட்டம் – ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்த படக்குழு ! KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பெயர்களாக உயர்ந்து வருகின்றனர். தரமான கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள், மற்றும் சிறப்பான வணிக அம்சங்கள் கலந்த படங்களைத் தேர்வு செய்வதில் இவர்களின் தேர்ச்சி, அவர்களை மற்ற தயாரிப்பாளர்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது. அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் உமாபதி ராமையா இயக்கத்தில், நடிகர் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள “TN 2026” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியல் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம், சமூக கருத்துகளையும், அரசியல் பகடியையும், சிரிப்பூட்டும் நிகழ்வுகளா...
லார்க் ஸ்டூடியோஸ் – பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணையும் படம்!

லார்க் ஸ்டூடியோஸ் – பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணையும் படம்!

News
‘ஜோ’ இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்! லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படமாக இது உருவாகிறது. இதன் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை ‘ஜோ’ வெற்றி படத்தினை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார். அவர் சொன்ன கதையைக் கேட்டுவிட்டு நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, தயாரிப்பாளராக இணையவும் முடிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இருந்து வேறுபட்டு, முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். ’ஜோ’ படத்தில் தனது ந...

அதிரடி ஆக்ஷன் மற்றும் சென்டிமெண்ட் கலந்த ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’

News
விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்– அதிரடி ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த அதிரடி முன்னோட்டம்! தமிழ்–தெலுங்கு இருமொழி படமாக உருவாகும் Gods and Soldiers திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ட்ரைசர்” (Trailer + Teaser)-ஐ பிரபல இயக்குநர் A. R. முருகதாஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்தப் படம், தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதிரடி ஆக்ஷன், செண்டிமெண்ட் மற்றும் வலுவான கதாபாத்திரங்களின் பயணம் ஆகியவற்றை இணைத்து, இந்த ட்ரைசர் ஒரு தீவிரமான சினிமா உலகத்தை சிறிய நேரத்தில் மிகச் சக்திவாய்ந்த முறையில் காட்டுகிறது. “ட்ரைலர் + டீசர்” என்ற புதிய வடிவமைப்பில் உருவான இந்த ட்ரைசர், குறுகிய நேரத்தில், நீண்டநாள் நினைவில் நிற்கும் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ட்ரைசரில் மிக முக்கியமாக திக...

கருப்பையா முருகன், பிரேம்ஜி மீண்டும் இணையும் மியூசிக்கல் ஹாரர்!

News
கருப்பையா முருகன், பிரேம்ஜி மீண்டும் இணையும் மியூசிக்கல் ஹாரர்! கடந்த வருடம் பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் சார்பாக, இயக்குனர் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கி, பிரேம்ஜி நடிப்பில் வெளியான "வல்லமை" திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றிபெற்றது. பிரேம்ஜியை வித்தியாசமான கோணத்திலும், சமூகத்தில் நடக்கும் பெண் குழந்தைகள் பாலியல் பிரச்சனையை பேசிய விதத்திலும் பலராலும் பாராட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கருப்பையா முருகன், பிரேம்ஜி கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. மியூசிக்கல் ஹாரராக வித்தியாசமான கோணத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு சூரஜ்நல்லுசாமி, இசை பிரேம்ஜி, பேட்லர்ஸ்p சினிமா சார்பாக எழுதி, இயக்கி, தயாரிக்கிறார் கருப்பையா முருகன். மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது....
கோபி நயினார் இயக்கத்ததில் ராதிகா நடிக்கும் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !

கோபி நயினார் இயக்கத்ததில் ராதிகா நடிக்கும் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !

News
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் ! அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், “கலையரசி” ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர். ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். தாய்கிழவி படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற கலையரசி ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடு...
போதைப் பொருள் ஏற்படுத்தும் சீரழிவை மையப்படுத்தி உருவான ‘முதற்கனல்’!

போதைப் பொருள் ஏற்படுத்தும் சீரழிவை மையப்படுத்தி உருவான ‘முதற்கனல்’!

News
'அப்பா வேணாம்ப்பா’ இயக்குநரின் புதிய படம் ‘முதற்கனல்’ ; மே மாதம் திரைக்கு வருகிறது! ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் DFT தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’. ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற திரைப்படங்களை இயக்கிய R.வெங்கட்டரமணன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். புது முகங்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, அரிகிருஷ்ணன், ஹரி, பாலாஜி, ஆகாஷ், ஸ்ரீஜித், பிரதாப், தீபாபத்மநாபன், கருப்பசாமி,  திருவேங்கடகிருஷ்ணன், உடன் டாக்டர்.சிவா, ராமசாமி, தனுஜா, ரோகிணி, சஜன், மணிகுமார், ஷிவகுமார், ருக்மணி, இலக்கியா, அருட்பிரகாஷ், சந்திரசேகரன், மதன், கணேஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ‘அப்பா வேணாம்ப்பா’ படத்தில் மதுவினால் ஒரு குடும்பம் எந்த அளவிற்கு சீரழிகிறது என்பதை கமர்சியலான ஒரு படமாக கொடுத்த இயக்குந...
வினை விதைத்தவன் வினை அறுப்பான் ‘என்கிற கருத்தின் அடிப்படையில் உருவான ‘அறுவடை’ திரைப்படம்!

வினை விதைத்தவன் வினை அறுப்பான் ‘என்கிற கருத்தின் அடிப்படையில் உருவான ‘அறுவடை’ திரைப்படம்!

News
வினையும் எதிர்வினையும் பற்றி வெளிப்படுத்தும் படம் 'அறுவடை' ஆன்மீகம் தத்துவங்களின்படி கர்மா என்பது பேசப்படுகிறது. அதன்படி ,'நீங்கள் வெளிப்படுத்தும் எண்ணங்கள் அல்லது ஆற்றல் எதுவாக இருந்தாலும் அது நல்லதாகவோ கெட்டதாகவோ உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்' என்கிறது.சுருக்கமாக 'விதைத்ததையே அறுப்பாய்' என்கிறது. அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது நியூட்டனின் மூன்றாவது விதி இது பற்றிக் கூறும்போது, 'ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு' என்று கூறுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் உள்ள எதிர்வினை பற்றித் தான் 'அறுவடை' படம் பேசுகிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான் 'என்கிற கருத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம்தான் 'அறுவடை'.ஆக அறுவடை என்கிற இந்தப் படத்திற்குத் தலைப்பாக வந்திருக்கிற சொல் செயலுக்கான எதிர்வினையைக் குறிக்கிறது எனலாம். இந்த 'அறுவடை' திரைப்படத்தை எம். கே ஃபிலிம் மீடியா ஒர்...
டீகன்ஸ்ட்ரக்ட்’ (Deconstruct )நிறுவனத்தின் பிராண்ட் பார்ட்னரான அனிருத்!

டீகன்ஸ்ட்ரக்ட்’ (Deconstruct )நிறுவனத்தின் பிராண்ட் பார்ட்னரான அனிருத்!

News
'டீகன்ஸ்ட்ரக்ட்' (Deconstruct )நிறுவனத்தின் பிராண்ட் பார்ட்னரான அனிருத்! 'டீகன்ஸ்ட்ரக்ட்', இசையமைப்பாளர் அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவிக்கிறது. இணையதளத்தின் மூலம் இயல்பாக தூண்டப்பட்ட ஒரு கதை. நவீன கால பிராண்ட் மற்றும் கூட்டணிகளின் மாறி வரும் தன்மையை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனம் இசை உலகின் பிரபல ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தருடன் தனது அதிகாரப்பூர்வமான கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த கூட்டணி. ஒரு கூட்ட அரங்கில் இல்லாமல்... இணையத்தின் வாயிலாக தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் அனிருத் மற்றும் அவரது ஸ்டைலிஸ்ட் இடம்பெற்ற ஒரு வைரல் இன்ஸ்டாகிராம் ரீலில் இருந்து, இந்த தொடர்பு தொடங்குகிறது. அதில் கூர்மையான பார்வை கொண்ட ரசிகர்கள்... பின்னணியில் நுட்பமாக வைக்கப்பட்டிருந்த டீகன்ஸ்ட்ரக்ட் சன்ஸ்கிரீனை கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில்...

Underwater shotல் அதிரடி காட்டி அமர்க்களம் செய்த ஆர்யா!

News
'மிஸ்டர் X’ படத்திற்காக 20 அடி ஆழமுள்ள தண்ணீருக்கடியிலான அதிரடி காட்சியில் மொத்த சக்தியையும் பயன்படுத்திய ஆர்யா! இதுபற்றி படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் கூறுகையில், “தமிழ் சினிமா இதுவரை முயற்சிக்காத ஒன்றை இந்தப்படத்தில் நடிகர் ஆர்யா செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் 30 முதல் 40 வினாடிகள் மூச்சை அடக்கிக்கொண்டு, உடலில் எந்த ஆடையும் இல்லாமல், பனிக்கட்டி போன்ற குளிர்ந்த நீரில் 20 அடி ஆழத்திற்கு இறங்கினார்” என்கிறார்.. . விரைவில் வெளிவரவிருக்கும் அதிரடி உளவு திரைப்படமான ‘மிஸ்டர் X’-ல், முக்கியமான தண்ணீருக்கு அடியிலான ஒரு காட்சிக்காக நடிகர் ஆர்யா எந்த அளவிற்கு கடினமான முயற்சிகளை மேற்கொண்டார் என்றால் சமீபகாலத்தில் ஒரு தமிழ் நடிகர் மேற்கொண்ட மிகவும் உடலளவிலான சவாலான சாதனைகளில் ஒன்றாக இதை சொல்லலாம். இத்திரைப்படத்தின் தொடக்க காட்சியான இது மும்பையில் உள்ள 20 அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் படமாக்கப்...
தேர்தலுக்கு மறுநாளே வருகிறது “கமாண்டோவின் லவ் ஸ்டோரி “

தேர்தலுக்கு மறுநாளே வருகிறது “கமாண்டோவின் லவ் ஸ்டோரி “

News
தேர்தலுக்கு மறுநாளே வருகிறது "கமாண்டோவின் லவ் ஸ்டோரி " ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரித்துள்ள திரைப்படம் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி". வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். மும்பை அழகி ஏஞ்சல் நாயகியாக அறிமுகமாகிறார். ரோபோ சங்கர், பப்லு பிருத்திவிராஜ், பேரரசு, அரவிந்தராஜ், வாழை ஜானகி, மதுமிதா, விஜய் டிவி முல்லை, புதுப்பட்டு சக்திவேல், சிரஞ்சீவி, சூப்பர்குட் சுப்பிரமணி, பாய்ஸ் ராஜன், ஓஏகே சுந்தர், துரைபாண்டியன், ஸ்ரீதேவி, பூர்ணிமா, சுஷ்மிதா, நிஷா இவர்களுடன் ஆகாஷ் முத்து என்ற புதுமுகம் அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவை வில்லியம்ஸ் செய்கிறார். படத்தொகுப்பு சி.ஆர்.புவனேஷ், நடனம் டயானா, சண்டை பயிற்சி கோல்டன் என்.கோபால், இசை பாவலர் வரதராஜனின் புதல்வர் சிவராமன். பின்னணி இசை கார்த்திக் ராஜா. மக்கள் தொடர் கோவிந்தராஜ். குழு மணாலி, கோவா, ஜவ்வாது மல...
CLOSE
CLOSE