Thursday, November 26

Blog

எல்.ஐ.கே (LIK): விமர்சனம்

எல்.ஐ.கே (LIK): விமர்சனம்

Reviews
எல்.ஐ.கே (LIK): விமர்சனம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே), எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு 'பியூச்சரிஸ்டிக் ரொமாண்டிக் காமெடி' திரைப்படம். 2040-ம் ஆண்டில் தொழில்நுட்பம் மனித உறவுகளை எப்படி ஆக்கிரமிக்கும் என்பதை கற்பனை கலந்து, அதே சமயம் ஜாலியான திரைக்கதையோடு சொல்லியிருக்கும் ஒரு கலர்ஃபுல் சினிமா இது. 2040-ம் ஆண்டு, அலைப்பேசி மற்றும் சமூக வலைதளங்கள் இல்லாத ஒரு 'பசுமை உலகத்தை' உருவாக்கி, அங்குத் தனது மகன் வைப் வாசேவுடன் (பிரதீப் ரங்கநாதன்) வசிக்கிறார் தந்தை அன்புகடல் (சீமான்). செல்போன் மோகத்தில் இருந்து சமூகத்தை மீட்பதே இவர்களின் நோக்கம். ஆனால், வைப் வாசேவுக்கு சமூக வலைதளங்களில் புகழ்பெறத் துடிக்கும் தீமா (கீர்த்தி ஷெட்டி) மீது காதல் மலர்கிறது. இவர்களது காதலுக்கு வில்லனாக உருவெடுக்கிறது சூரியன் (எஸ்.ஜே.சூர்யா) ...
‘பிரேக்பாஸ்ட்’ படம் மூலம் கம்பேக் கொடுக்கும் இயக்குநர் காந்தி கிருஷ்ணா!

‘பிரேக்பாஸ்ட்’ படம் மூலம் கம்பேக் கொடுக்கும் இயக்குநர் காந்தி கிருஷ்ணா!

News
இயக்குநர் Ar. காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு! கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா தர இருக்கிறார் என்பது டீசரில் தெளிவாகியுள்ளது. சினிமா ரசிகர்களிடையே இன்றும் தனி இடம் பிடித்துள்ள 'செல்லமே' மற்றும் 'ஆனந்த தாண்டவம்' போன்ற படங்களில் தனது தனித்துவமான கதை சொல்லலுக்காகப் புகழ்பெற்ற இயக்குநர் காந்தி கிருஷ்ணா, ’பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்த ரொமாண்டிக் கதையில் பிக்பாஸ் புகழ் ராணவ் மற்றும் ரோஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த...
டி என் 2026 _ விமர்சனம்

டி என் 2026 _ விமர்சனம்

Reviews
டி என் 2026_ விமர்சனம் கோடை வெப்பத்தை மீறி தமிழ்நாடு தேர்தல் 2026 சூடு ஏற்றுக் கொண்டிருக்க, அதை மேலும் வெப்பம் ஏற்ற வந்திருக்கும் திரைப்படம் 'டி என் 2026'. வடமாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி தமிழகம் வந்த குல்கந்து குமாருக்கு (நட்டி) யதேச்சையாக சினிமா வாய்ப்பு கிடைத்து படங்கள் நடிக்க தொடங்குகிறார். பொள்ளாச்சி பகுதியில் 100 ஏக்கர் தென்னந்தோப்பு உரிமையாளராக செல்வ செழிப்புடன் வாழும் மன்றாடியார், (தம்பி ராமையா) பிற்காலத்தில் குல்கந்து குமார் சூப்பர் ஸ்டாராக பிரபலமடைவார் என்று கணித்து அவரை உச்ச நட்சத்திரமாக்க முயற்சி செய்கிறார். தம்பி ராமையாவின் திட்டப்படியே சூப்பர் ஸ்டார் ஆகும் குல்கந்து குமார் அரசியலில் குதித்து தமிழக முதல்வராக வேண்டிய சமயத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை. படம் வெளி வருவதற்கு முன்பு, முன்னோட்டத்தின் மூலமே பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்தப...
‘தீயோர் கூடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘தீயோர் கூடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

News
தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட "தீயோர் கூடம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! ரூல் பிரேக்கர்கஸ் புரொடக்ஷன் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜெகன் நாராயணன், சக்திவேல், வீரமணி மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "தீயோர் கூடம்." சாக்ஷி அகர்வால், டேனியல் ஆனி போப் மற்றும் வையாபுரி இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை சக்திவேல் எழுதி, இயக்கி இருக்கிறார். மேலும் சாம்ஸ், வசந்தி, ஜேஸ்பர், சத்யா மற்றும் சம்யுதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசந்த் இசைப்பேட்டை இசையமைக்கும் இந்தப் படத்திற்கு பிரசாத் டி.எஃப்.டி. ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, பி.கே. படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். கலை இயக்குநராக பிரசாத் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்களை ராஜா எழுதியுள்ளார். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் வகையில் படமாக்கப்...
காக்கி சர்க்கஸ்: இணைய தொடர் விமர்சனம்

காக்கி சர்க்கஸ்: இணைய தொடர் விமர்சனம்

News
காக்கி சர்க்கஸ்: இணைய தொடர் விமர்சனம் சிறைச்சாலை என்றாலே பொது புத்தியில் ஒரு பிம்பம் பதிந்திருக்கும். ஆனால், ஒரு கிளைச் சிறைச்சாலையை மையமாக வைத்து, அங்கு நடக்கும் ஒரு விசித்திரமான திருட்டை மிக சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை உணர்வோடும் காட்சிப்படுத்தியிருக்கிறது இந்த 'காக்கி சர்க்கஸ்' இணையத் தொடர். ஒரு கிளை சிறைச்சாலையில் ஜெயிலராக பணி புரியும் முனீஷ்காந்த் எழுத்தாளராகவும் இருக்கிறார். புத்தக வாசிப்பு பழக்கம் என்பது கைதிகளை மனமாற்றம் செய்து, அவர்களை திருத்தும் என்று திடமாக நம்புகிறார். சிறைச்சாலையை வெறும் தண்டனைக்கூடமாகப் பார்க்காமல், மனிதர்களைப் பண்படுத்தும் இடமாக நினைக்கிறார். கைதிகளுக்காக நூலகம் அமைப்பதும், தான் எழுதும் புத்தகங்கள் மூலம் அவர்களைத் திருத்த முயல்வதும் என ஒரு வித்தியாசமான அதிகாரியாக அவர் கவனம் ஈர்க்கிறார். அவருக்கு நேர்மாறாக, காவல் சீருடையின் கம்பீரத்தையும் அதிகாரத்த...
மனிதன் தெய்வமாகலாம் _ விமர்சனம்

மனிதன் தெய்வமாகலாம் _ விமர்சனம்

Reviews
மனிதன் தெய்வமாகலாம்_ விமர்சனம் கிராமத்தில் மிக எளிய வாழ்க்கை நடத்தி வரும் நாயகன் செல்வராகவனுக்கும் நாயகி குஷிக்கும் திருமணம் நிச்சயமாகிறது. குஷியின் அண்ணனுக்கு, தன் தங்கையை செல்வராகவனுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை என்றாலும், தங்கையின் விருப்பத்துக்காக திருமணத்துக்கு ஒத்துக் கொள்கிறார். செல்வ ராகவனின் புறத்தோற்றத்தை விட அவரது நல்ல மனசும், நேர்மையான நடவடிக்கைகளையும் கவனித்த காரணத்தால்தான் குஷி மிகவும் விருப்பப்பட்டு செல்வராகவனை மணந்து கொள்கிறார். திருமணத்துக்குப் பின் தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக நெடுஞ்சாலையில் ஒரு உணவு விடுதியை ஆரம்பிக்கிறார் செல்வராகவன். எம் எல் ஏ ஒய் ஜி மகேந்திராவின் மைத்துனரான மைம் கோபி அந்த உணவு விடுதியில் மது அருந்த வரும்போது செல்வ ராகவன் அதைத் தடுக்கிறார். இதனால் இருவருக்கும் உரசல் ஏற்படுகிறது. பின்னர் வேறு ஒரு பிரச்சனை தொடர்...
காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்!

காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்!

News
நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் சிக்கல்களால் இன்றுவரை தணிக்கை சான்றிதழ் பெற முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம். 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட அந்த படம் பல்வேறு காரணங்களால் இன்றுவரை திரையிட முடியாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் படத்தின் வெளிநாட்டு உரிமை, ஏரியா விற்பனை, ஓடிடி உரிமை பெற்ற பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு பிறகாவது இப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி முதலீடு செய்த அனைவருக்கும் போட்ட பணத்தை எடுத்து தரும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று ஜனநாயகன் படத்தில் இருந்து ஐந்து நிமிடம் ஓடக்கூடிய சண்டைக்காட்சி மட்டும் இணையத்தில் லீக...
ஏழு உண்மைச் சம்பவங்களை ஒன்றிணைத்து உருவான ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் !

ஏழு உண்மைச் சம்பவங்களை ஒன்றிணைத்து உருவான ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் !

News
    'மிஸ்டர் எக்ஸ்' பார்த்தபோது எனக்கே ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது” ; சரத்குமார்! சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). இத்திரைப்படம் வரும் ஏப்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.. எப்ஃஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ஏப்ரல் 17ஆம் தேதி ‘மிஸ்டர் எக்ஸ்’ வெளியாக இருக்கும் நிலையில் இதன் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு வடபழனி விஜயா ஃபோரம் மாலில் உள்ள பேலசோ த...
இளையராஜாவின் வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம்!

இளையராஜாவின் வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம்!

News
  சரிகமா லைவ் Saregama Live & Mercuri மெர்குரி இணைந்து, இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு ! சரிகமா Saregama Live மற்றும் மெர்குரி Mercuri இணைந்து, இந்திய இசையின் மாபெரும் கலைஞரான இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன. இந்த ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட நகரங்களில் அவர் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள Dolby Theatre மற்றும் பே ஏரியாவில் உள்ள Oakland Arena போன்ற முக்கிய மேடைகளில் அவரது ஐகானிக் இசை ஒலிக்க உள்ளது. “Music for Healing - Ilaiyaraaja Live in Performance” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழா, Saregama Live மற்றும் Catch the Rhythms இணைந்து, Me...

‘மக்கள் தலைவா’ (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு!

News
நடிகர் ராதா ரவி, ரவி மரியா நடிக்கும் 'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு! தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த தருணத்தில் தமிழக மக்களுக்கு அரசியல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் ரவி மரியா கதையின் நாயகனாக நடிக்கும் 'மக்கள் தலைவா' திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் தீவிர விசுவாசியும், சீடருமான தமிழருவி மணியன் வெளியிட்டு , படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 'பழகிய நாட்கள்', ' மூன்றாம் மனிதன் ' என சமூக வலைதள உலகத்தில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தும் கன்டென்டுகளை உருவாக்கும் படைப்பாளியான ராம் தேவ் இயக்கத்தில் தய...
CLOSE
CLOSE