Thursday, November 26

Blog

கண்ணன் ரவி தயாரிப்பில் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றி விழா!

கண்ணன் ரவி தயாரிப்பில் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றி விழா!

News
தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் வெற்றி விழா! கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொங்கல் திருநாளன்று வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' எனும் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று பெரும் வெற்றியை வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் 'தலைவர் தம்பி தலைமையில்' பட குழுவினருடன் மத்திய இணை அமைச்சர் திரு சுரேஷ் கோபி, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் என ஏராளமானவர்கள் சிறப்ப...
டார்க் ஜெயின்ட்” படத்தின் டைட்டில் வெளியீடு!

டார்க் ஜெயின்ட்” படத்தின் டைட்டில் வெளியீடு!

News
"டார்க் ஜெயின்ட்" திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு நேற்று பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் சோனியா அகர்வால், இயக்குனர் பாக்யராஜ், லிவிங்ஸ்டன், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா, அயலி மதன், விஜய் டிவி அமுதவாணன், ஆதர்ஷ், ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ரபிக் பாட்சா முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் KS கிஷன் இயக்குகிறார். விக்னேஷ் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவு சங்கீத் மணிகோபால் கவனிக்கிறார். இப்படத்தினை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன், பயோவன் கிரியேஷனிசம் எனும் பேனரில் தயாரிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோபிசெட்டி பாளையத்திலும், சென்னையிலும் முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளது. இது ஒரு வித்யாசமான ஹாரர் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ...
வெளியீட்டுக்கு தயாரான  ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’

வெளியீட்டுக்கு தயாரான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’

News
பிப்ரவரி 6 முதல் திரைக்கு வரும் பாவனாவின் ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ இந்திய திரையுலகில் 23 ஆண்டுகளாக தனது அபாரமான நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் பாவனா. பல்வேறு திரைப்படங்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார். ‘நம்மல்’ திரைப்படம் மூலம் அறிமுகமான பாவனா, இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில், `அனோமி' படத்தில் அவர் தனது திரையுலக வாழ்க்கையின் மிகக் கடினமும், ஆழமும் கொண்ட பாத்திரங்களில் ஒன்றை ஏற்று நடித்துள்ளார். இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும...
வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !

வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !

News
  வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா ! Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்.., உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி பேசியதாவது.., இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. அபிஷன், அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு க...
Ram Charan-Upasana Welcome Twins!

Ram Charan-Upasana Welcome Twins!

News
ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள்; சிரஞ்சீவி சந்தோசப் பகிர்வு* மெகா குடும்பம் இதுவரை இல்லாத அளவிலான இரட்டிப்பு மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. பவர் ஜோடி ராம் சரண் மற்றும் உபாசனா கொணிதெலாவுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான செய்தி, தெலுங்கு திரையுலகின் மிகவும் நேசிக்கப்படும் குடும்பங்களில் ஒன்றான சிரஞ்சீவி இல்லத்தில் இரட்டை கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மெகா பேரரசின் தலைமைப் பொறுப்பாளராக, தனது அளவற்ற மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் சமூக வலைதளங்களில் நேரடியாக இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். பிறந்துள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவரும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உபாசனாவும் நலமுடன் மீண்டு வருவதாகவும் அவர் தெரிவித்த...
“பேங் பேங்” (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!

“பேங் பேங்” (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!

News
KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது! KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் "பேங் பேங்" படத்தின் டைட்டில் டீஸர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸரில் ஜாம்பியாக மாறி ஓடுகிறார்கள். பிரபு தேவாவும், வடிவேலுவும் துப்பாக்கியுடன் கெத்தாக வருகிறார்கள். வடிவேலு ஜாம்பி என்று கூறுகிறார். பிரபு வேலு, வடி தேவா என்று பெயரோடு டீஸரை பார்க்கும் போது படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். பிரபுதேவா – வடி...
காந்தி டாக்ஸ்_ விமர்சனம்

காந்தி டாக்ஸ்_ விமர்சனம்

Reviews
காந்தி டாக்ஸ்_ விமர்சனம் நட்சத்திரங்கள்: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஒளிப்பதிவு: கரண் பி. ராவத் இசை: ஏ ஆர் ரகுமான் எழுத்து இயக்கம்: கிஷோர் பாண்டுரங் பெலேகர் தன் வயது முதிர்ந்த தாயுடன் மும்பையில்   வசிக்கிறார் விஜய் சேதுபதி. உடல்நிலை சரியில்லாத தாயாரை  குடியிருப்பு பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்திற்கு தூக்கிச் சென்றுதான் காலைக் கடன் செய்விக்க வேண்டும்.  வருமானமின்றி கஷ்டப்படும் விஜய் சேதுபதி வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இந்த சூழலில் பணக்கார பெண்ணான அதிதி ராவ் ஹைதரியுடன் விஜய் சேதுபதிக்கு காதல் ஏற்படுகிறது. மற்றொருபுறம் பெரும் செல்வந்தரான அரவிந்த்சாமி புரமோட்டராக இருந்து கட்டி வரும் மிகப்பெரிய குடியிருப்பு பகுதி தீ விபத்தில் சிக்கி, அரவிந்த்சாமிக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. வருமானம் இன்றி தவிக்கும் விஜய் சேதுபதி அரவிந்த் சாமி வீ...
தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS

தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS

News
தமிழக அரசு விருது பெற்ற இசையமைப்பாளர் சாம் CS – ‘புரியாத புதிர்’ இசைக்கு கிடைத்த பெருமை ! இசைப் பயணத்தின் புதிய மைல்கல்: ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தமிழக அரசு விருது பெற்ற சாம் CS !! தமிழக அரசு சார்பில் 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகள் வரை வழங்கப்படும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் சாம் CS அவர்களுக்கு, 2016-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற தமிழக அரசு மாநில விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான பின்னணி இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சாம் CS விருது பெற்றிருப்பது, அவரை நேசிக்கும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. த...
மகேஷ் பாபு – எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகி வரும்  ‘வாரணாசி’ (

மகேஷ் பாபு – எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகி வரும்  ‘வாரணாசி’ (

News
மகேஷ் பாபு – எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகி வரும்  ‘வாரணாசி’ ( VARANASI )திரைப்படம் 2027 ஏப்ரல் 7-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ! இந்திய சினிமாவில் தற்போது மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படங்களில் ஒன்றாக, நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியின் முதல் படமாக “வாரணாசி” உருவாகி வருகிறது. Sri Durga Arts மற்றும் Showing Business நிறுவனங்களின் சார்பில்  K.L. நாராயணா மற்றும் S. S. கார்த்திகேயா இணைந்து  தயாரிக்கின்றனர்.  இந்த மாபெரும் ஆக்ஷன்–த்ரில்லர் திரைப்படத்தில், பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான ஒவ்வொரு தகவலும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பிரம்மாண்டமான க்ளிம்ப்ஸ் நிகழ்வு, ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. ...
அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

News
இயக்குநர் அட்லீ வெளியிட்ட அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” படத்தின் ட்ரெய்லர்! அபிஷன் ஜீவந்த் நடிக்கும் 'வித் லவ் ( With Love)' படத்தின் டிரெய்லர் வெளியீடு 'டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் - அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள 'வித் லவ் ( With Love )' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான அட்லீ அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜென் ஜீ ( Gen z) (தலைமுறையினரை) கவரும் வகையிலான காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான்  தயாரித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வித்...
CLOSE
CLOSE