Thursday, November 26

Blog

மம்மூட்டி – மோகன்லால் இணையும் “பேட்ரியாட்”!

மம்மூட்டி – மோகன்லால் இணையும் “பேட்ரியாட்”!

News
இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் !!  மம்மூட்டி – மோகன்லால் – மகேஷ் நாராயணன் இணையும் "பேட்ரியாட்" ( “Patriot” )  திரைப்படம்! *ஏப்ரல் 23, 2026 அன்று திரையரங்குளில் வெளியாகிறது !!* இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் "பேட்ரியாட்" -படத்தின் அதிகாரப்பூர்வ  வெளியீட்டு தேதி அட்டகாசமன போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் திரைப்படம், 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் தமிழ் போஸ்டரை அட்லீயும், தெலுங்கு போஸ்டரை விஜய் தேவரகொண்டாவும் , ஹிந்தி போஸ்டரை கரண் ஜோர்ர...
தேசிய உணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃப்ளாக்’!

தேசிய உணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃப்ளாக்’!

News
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்! ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பில் வைரப் பிரகாஷ் தயாரிப்பில் SP.பொன் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஃப்ளாக். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி மக்கள் மனதில் பெரும் நன்மதிப்பை பெற்று வருகிறது.. இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் வைரப் பிரகாஷ் கூறுகையில்; எங்கள்(I & I Movies)நிறுவனத்தின் முதல் படைப்பு ஃப்ளாக் ( FLAG). தமிழகத்தின் செங்கோட்டை முதல் டெல்லி செங்கோட்டை வரை ஒட்டுமொத்த இந்தியர்களின் அடையாளம் நமது தேசியக்கொடி.. இந்த ஒற்றை புள்ளியில் ஆரம்பித்து எல்லோர் இதயங்களிலும் ஒரு மிகப்பெரிய தேசிய உணர்வை.. மீண்டும் ஒரு முறையாவது இந்தியனாக பிறக்க வேண்டும் என்ற உணர்வை, ஒவ்வொரு பார்வையாளரின் இதயத்திற்கும் ப்ளாக் திரைப்படம் கொடுக்கும். ஃப்ளாக் திரைப்படம் 17 மாநிலங்களில் படம்பிடிக்கப்பட்டு இருப்பது பெருமைக்குரியது. ...
ரீ ரிலீஸ் படங்களால் நேரடிப் படங்களுக்கு ஆபத்து : இயக்குநர் பேரரசு பேச்சு!

ரீ ரிலீஸ் படங்களால் நேரடிப் படங்களுக்கு ஆபத்து : இயக்குநர் பேரரசு பேச்சு!

News
'ஜனநாயகன்' பிரச்சினையில் உண்மை வெளியே தெரிய வேண்டும்: இயக்குநர் பேரரசு பேச்சு! :ஜனநாயகனு'க்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை? இயக்குநர் பேரரசு கேள்வி! விஜய் யாருக்கும் குரல் கொடுக்காததால் அவருக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை: கே.ராஜன் பேச்சு! சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து 'ப்ராமிஸ்'என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .நாயகியாக நதியா நடித்துள்ளார். சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. N.நாகராஜ் தயாரித்துள்ளார். இந்த 'ப்ராமிஸ்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன்,தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம்,நடிகர் காதல் சுகுமா...
34 திரைப்படங்கள் – இயக்குநர்கள் அறிமுக விழா!

34 திரைப்படங்கள் – இயக்குநர்கள் அறிமுக விழா!

News
செழியனின் 'தி ஃபிலிம் ஸ்கூல்' மாணவ படைப்பாளிகளின் 34 திரைப்படங்கள் - இயக்குநர்கள் அறிமுக விழா! *உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளன* தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர், எழுத்தாளர், திரை ஆர்வலர் என பன்முக ஆளுமை கொண்ட செழியன், ' தி ஃபிலிம் ஸ்கூல்' எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட 34 மாணவ படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேரின் 34 திரைப்படங்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் புதிய சரித்திரம் படைத்த...
பின்னணி பாடகி எஸ். ஜானகி புதல்வன் மறைவு!

பின்னணி பாடகி எஸ். ஜானகி புதல்வன் மறைவு!

News
24/1/2026 பிரபல பின்னணி பாடகி ஸ்ரீமதி எஸ். ஜானகி அவர்களின் புதல்வனும் எனது தந்தையுமான ஶ்ரீ வைத்யுலா முரளி கிருஷ்ணா அவர்கள் நீண்ட கால சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி 22, 2026 அன்று அதிகாலை 12:55 மணிக்கு மைசூரில் இறைவனடி அடைந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தை அர்ப்பணிப்புள்ள மகனாக ஸ்ரீமதி ஜானகி அவர்களுக்கு தொடர்ந்து பக்க பலமாகவும் உறுதுணையாகவும் தனது இறுதி நாட்கள் வரை இருந்து வந்தார். அவர் தன் தாயின் வழியில் ஒரு திறமையான இசைக்கலைஞராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி மூச்சு அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் சூழ்ந்திருக்கப் பிரிந்தது. அவரது இறுதிச் சடங்குகள் குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தப்பட்டன. அவரது மறைவு எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருப்பதால் எங்கள் உணர்வுகள...
ஆரி அர்ஜுனன் நடிக்கும் “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம்!

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம்!

News
ஆரி அர்ஜுனன் நடிக்கும் “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம் அடுத்த மாதம் திரைக்குவருகிறது ! MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள “ஃபோர்த் ஃப்ளோர்” திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L R சுந்தரபாண்டி. சைக்காலஜிகள் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினை எதார்த...
“குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்” பட திரைக்கதை நூல் வெளியீட்டு விழா!

“குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்” பட திரைக்கதை நூல் வெளியீட்டு விழா!

News
கடந்த 2019ல் டைரக்டர் ராஜமோகன் இயக்கத்தில் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்ட படம் “*குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்” ! SPB சரண் தயாரிப்பில் வெளியான இந்த ‘குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்’.. இயக்கிய ராஜமோகன், இயக்குநர்கள் ராஜகுமாரன், விஜய் மில்டன். ஏ,.வெங்கடேஷ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். டைரக்டர் சேரன் உதவியாளரான ராமகிருஷ்ணன் கதாநாயகனாக அறிமுகமானார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் பாபுலரானது. இப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இதன் திரைக்கதை புத்தக வடிவில் வெளியாகியுள்ளது சிறப்பு வாய்ந்ததாக திரையுலகினர் கருதுகிறார்கள். அறம் பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.. சமீபத்தில் நடைபெற்ற சென்னை புத்த கண்காட்சி திருவிழாவில் இப்புத்த வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் ராஜமோகன், ராஜகுமாரன், விஜய் மில்டன், நடிகர் ராமகிருஷ்ணன், கவிஞர...
புத்தக கண்காட்சியில் வெளியான விஜய் மில்டனின் காதல் கவிதைகள் தொகுப்பு!

புத்தக கண்காட்சியில் வெளியான விஜய் மில்டனின் காதல் கவிதைகள் தொகுப்பு!

News
49வது புத்தக கண்காட்சியில் ஆனந்த விகடன் பிரசுரித்த விஜய் மில்டன் கவிதைகள் நூல் வெளியிட்டது! காதலும் காதல் சார்ந்தவைகளும் என்ற தலைப்பு சொல்லோடு இருக்கும் இந்த கவிதை புத்தகம். மனுஷ்ய புத்திரன்,கலாப்ரியா, இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் ரா. பார்த்திபன், இயக்குனர் அகத்தியன், இயக்குனர் பிருந்தா சாரதி அனைவரின் அணிந்துரையோடு வந்திருக்கிறது. ப்ரியமுடன் காதல், ஆட்டோகிராப், வழக்கு எண் 18/9, தீபாவளி, கோலி சோடா, மழை பிடிக்காத மனிதன், 10 எண்றதுக்குள்ள போன்ற திரைப்படங்களில் கேமரா வழியாக கவிதை சொன்ன விஜய் மில்டன். புத்தகம் வழியாக கவிதை சொல்லயிருக்கிறார். புத்தகத்தை படித்த கலாப்ரியா இப்படி சொல்கிறார், " இந்த கவிதைகள் இயல்பாகவே என்னைக் கவர்ந்ததில் எந்த வியப்புமில்லை. விஜய் மில்டன்,'ரோஜா கனவு', 'வெள்ளைப் புறாக்கதை' போன்ற பலவிதமான கவிதைகளை இதில் முயன்று பார்த்து அதில் வெற்றியும் அடைந்திருக்...
450 + திரையரங்குகளில் வெளியாகும் ‘திரெளபதி’!

450 + திரையரங்குகளில் வெளியாகும் ‘திரெளபதி’!

News
தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி வழங்கும் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் 'திரெளபதி 2'! இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான பிரம்மாண்ட கதைகளை கொடுக்க தயாரிப்பாளர்களின் ஆதரவு மிக அவசியம். அப்படியான திரைப்படங்கள் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கிறது என்றால் அதற்கு சோலா சக்ரவர்த்தி போன்ற தயாரிப்பாளர்களே முக்கிய காரணம். இன்று (ஜனவரி 23, 2026) உலகம் முழுவதும் 450 + திரையரங்குகளில் வெளியாகும் 'திரெளபதி' திரைப்படத்தை தயாரித்திருப்பதன் மூலம் திரைத்துறையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி. படம் குறித்து தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி பகிர்ந்து கொண்டதாவது, "இயக்குநர் மோகன் ஜி 'திரெளபதி 2' கதையை பிரம்மாண்டமாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய டைரக்‌ஷன் ஸ்டைல், சரியான திட்டமிடல், அர்ப்பணிப்பு இவை எல்லாம்தான் பல சவால்களை தாண்டி படத்தை திட்ட...
மறக்கப்பட்ட பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கும்“திரௌபதி 2″

மறக்கப்பட்ட பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கும்“திரௌபதி 2″

News
“திரௌபதி 2 தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறது” – இயக்குநர் மோகன் ஜி! ‘திரௌபதி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மோகன் ஜி, தற்போது மிகப் பெரும் வரலாற்றுக் காவியமான ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறார். துணிச்சலான கதை சொல்லல் மற்றும் வரலாற்று நுணுக்கங்களில் மிகுந்த கவனம் செலுத்தும் இயக்குநராக அறியப்படும் மோகன் ஜி, 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சால பேரரச வம்சத்தின் மகத்துவத்தை மீண்டும் உயிர்ப்பிக்க தமிழ் சினிமாவின் சிறந்த கலைஞர்களை ஒருங்கிணைத்துள்ளார். ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாகவும், தமிழ்நாட்டின் செழுமையான ஆனால் மறைக்கப்பட்ட பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு வரலாற்று சினிமா ஆவணமாகவும் இருக்கும் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். படம் குறி...
CLOSE
CLOSE