Thursday, November 26

Blog

ஜி.வி. பிரகாஷ் குரலில் ‘திருவாசகம்’ பாடல் !

ஜி.வி. பிரகாஷ் குரலில் ‘திருவாசகம்’ பாடல் !

News
ஜி.வி. பிரகாஷ் குரலில் சிவனின் மகிமை போற்றும் – திருவாசகத்தின் முதல் பாடல் வெளியானது ! தமிழ் ஆன்மிக இலக்கிய உலகின் உச்ச சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் திருவாசகம், இப்போது சமகால இசை வடிவில் புதிய உயிர் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமார் குரலும் இசையும் இணைந்து உருவான திருவாசகத்தின் முதல் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி, ஆன்மிக இசை ரசிகர்களிடையே ஆழ்ந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக வழங்கியபோது, அந்த மேடை முழுவதும் ஒரு தெய்வீக அமைதி சூழ்ந்ததாக பேசப்பட்டது. அந்த ஒரே நிகழ்விலேயே, திருவாசக இசை முயற்சியின் ஆழமும் ஆன்மிக வலிமையும் வெளிப்பட்டது. ஜி.வி. பிரகாஷின் YouTube சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள...
கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப் பயணம்!

கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப் பயணம்!

News
'என்னோடு வா வீடு வரைக்கும்': கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சி! பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால கலைப்பயணத்தை போற்றும் வகையில், சென்னையில் 'என்னோடு வா வீடு வரைக்கும்' என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் மனதைத் தொடும் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவில் முத்திரை பதித்தவர் கௌதம் மேனன். அவரது படங்களின் காலத்தால் அழியாத இசையை மீண்டும் மேடையில் கொண்டுவர உள்ளது இந்த நிகழ்ச்சி. இந்த இசை நிகழ்ச்சியில், கௌதம் வாசுதேவ் மேனனின் படங்களில் முக்கிய அங்கமாக இருந்த பிரபல பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் இணைய உள்ளனர். கார்த்திக், சித் ஸ்ரீராம், பிளேஸ், பால் டப்பா, ஆல்போன்ஸ், ஷாஷா திருப்பதி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா மற்றும் சாருலதா மணி உள்ளிட்ட நட்சத்திரக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த இசை நிகழ...
பாலிவுட்டில் கால் பதிக்கும் தென்னிந்திய இசையமைப்பாளர்!

பாலிவுட்டில் கால் பதிக்கும் தென்னிந்திய இசையமைப்பாளர்!

Photos
பாலிவுட்டில் கால் பதித்த இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab ) தென் இந்தியாவிலிருந்து பாலிவுட் வரை –ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab ) இசைப் பயணத்தின் புதிய அத்தியாயம்!! தென் இந்திய சினிமாவில் தனது தனித்துவமான இசையால் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab) பாலிவுட் திரையுலகில் கால்பதித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி (Sanjay Leela Bhansali) தயாரிக்கும் “தோ திவானே ஷெகர் மெய்ன்” (Do Deewane Sheher Mein) திரைப்படத்தின் மூலம், ஹேஷாம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.இது தென் இந்திய திரைப்பட உலகுக்கே பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது. இசைக்காக அறியப்படும் ஒரு படைப்பாளி, பல மொழித் திரையுலகுகளை வெற்றிகரமாக கடந்து, இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தளமான பாலிவுட்டில் அறிமுகமாகுவது குறிப்பிடத்தக்கது. “தோ திவானே ஷெகர் மெய்ன...

‘மாயபிம்பம்’ வெளியாவதற்கு முன்பே அதன் இயக்குநருக்கு அடுத்த பட வாய்ப்பு !

News
    புதியவர்களுக்கு மேடை அமைக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி K கணேஷ் – மாயபிம்பம் இயக்குநருக்கு புதிய வாய்ப்பு ! தமிழ் சினிமாவில் புதிய முகங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு நம்பிக்கையுடன் பெரிய வாய்ப்புகளை வழங்கி வருவது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. அந்த வரிசையில், “மாயபிம்பம்” திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், படத்தின் இயக்குநரின் முயற்சியையும், கதை சொல்லும் விதத்தையும் மனதார பாராட்டி, அவருக்கு உடனடியாக புதிய பட வாய்ப்பை வழங்கியுள்ளார். புதிய இயக்குநர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இந்த அணுகுமுறை, வேல்ஸ் ஃபிலிம்ஸின் தயாரிப்பு முக்கிய நோக்கத்தை, மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது. தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல...

கதையின் நாயகனாக L.K.அக்ஷய் குமார் நடிக்கும் படம்!

News
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 13 ' படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது! 'சிறை ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகர் L. K. அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 13' படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன் மற்றும் 'டியூட்' படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப...
ஜாக்கி _ விமர்சனம்

ஜாக்கி _ விமர்சனம்

News
ஜாக்கி _ விமர்சனம் மதுரையை சுற்றி உள்ள கிராமங்களில் நடைபெறும் சேவல் சண்டை போல், மற்றும் ஒரு புகழ் பெற்ற பாரம்பரிய போட்டி கிடா சண்டை ஆகும். ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார் செய்வதுபோல் நிறைய செலவு செய்து பயிற்சி அளித்து போட்டியில் கலந்து கொள்ளும் கிடாவை வளர்ப்பார்கள். வீர விளையாட்டாக தொடங்கும் போட்டி, பின்னர் சண்டையாக மாறி, கௌரவ பிரச்சனை வடிவெடுத்து, வெட்டு குத்து என்று ரணகளமாக மாறுவது சாதாரண விஷயம்தான். இந்தப் பின்னணியை கொண்டு உயிர்ப்புடன் ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரகபல். சாதாரணமாக வீட்டில் வளர்க்கப்படும் ஓர் ஆட்டுக்குட்டியை கூட சினிமாவில் நடிக்க வைப்பது கடினமான செயல்  என்ற நிலையில் தலையிலேயே முட்டி ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் கிடா வகை ஆட்டை வைத்து இத்தகையா ஒரு படத்தை கொடுத்ததற்காக படக்குழுவை தாராளமாக பாராட்டலாம். மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டும் யுவன் கிருஷ்ணா, காளி...
Music Director Ghibran Crafts Draupathi 2’s Timeless Soundscape for ‘Draupathi 2’

Music Director Ghibran Crafts Draupathi 2’s Timeless Soundscape for ‘Draupathi 2’

News
Music Director Ghibran Crafts Draupathi 2's Timeless Soundscape for ‘Draupathi 2’ Music composer Ghibran, whose discography consistently leaves music lovers awestruck through masterful fusion of spiritual essence across diverse genres, delivers an extraordinary score for Mohan G's historical epic Draupathi 2, directed by Mohan G, and produced by Sola Shakkaravarthi of Netaji Productions. From debut album to recent chart-toppers, Ghibran's compositions now elevate this emotional saga ahead of its worldwide release tomorrow, January 23, 2026. Music Director A. Ghibran shares: "Travelling back in time to create music beyond our era proved profoundly challenging. I thank director Mohan G and producer Sola Shakkaravarthi for this opportunity. Draupathi 2 transcends routine war drama, embody...
ஹாட் ஸ்பாட் 2 மச்_ விமர்சனம்

ஹாட் ஸ்பாட் 2 மச்_ விமர்சனம்

Reviews
ஹாட் ஸ்பாட் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஹாட் ஸ்பாட் 2 மச் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தில் நான்கு கதைகள் இருந்ததுபோல் இதில் மூன்று  வெவ்வேறு கதைகள் இருக்கின்றன. முதல் கதையே தன் அபிமான நடிகனுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் சினிமா வெறியர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றுகிறது. எதிரெதிர் துருவங்களாக இருக்கும் வெறித்தனமான சினிமா ரசிகர்களின் நெருங்கிய உறவுகளை கடத்தி, அவர்களை கொலை செய்யப் போவதாக மிரட்டி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து திருத்தும் வேடத்தில் எம்எஸ் பாஸ்கர் பிரமாதமாக நடித்திருக்கிறார். இரண்டாவது கதையில் தம்பி ராமையாவின் மகள் வெளிநாடு சென்று படித்து விட்டு திரும்பும் போது அரைகுறையாக ஆடை அணிந்து வருவதுடன், விருந்தினர்கள் வரும்போதுகூட வீட்டிலும் அவ்வாறே இருப்பதும் அதை நியாயப்படுத்தி பேசுவதுமாக இருக்கிறார். மகளுக...
வெற்றிக் கூட்டணியில் ஒரு கமர்சியல் என்டர்டைனர்!

வெற்றிக் கூட்டணியில் ஒரு கமர்சியல் என்டர்டைனர்!

News
சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் ! தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “புருஷன்” திரைப்படத்தை Benzz Media Pvt Ltd சார்பில் A.C.S.அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படத்தை சுந்தர் சி இயக்க, விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, திரைப்பட வர்த்தக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்...
டோவினோ தாமஸ்  பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi)  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

டோவினோ தாமஸ்  பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi)  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

News
டோவினோ தாமஸ் பிறந்தநாள் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட “பள்ளிச்சட்டம்பி”  படக்குழு !   ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது ! டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்  வெளியாகி, சமூக வலைதளங்களில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று, அதிக அளவில் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிச்சட்டம்பி படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு சிறப்பு பிறந்தநாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில்  வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு போஸ்டர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. “பள்ளிச்சட்டம்பி” திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது....
CLOSE
CLOSE