
வெளியீட்டுக்கு முன்பே ஹிட்டான’ஜென்ம நட்சத்திரம்’!
'ஜென்ம நட்சத்திரம்' வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!
ஊடகங்களின் பாராட்டுகளும், முன்னோட்டக் காட்சிகளின் சிறப்பான எதிர்வினைகளும் 'ஜென்ம நட்சத்திரம்' படத்துக்கு வணிக வட்டாரத்திலும் திரையரங்க உரிமையாளர்களிடமும் வலுவான வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன. ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடும் இந்த அதிரடித் திகில் திரைப்படம் ஜூலை 18 (வெள்ளிக்கிழமை) உலகமெங்கும் திரைக்கு வர உள்ளது. சினிமா வட்டாரத்தில், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பலத்த ஓப்பனிங்கை பெறும் என எதிர்பார்ப்பு வளர்ந்துவருகிறது.
துல்லியமான அணுகுமுறை, தரமான உள்ளடக்கம், மற்றும் பாணியை மதிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட கதை , இவை அனைத்தும் வெற்றிகரமான திரைப்படத்தின் ரகசிய சூத்திரம். 'ஜென்ம நட்சத்திரம்' குழு, அந்த சூத்திரத்தை கைவசப்படுத்தி விட்டது போலவே தெரிகிறது.
1981-ஆம் ஆண்டு வெளியான அதே பெயரைக் கொண்...