Wednesday, October 28

News

பிரம்மாண்டமாக உருவாகும் சரத்குமாரின் 171வது திரைப்படம்!

News
https://youtu.be/lBoe3yDdHvQ?si=yvYH1NM4_K1GMFhX சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி; பி. எல். தேனப்பன் – பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் இணைந்து வழங்குகிறார்கள்! சென்னை: தமிழ் திரைப்பட உலகில் முக்கிய அறிவிப்பாக, சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்தை ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பனுடன், இணை தயாரிப்பாளராக பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த கூட்டணி இன்று சரத்குமாரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், பி. எல். தேனப்பனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தல...
சினிமா ரசனயை மேம்படுத்துவது குறித்த புதிய நூல்!

சினிமா ரசனயை மேம்படுத்துவது குறித்த புதிய நூல்!

News
வணக்கம், நம் குழந்தைகளுக்கு. பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு இதுதான் சரியான சினிமா என்று சினிமா ரசனைக் கல்வியை இங்கே யாரும் தருவதே இல்லை. இதைத்தான் என் அன்பு ஆசான் பாலுமகேந்திரா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் முன்மொழிந்து, மிகத் தீவிரமாக வலியுறுத்தி வந்தார். பள்ளிகளில் ஓவியம், விளையாட்டு போன்ற கலைகளுக்குப் பாடங்கள் இருப்பது போல, நம் உடலிலும் நாடி நரம்புகளிலும் கலந்திருக்கும் சினிமாவுக்கும் எது சிறந்த சினிமா என்று சொல்லித் தரும் ரசனைக் கல்வி வேண்டும் என்பதுதான் அவருடைய மிக முக்கியமான கோரிக்கையாக இருந்தது. உலக சினிமா ரசனையை எவ்வாறு நமது மாணவச் செல்வங்களுக்குக் கொண்டு செல்லலாம் என்ற வகையில் இந்தச் சிறிய முயற்சி அவர் வைத்த ஆரம்பப் புள்ளியில் உண்டான கோலம் இது. அவர் ஏற்றிவைத்த அந்தச் சுடரை, இன்று நான் வழிமொழிவதில் என் அகம் மகிழ்கிறது. -சீனு ராமசாமி...
ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா!

ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா!

News
ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா! வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின் (Train) படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சத்தியம் சினிமாஸில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் மடோன் அஷ்வின், பி எஸ் வினோத் ராஜ், தமிழரசு பச்சைமுத்து, அருண் மாதேஸ்வரன், அமீர், விக்னேஷ் சிவன், சசி, ஆர் பார்த்திபன், ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். *தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு* அவர்கள் பேசும்பொழுது இன்ப நாள் இது இனிய நாள் இது. மிஷ்கின் பற்றி சொன்னால் நான் ஈன்று எடுக்காத பிள்ளை. எல்லா படத்திற்கும் நான் கதை கேட்பேன் இந்த படத்திற்கு நான் கதை கேட்கவே இல்லை. இந்த படம் க...
ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துl

ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துl

News
  டெல்லியில் நடந்த விழாவில் 60ஆவது ஞானபீட விருது, கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் கரண்சிங் விருது வழங்கினார். ஞானபீடத்தின் நிர்வாக அறங்காவலர் அகிலேஷ் ஜெயின், தேர்வுக்குழுத் தலைவர் டாக்டர் பிரதிபா ராய் மற்றும் நிர்வாகிகள் உடனிருக்கிறார்கள். இலக்கியத்துக்கு பல்கலைக்கழகம் வேண்டும் ஏற்புரையில் கோரிக்கை! *இந்தியாவில் இலக்கியத்துக்கு உயர்ந்தபட்சமாக வழங்கப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 25ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழி பெற்றிருக்கும் மூன்றாவது ஞானபீட விருது இதுவாகும்.* ஜூலை 13 டெல்லியில் நடந்த விழாவில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் டாக்டர் கரண் சிங் விருதை வழங்கினார். ஞானபீட அமைப்பைச் சேர்ந்த சாகு அகிலேஷ் ஜெயின், ஸ்ரீ முதத் ஜெயின், பிரதீபா ராய், ஆர்.என்.திவாரி ஆகியோர் மேடையில் இருந்தனர். விருதைப் பெற...
சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

News
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'Welcome to Wildlife' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்கும் " welcome to wildlife " கார்த்திக் ராஜு இயக்குகிறார். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான 'Welcome to Wildlife' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திருடன் போலீஸ், தெலுங்கில் சந்தீப்கிஷன் நடித்த நினு வீதனி நீ தானு நேனே 'Ninu Veedani Needanu Nene', சமீபத்தில் வெளியான சிங்கிள் 'Single' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் ராஜு இந்த படத்தை இயக்குகிறார். பிரமாண்டமான பான் - இந்தியா படமாக தயாராகிவரும் இந்த படத்தை KVK Productions சார்பில் குடிபுடி விஜய் கும...
ராசி அழகப்பன் எழுதி இயக்கித் தயாரிக்கும் ‘ஆண்ட’ திரைப்படம்!

ராசி அழகப்பன் எழுதி இயக்கித் தயாரிக்கும் ‘ஆண்ட’ திரைப்படம்!

News
மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு – ‘ஆண்ட’ சென்னை: தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை வழங்கி வரும் மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம், சிறுவர்களுக்கான திரைப்படமாக உருவாகி பாராட்டுகளைப் பெற்றது. இத்திரைப்படத்திற்கு தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளை வலியுறுத்திய திரைப்படம் என்ற விருது வழங்கப்பட்டது. மேலும், அதில் நடித்த குழந்தை நட்சத்திரம் லக்ஷ்மி, அந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தமிழக அரசு விருதைப் பெற்றார். இதன்மூலம் ‘வண்ணத்துப்பூச்சி’ திரைப்படம் இரண்டு தமிழக அரசு விருதுகளைப் பெற்ற பெருமையைச் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர்–இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு ‘குரங்கு பெடல்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் தனது அடுத...
அமைச்சரைப் புகழும் திரைப்பட இயக்குனர்!

அமைச்சரைப் புகழும் திரைப்பட இயக்குனர்!

News
பாசுக்கு அமைச்சர் – இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி...! விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா' மற்றும் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் இயக்குநர் சுரேஷ். இவர் எஸ்.ஏ., சந்திரசேகரின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். அவர் கூறுகையில்., " இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் முதலமைச்சர் விஜய்யை வைத்து இயக்கிய 'ரசிகன்', 'மாண்புமிகு மாணவன்' மற்றும் 'ஹரிதாஸ்', 'வட்டக்கானல்' போன்ற பல படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆர்.கே, வரதராஜ். நாங்கள் இருவரும் எஸ்.ஏ.சி., சார் பயிற்சிப் பட்டறையில் பயின்றவர்கள். சமீபத்தில் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளரும் தமிழக அமைச்சருமான வெங்கட்ரமணனைச் சந்தித்தோம். ஆரம்ப காலத்தில் இருந்து எங்களது இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் மற்றும் தமிழக முதல்வர் விஜய்யுடன் பயணித்து வருபவர் என்பதால் அவருடன் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது...
ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புதிய படம்!

ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புதிய படம்!

News
ஷிவானி ஸ்டுடியோஸின் புதிய பொழுதுபோக்கு படம் – எழுதி, இயக்கி, தயாரிக்கும் ஷிவானி செந்தில் கார்கில், டேக் டைவர்ஷன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் கதை, தற்போதைய காலகட்டத்தில் கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளச் செல்லும் நான்கு நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சனைகள், அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. நகைச்சுவை, காதல் மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகு...
‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு!

‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு!

News
நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' படத்தின் டீசர் வெளியீடு! பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணியில் ஒரு மாயாஜால நிகழ்வாக 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' திரைப்படம் உருவாகிறது. ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயா, இந்தியாவின் பெருமையை பறைசாற்றிய 'பாகுபலி' படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இ...
‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

News
‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!! ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். பரிதாபங்கள் கோபி பேசியதாவது.., “இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் பாரி இளவழகன் சகோதரருக்கு சிறப்பு நன்றி. என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ‘ஜமா’ பார்த்ததிலிருந்தே அவருடைய...