Kavan Movie Press Release
கல்பாத்தி எஸ். அகோரம், கணேஷ் மற்றும் சுரேஷ் சகோதரர்கள் இணைந்து வழங்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment)நிறுவனம், தனி ஒருவன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தங்களது பதினெட்டாவது தயாரிப்பாக வெளிக்கொண்டுவரும் புதிய படத்தின் இயக்குநர் திரு கே.வி. ஆனந்த்.
இதுவரை பெயரிடப்படாத இத்திரைப்படத்துக்கு சில தலைப்புகளைக் குறிப்பிட்டு சரியான தலைப்பை யூகிக்கச் சொல்லி ட்விட்டர் மூலம் இயக்குநர் அறிவித்திருந்தார். நேயர்கள் பெருமளவில் தங்கள் யூகங்களைக் குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்கு ஏஜிஎஸ் நிறுவனமும், இயக்குநர் கே.வி. ஆனந்தும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர். இப்போது படத்தின் தலைப்பு “கவண்” என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி, 'கவண்' என்று கருதப்படுகிறது. இ...








