Thursday, October 29

News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

News
“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது.., “அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த வசனங்களைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் இந்த ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் கிராமப்புறங்கள...
‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
மைத்ரி மூவி மேக்கர்ஸின் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது! சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு எனும்போது, அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு திரைப்படத்தை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள...
ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’

News
ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2’… தமிழ் சினிமாவின் தரமான திரில்லர் படைப்புகளில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான ‘காளிதாஸ் 2’, தற்போது சர்வதேச அளவில் மேலும் ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (Shanghai International Film Festival - SIFF 2026)-வில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ தேர்வாகியுள்ளது. சீனாவின் ஷாங்காயில் ஜூன் 12 முதல் 21 வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், இந்...
‘ஹைக்கூ’ படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றிய நெட்ஃபிலிக்ஸ்!

‘ஹைக்கூ’ படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றிய நெட்ஃபிலிக்ஸ்!

News
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹைக்கூ' திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்! விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற எளிய பூஜையுடன் படத்தின் டப்பிங் பணியை கதாநாயகன் ஏகன் தொடங்கினார். யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தை, விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ள ந...
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வரும்  ‘நடு நாடு’ திரைப்படம்!

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வரும் ‘நடு நாடு’ திரைப்படம்!

News
சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு. இத்திரைப்படத்தின் அறிமுக நாயகன் அருண்குமார் நாயகியாக அனுஸ்ரீ நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் காந்தாரா புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க மற்றும் கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் நடு நாடு இத்திரைப்படம் மிகப் பெரிய பொருட்செளவில் முழுக்க முழுக்க கடலூர் மாவட்டத்தில் மற்றும் சென்னை சுற்றியுள்ள இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது கல்வியில் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது தமிழ் திரைப்படத்தில் வெற்றிகளை குவித்த இசையமைப்பாளர் பரணி அவர்கள் இசையமைக்க ஒளிப்பதிவு செந்தில் மாறன் கவனிக்க படத்தொகுப்பு r.k. செல்வன் இத்திரைப்படம் போஸ் ப்ரோடுக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் விரைவில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆறுமுகம் மாணிக்கம் மற்றும்...
ஐந்து மொழிகளில் உருவாகும்  ‘ஃபீல் மை லவ்’  திரைப்படம்!

ஐந்து மொழிகளில் உருவாகும் ‘ஃபீல் மை லவ்’  திரைப்படம்!

News
ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது " ஃபீல் மை லவ் " ஹரி பிரகாஷ் எம் இயக்கியுள்ளார். காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் 'ஃபீல் மை லவ்' (Feel My Love) ஆகஸ்டில் திரைக்கு வருகிறது. பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல 'பான்-இந்தியா' (Pan-India) திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A. N.பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் " Feel My Love " ஃபீல் மை லவ் " தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் M.S. பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் நடித்துள்ளார். ஹவுஸ் மேட்ஸ்' (House Mates) படத்தின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்த எம்...
ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 48வது படம் !

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 48வது படம் !

News
ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா - இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது! மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும் இயக்குநர் த .செ. ஞானவேல் இயக்கத்தில், இந்திய சினிமா ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கிவரும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், S-48 திரைப்படம் உருவாகிறது. ஸ்டாராவும், சிறந்த நடிகராகவும் விளங்கும் சூர்யாவுடன் இணைந்து இந்திய அளவில் தாக்கத்தை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் த.செ. ஞானவேல். எல்லா தரப்பு சினிமா ரசிகர்களின்  கவனத்தையும் பெற்று ஆச்சர்யப்பட வைத்த இவர்கள் மீண்டும் இணையும் திரைப்படத்தை, கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் ப...
மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் தெய்வீக திரைப்படம்!

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் தெய்வீக திரைப்படம்!

News
மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்! பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava (அரவிந்த சமேத வீரராகவா)-க்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் உருவாகுவது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தைப் பற்றி என்.டி.ஆர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் திரிசூலம் மற்றும் வேல் ஒன்றிணைவதுடன் DNA வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும், “ஒரே வேல்… ஒரே நோக்கம்… ஒரே தெய்வீக தீர்ப்பு” (One Spear, On...

நோவா’ படத்தில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி!

News
‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி! ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival). இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் எடுத்து வைக்கிறார். ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது . கதையின் நாயகியாக பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார்.. இன்னொரு கதாநாயகியாக, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ‘ஆண்மை தவறேல்’ துருவா, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவில் திரைக்கு வரும் விதமாக இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப...
‘அரூபி’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

‘அரூபி’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

News
விரைவில் வெளியாகும் ‘அரூபி’… தமிழ் பதிப்பின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலம்! மலையாளத்தில் உருவாகியுள்ள ‘அரூபி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் நிறைந்த இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. “சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வரியுடன் தொடங்கும் டிரெய்லர், பல்வேறு மர்மங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிறைந்த கதைக்களத்தை முன்னிறுத்துகிறது. விறுவிறுப்பான காட்சிகள், பின்னணி இசை மற்றும் திகில் கலந்த திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுக்கு பின் படக்குழு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் இயக்குநர் அபிலாஷ் ...