காதலும் த்ரில்லும் கலந்த விறுவிறுப்பான திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30’!
காதலும் த்ரில்லும் கலந்த விறுவிறுப்பான திரைப்படம் 'சிக்னல் அட் 11.30'!
'சிக்னல் அட் 11.30' என்ற தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படம் குறித்தான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். காதல், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட விறுவிறுப்பான திரையனுபவத்தை வழங்கும் படமாக இது அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சில கதைகள் ஒரு கேள்வியிலேயே ஆர்வத்தைத் தூண்டும். அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் 'சிக்னல் அட் 11.30'. படத்தின் தலைப்பே ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், படத்தலைப்பின் அர்த்தத்தை இதுவரை வெளிப்படுத்தாமல், திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்திற்காக படக்குழு அதனை சஸ்பென்ஸோடு வைத்திருக்கிறது.
...








