Thursday, October 8

Reviews

ராட்சசன் – திரைப்பட விமர்சனம்

ராட்சசன் – திரைப்பட விமர்சனம்

Reviews
சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கிற கனவோடு கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்களின் அலுவலகத்திற்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார் இளைஞர் விஷ்ணு விஷால். சந்திக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் ‘இப்போ; அப்போ’ என்று அவரை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய தந்தை போலீஸ் வேலையில் இருந்தபோதே இறந்து போனதால் கருணையின் அடிப்படையில் ஒரு அரசு வேலை அந்தக் குடும்பத்திற்கு உண்டு. அதை ஏற்றுக்கொள்ளும்படி விஷ்ணு விஷாலின் அம்மா அவரை வற்புறுத்துகிறார். விஷ்ணுவுக்கோ கோடம்பாக்கத்தின் கோட்டையைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை. மீண்டும், மீண்டும் படையெடுக்கிறார். முடியவில்லை. கடைசியாக ஒரு தயாரிப்பாளர் ‘நாம படம் பண்றோம் தம்பி’ என்று வாக்குறுதி கொடுக்கிறார். வழக்கம்போல் இந்த வாய்புப்பும் கை நழுவுவவே, வேறு வழியின்றி இனி அம்மா சொல்படி போலீஸ் வேலைக்கே போகலாம் என்று முடிவெடுக்கிறார் விஷ்ணு. சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார்...
கடிகார மனிதர்கள் –  விமர்சனம்

கடிகார மனிதர்கள் – விமர்சனம்

Reviews
சென்னை மாநகரில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் அவஸ்தைகளையும், நரகத்துக்கு நிகரான வாழ்க்கையையும் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கும் படம் கடிகார மனிதர்கள். பேக்கரியில் வேலை பார்க்கும் கிஷோர் தன் மனைவி லதாராவ் மற்றும் மூன்று குழந்தைகளுடன் பாலா சிங்கின் காம்ப்பவுண்டில் உள்ள ஸ்டோர் வீடு ஒன்றுக்கு வாடகைக்கு குடிவருகிறார். வண்டியில் சாமான்களுடன் வீடு தேடி வந்ததால், நான்கு பேர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற பாலாசிங்கின் நிபந்தனையை ஒத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் கிஷோருக்கு. மறைக்கப்பட்ட நான்காவது பையனை அன்றாடம் பேக்கரி பெட்டியிலேயே மறைத்து வைத்து எடுத்துச் சென்று பள்ளியில் விட்டு அழைத்து வருகிறார் கிஷோர். பாலாசிங்கின் மகள் ஷெரீனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டால் அத்தனை வீடுகளுக்கும் சொந்தக்காரராகிவிடலாம் என்ற கனவுடன் கருணாகரன் மற்றொரு வீட்டுக்கு வாடகைக்கு வருகிறார். சினிமாவில் பெரி...
ஜுங்கா – விமர்சனம்

ஜுங்கா – விமர்சனம்

Reviews
தரமான நகைச்சுவையை தாராளமாக வழங்கினால் குறைந்த பட்ச வெற்றிக்கு உத்ரவாதம் என்பதை பல தமிழ்ப் படங்கள் நிரூபித்திருக்கின்றன. ஏதாவது ஒரு விஷயத்தை கிண்டல், நையாண்டி, பகடி என்று பல்வேறு பாணி வசனங்களினால் செய்யப்படுவது ஒரு வகை. தமிழ் சினிமாவில் என்.எஸ்.கிருஷ்ணன், கவுண்டமணி, விவேக், வடிவேலு போன்றவர்கள் இந்த முறையில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். கோணங் கித்தனமான அசைவுகளின் மூலம் சிரிக்க வைப்பது இன்னொரு வகை. சந்திரபாபு, நாகேஷ், வடிவேலு போன்றவர் கள், வசனங்களால் மட்டுமன்றி உடலசைவுகளினாலும் நகைச்சுவையை உருவாக்கும் திறமையைப் பெற்றிருந்தார் கள். இவையெல்லாம் வழக்கமான நகைச்சுவை பாணிகள். இதை எல்லாம் உள்ளடக்கிய ‘பிளாக் காமெடி எனும் அவல நகைச்சுவை’ என்பது அபூர்வமாகவே வெளிப்படும். அந்த டைப்பில் விஜய் சேதுபதியை வைத்து  கஞ்சத்தனம்  கொண்ட’ டான்’ தனது மூதாதையர்களின் சொத்துக்களை காப்பாற்ற எப்படி போர...
ஒரு குப்பைக் கதை _ விமர்சனம்

ஒரு குப்பைக் கதை _ விமர்சனம்

Reviews
ஒரு குப்பைக் கதை _ விமர்சனம் ஒரு திரைப்படத்தைத் துவக்குவதென்பது மகத்தான கலை. குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு கேமரா காத்திருக்க வேண்டும். அந்தக் கதாபாத்திரம் வந்த உடனே மளமளவென கதையை சொல்ல ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விமர்சகர் ஒருவர். ஒரு குப்பைக் கதை படத்தில் முதுகைக் காட்டிக் கொண்டிருக்கும் நாயகன் தினேஷ் மாஸ்டர் சற்றே திரும்ப,  முழு முகத்தையும் கேமரா பார்வையாளர்களுக்கு அறிமுப்படுத்தியபின், ஒரு குவார்ட்டரை உள்ளே இறக்கிவிட்டு, மெதுவாக நகர்ந்து ஒசூருக்கபு புறப்படும் பேருந்தில் ஏறுகிறார்.  நாலரை மணியளவில் ஒசூர் சென்றடைந்து அங்கு ரோந்துப் பணியில் இருக்கும் காவலரிடம் பெயரெழுதப்படாமல் முகவரி மட்டுமே இருக்கும் துண்டுக் காகிதத்தைக் காட்டி விசாரிக்கிறார். காவலரும் விலாவரியாக விலாசத்தை விவரித்துவிட்டு நிலையப் பணிக்கு திரும்பிய சற்று நேரத்தி...
“ செயல் “ – விமர்சனம்

“ செயல் “ – விமர்சனம்

Reviews, Uncategorized
  வீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதைப்போல் வெற்றி தோல்வியைக் காட்டிலும் நல்ல நோக்கத்துக்காக நாம் செய்யும் செயல்தான் முக்கியம் என்பதை விளக்க வந்திருக்கும் கருத்துள்ள படம்தான் செயல்.ஒரு வரியில் சொல்லும்போது நன்றாக இருக்கிறது இந்தக் கதை.  மிகப் பெரிய வெற்றிப் படமாக்கியிருக்க வேண்டிய கதையை ஏனோ தானோவென்ற திரைக்கதையாலும் சாதாரண காட்சிகளாலும் சுமாரான படமாக்ககிவிட்டார் இயக்குநர் ரவி அப்புலு.  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய அனைத்துப் பொறுப்புகளும் இவரே பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த ஷாஜகான் படத்தை இயக்கயது இவர்தானாம். உண்மையில் இவர்தான் ஷாஜஹான் படத்தை இயக்கினாரா என்ற சந்தேகமே வருகிறது.... வீட்டு வாசலில் இட்லி சுட்டு விற்று வாழக்கை நடத்தும் ரேணுகா தன் மகன் ராஜன் தேஜேஸ்வரை மார்கெட்டுக்கு அனுப்பி மளிகை சாமான்கள் வாங்கிவரச் சொல்கிறார். மார்க்கெட...
காளி – விமர்சனம்

காளி – விமர்சனம்

Reviews
 அமெரிக்காவில் வாழும் டாக்டர் விஜய் ஆண்டனி. அமெரிக்காவில் தன்னை வளர்த்தவர்கள் உண்மையான பெற்றோர் இல்லை என்றும், அவர்கள் தன்னை தத்தெடுத்தவர்கள் என்றும், தான் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்தில் இருந்தவர் என்பதும் விஜய் ஆண்டனிக்கு ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது. இதனால் தன்னுடைய பெற்றோர்களை தேடி இந்தியா வரும் விஜய் ஆண்டனிக்கு தனது தாயார் பார்வதி இறந்துவிட்டதாகவும், அவரை கர்ப்பமாக்கி ஒருவர் ஏமாற்றிவிட்டதையும் தெரிந்து கொள்கிறார். தன்னுடைய தந்தை கனவுக்கரை என்ற கிராமத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்த விஜய் ஆண்டனி அந்த ஊரில் ஒரு மருத்துவமனையை போட்டு அந்த ஊரின் மக்களுக்கு தெரியாமலேயே கேம்ப் என்ற பெயரில் அனைவரின் ரத்த மாதிரியை எடுத்து அதன்மூலம் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து தனது தந்தை யார்? என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இதில் அவருக்கு வெற்றியும் கிடைக்கின்றது. தனது...
என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா _ விமர்சனம்

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா _ விமர்சனம்

Reviews
என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா என்ற அமர்க்களமான படத்துடன் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன். துணை காவல் ஆணையர் ஒருவர், ராணுவ முகாமில் உள்ள உயர் அதிகாரியிடம் வந்து ஒரு ராணுவ வீரனைப்பற்றி புகார் தெரிவிக்கிறார். மது விடுதி ஒன்றில் தகராறு செய்து, பத்து பேரை அந்த ராணுவ வீரன் அடித்து நொறுக்கியதாகவும், இது குறித்து விசாரணை செய்த தன்னையும் அடித்து கையை ஒடித்து விட்டதாகவும், உடைந்த கையுடனே வந்து புகார் தெரிவிக்கிறார். இந்தப் புகாருக்கு ஆளான ராணுவ வீரன்தான் அல்லு அர்ஜுன். அநீதிகளைக் கண்டால் பொங்கி எழுந்து அடித்து நொறுக்குகிறரா். இதனால் உயர் அதிகாரியால் பல முறை கண்டிக்கப்பட்டும், தன்னை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். இவரது மிகப் பெரிய கனவு எல்லைப் பகுதிக்குச் சென்று காவல் பணியில் ஈடுபடவேண்டும் என்பதுதான். ஆனால் அடிக்கடி அடிதடியில் ஈடுபடும் அல்லு அர்ஜூனு்க்கு ராணுவ...
மெர்க்குரி – விமர்சனம்

மெர்க்குரி – விமர்சனம்

Reviews
மொழியற்ற படம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட மெர்க்குரி திரைப்படத்தில் துவக்க காட்சிகளில் வசனத்துக்கு பதில் சப்டைட்டில் வருவதைப் பார்க்கும்போதே ஏமாற்றம் ஆரம்பமாகிவிடுகிறது. பாதரசக் கழிவுகளால் பாதிக்கப்பட்டதால் காது கோளாத வாய் பேச முடியாத நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் மலைப்பாங்கான சுற்றுலா விடுதி ஒன்றில் தங்குகின்றனர். இந்த ஐவரில் ஒரு இளைஞனுக்கு அந்தப் பெண்ணின் மீது காதல். அந்தப் பெண்ணின் பிறந்த நாளை நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிய பிறகு, தன் காதலை அவளிடம் சொல்ல காரில் வெளியே அழைத்துச் செல்கிறான் காதலன். நண்பர்களும் காரில் ஏறிக்கொண்டுவிடுகின்றனர். வேகமாகச் செல்லும் காரின் குறுக்கே ஒரு நாய் வர அதன்மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டு காரைத் திருப்பும்போது ஒரு விபத்து நேர்கிறது. காரைவிட்டு இறங்கிப் பார்த்தால் பிரபுதேவா காரில் அடிபட்டு இறந்து கிடக்கிறார். அவர...
விசிறி  – விமர்சனம்

விசிறி – விமர்சனம்

Reviews
கதாநாயகர்கள் : ‘ராம்சரவணா’ & ‘ராஜ் சூர்யா கதாநாயகி:ரெமோனா  ஸ்டெபனி ஒளிப்பதிவு: விஜய் கிரண், இசை: தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் எடிட்டிங்: வடிவேல் – விமல்ராஜ், வசனம்: பித்தாக் புகழேந்தி பாடல்கள்: மதன் கார்க்கி, ஞானகரவேல், ரேஷ்மன் குமார், ஸ்ரீ ராவன் இணை தயாரிப்பு : பூமா கஜேந்திரன், S. சரஸ்வதி சரண்ராஜ், N.K. ராஜேந்திர பிரசாத் (துபாய்)”. நிர்வாக தயாரிப்பு : A.P.பிரகலாதன், கர்ணன் மகாலிங்கம், V.ராஜேஸ்வரி கதை, திரைக்கதை, இயக்கம்  : வெற்றி மகாலிங்கம் எம்.ஜி.ஆர். _சிவாஜி, ரஜினி _ கமல், என்று பிரிந்து நின்று மோதிக்கொள்ளும் தீவிர சினிமா ரசிகர்கள் வரிசையில் சமகாலத்தைய ரசிகர்கள் தல அஜித் தளபதி விஜய் என்றுபிரிந்து சமூகஊடகங்கள் மூலம் மோதிக் கொண்டிருப்பதை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம். படத்தின் கதை, திரைக்கதையும் இவரே. தீவிரமான தல ரசிகர் ர...
மன்னர் வகையறா – விமர்சனம்

மன்னர் வகையறா – விமர்சனம்

Reviews
குடும்பத்தில் ஏற்படும் உறவுச் சிக்கல்களையும், உரசல்களையும் நகைச்சுவை கலந்து தனக்கே உரிய பாணியில் மன்னர் வகையறா படத்தில் படைத்திருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன். சட்டக்கல்லூரியில் பயின்று தேர்வு எழுதிவிட்டு வரும் விமல், கண்டிப்பாக தேறிவிடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் அவரது மாமாவான ரோபோ சங்கர். ஆனால் தேர்வில் தோல்வியடையும் விமல் மாமா உதவியுடன் நாயகி கயல் ஆனந்தியின் பின்னே சுற்றித் திரிகிறார். ஆனந்தியும் விமலைக் காதலிக்க ஆரம்பிக்கும்போது ஒரு சிக்கல் வருகிறது. விமலின் அண்ணன் கார்த்திக் திடீரென விஷம் அருந்த அவரைக் காப்பாற்றும்போதுதான் விமலுக்கு விஷயம் தெரிய வருகிறது. தான் காதலித்த் பெண்ணுக்கு திருமணம் நடக்கவிருப்பதால், காதல் தோல்வியால் தான் விஷமருந்தியதாகத் தெரிவிக்கிறார் கார்த்திக். அண்ணனை அவரது காதலியுடன் சேர்த்து வைப்பதற்காக, திருமண மண்டபத்துக்கே சென்று வருங்கால அண்ணியை...