Monday, October 5

Reviews

ஜூலை காற்றில் – விமர்சனம்

Reviews
தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் ஆனந்த் நாக், பள்ளியொன்றில் மனோதத்துவ ஆசிரியையாகப் பணியாற்றும் அஞ்சு குரியனுடன் நட்பாகப் பழகுகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வர, இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடக்கிறது.ஆனந்த் நாக் அஞ்சு குரியனுடன் அதிக நேரம் செலவிட ஆசைப்பட்டாலும், அவரது பணியின் சுமை காரணமாக அது முடியாமல் போகிறது. இதற்கிடையில் அஞ்சுமீது தான் கொண்டிப்பது காதல் அல்ல, வெறும் ஈர்ப்புதான் என்று கருதும் ஆனந்த் இதை வெளிப்படையாக அவரிடம் தெரிவித்துவிட்டு பிரேக் அப் செய்து விடுகிறார். அடுத்ததாக சுதந்திரமான புகைப்படக் கலைஞராகப் பணியாற்றும் சம்யுக்தாவுடன் ஆனந்துக்கு பழக்கம் ஏற்படுகிறது. படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இருவரும் நெருங்கிப் பழகுகின்றனர். சம்யுக்தா மற்ற ஆண்களுடன் பழகும் விதம் பிடிக்காததால் அவருடன் ஆனந்துக்கு உரசல் ஏற்படுகி...
சகா விமர்சனம்

சகா விமர்சனம்

Reviews
சிறு வயதில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறார் சிறைச்சாலைக்கு வரும் சின்ன வயது குற்றவாளிகளைப் பற்றிய கதை சகா. அம்மா அப்பா இல்லாமல் அனாதைகளாக வளர்ந்து, நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் சரண் மற்றும் பாண்டி. தங்களுக்கு அம்மாபோல் இருந்து ஆதரவு காட்டியவரை கொன்றவனை பழிக்கு பழியாக கொல செய்துவிட்டு அந்தக் குற்றத்துக்கான தண்டனையை அனுபவிக்க இருவரும் சிறார் சிறைக்கு வருகிறார்கள். சிறை வாழ்க்கையோ வெளியுலகைக் காட்டிலும் இன்னும் கொடுமையாக இருக்கிறது. பெண்களைக் கடத்தி விற்ற குற்றத்துக்காக சிறைக்கு வரும் பிருத்வியுடன் நண்பர்கள் இருவருக்கும் ஏற்படும் மோதல், கடுமையான பகையாக மாறுகிறது. இதனைத் தொடர்ந்து பாண்டியின் கதையை சிறையில் வைத்தே முடித்துவிடுகிற பிரித்வி, சிறையிலிருந்து விடுதலை பெற்றும் விடுகிறார். அப்புறமென்ன… சரண் தான் உயிருக்கு உயிராக காதலித்த தன் காதலி சகாவை சாகடித்த பிரித்வியை பழி வாங்க...
சர்வம் தாள மயம் விமர்சனம்

சர்வம் தாள மயம் விமர்சனம்

Reviews
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வந்திருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புகளும் அதிகம். அந்த எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்காமல் ஒரு தரமான படத்தைக் கொடுத்திருக்கிறார் ராஜீவ் மேனன். மிருதங்கத்தை தயாரித்துக் கொடுப்பவர் குமரவேல். அவரது மகன் ஜி.வி.பிரகாஷ் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ரசிகர் மன்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு படிப்பில்கூட சிரத்தை இல்லாமல் இருப்பதுடன், செவிலியராகப் பணியாற்றும் அபர்ணா பாலமுரளியை காதலிக்கிறார் ஓருமுறை மிருதங்கம் ஒன்றை மகாவித்துவான் நெடுமுடி வேணுவிடம் கொடுக்கும்படி மகனை அனுப்புகிறார் குமரவேல். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நெடுமுடி வேணுவின் மிருதங்க ஆளுமையை அருகில் அமர்ந்து கேட்டும் ஜி.வி.பிரகாஷுக்கு தானும் அந்த வாத்தியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் நெடுமுடி வேணு மறுத்தாலும், ஜீ.வி.பிரகாஷ் தீவிரமாக இருப்பதைக் க...
“இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு“ – விமர்சனம்

“இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு“ – விமர்சனம்

Reviews
நடிகர் நடிகைகள் விமல் (   ஹரி  ),  ஆஷ்னா சவேரி (  சுரேகா  ), ஆனந்த ராஜ் (  அண்ணாச்சி  ) சிங்கம்புலி ( கிரி )மன்சூரலிகான் ( செங்கல்வராயன்), பூர்ணா ( கீதா ), மியா ராய் (கன்பைட் காஞ்சனா)  லோகேஷ், வெற்றி வேல்ராஜ்.                தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒளிப்பதிவு           -    கோபி ஜெகதீஸ்வரன் இசை             -    நடராஜன் சங்கரன் பாடல்கள்           -    விவேகா                                              கலை  -&n...
எழுமின் – திரைப்பட விமர்சனம்

எழுமின் – திரைப்பட விமர்சனம்

Reviews
  குழந்தைகள் திரைப்படம் என்ற பெயரில் வரும் படங்கள் பலவும் குழந்தைகளுக்கான படங்களாகவே இருப்பதில்லை. குழந்தைகளை, அவர்களது வயதுக்கு மீறிய காரியங்களை செய்ய வைத்தும், பேச வைத்தும் அபத்தக் களஞ்சியமாக உருவாக்கப்பட்ட படங்களும் உண்டு. ஆனால் குழந்தைகளை பிரதான வேடங்களில் நடிக்க வைத்து, அவர்களுக்குத் தேவையான நல்ல கரு்த்துக்களை சொல்லும் படங்கள் மிகவும் அரிதான ஒன்று. ஸ்வாமி விவேகானந்தரின் எழுமின் என்ற புகழ் பெற்ற வார்த்தையை படத்தலைப்பாகக் கொண்ட இந்தப் படம், கண்டிப்பாக குழந்தைகள் பார்க்க வேண்டிய நல்ல படமாக மலர்ந்திருக்கிறது. பதின்பருவத்தில் (டீன்ஏஜ்)  இருக்கும் அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா ஆகிய ஆறு பேரும் நண்பர்கள். படிப்புக்கான நேரம் போக குங்ஃபூ, சிலம்பம், கராத்தே, குத்துச் சண்டை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளையாட்டுக் கலையில் திறமைசாலிகள். இதில் அர்ஜுன் தொழில் அதிபரான வ...
பரியேறும் பெருமாள் -வாசகர் விமர்சனம்

பரியேறும் பெருமாள் -வாசகர் விமர்சனம்

Reviews
ஒரு திரைப்படம் முடிந்து வெளியே வரும்போது அந்த திரைப்படத்தின் கதாபாத்திரம் குறைந்தது பத்து நிமிடங்கள் நம்முடன் பயணிக்கும். சில சமயங்களில் நம்மையே அந்த கதாபாத்திரமாக உணர்வோம் பத்து நிமிடத்திற்கு. நம் நடை, பாவனை,மனோபாவம் அனைத்தும் அந்த கதாபாத்திரத்தோடு ஒத்து இருக்கும்.ஆனால் இந்த திரைப்படம் முடிந்து வெளியே வரும் போது படத்தின் இயக்குனர் நம்முடன் பயணிக்கிறார்.காண்பவனுக்கும் காட்சி பொருளுக்கும் உள்ள பந்தமாக இல்லாமல் படைத்தவனக்கும் படைத்த பொருளுக்கும் உள்ள பந்தமாக உணரப்படுகிறது. ஏதோ நாம் வெற்றி பெற்ற மாதிரி நடையில் ஒரு மிடுக்கு வருகிறது. கிராமத்தை அதன் பொட்டல் காட்டின் புழுதியோடும்,மழைகாலத்தின் சேற்றோடும் மேலும் அங்கு பரவி கிடக்கும் ஜுவராசிகளோடும் பெயர்த்து எடுத்து வெள்ளி திரையில் வீசியிருக்கிறார் இயக்குனர்.புழுதியையும் சேற்றின் ஈரத்தையும் உணர முடிகிறது.மனுசன் சூரிய ஒளியை கூட நடிக்க வைத்திருப்ப...
96 – விமர்சனம்

96 – விமர்சனம்

Reviews
மழைத்துளி பின்னனி ஓசையோடு திரைப்படம் தொடங்குகிறது.முதல் மழைத்துளியும் மண் துகளும் சந்திக்கும் பொழுது எழுகின்ற மண் வாசனையோடு வெள்ளிதிரையின் பின்புறம் நின்று கொண்டு கதை சொல்ல தொடங்குகிறார் இயக்குனர் பிரேம்குமார்.கதை சொல்வது என்பது மிகப்பெரிய கலை,அதன் வல்லமை திரைக்கதையில் வெளிப்பட வேண்டும்.முதல் படத்திலேயே அதில் மிக கைதேர்ந்தவராக தெரிகிறார் இயக்குனர் பிரேம்குமார். கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை... என்று தொடங்கி புவி போகிற போக்கில் கை கோர்த்து நடப்பேன் தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே ஆரோ ஆரோ ஆராரிரோ ................ என்று முடிகிற வரிகளோடு ராம் என்ற பெயரில் ஒரு பக்குவபட்ட பயண புகைப்படக்காரனாக விஐய் சேதுபதி நமக்கு அறிமுகமாகிறார். வாழாத என் வாழ்வை வாழவே தாளமல் மேலே போகிறேன் என்ற வரிகளின் மூலம் ஆரம்பத்திலேயே கதைக்கு பொடி வைக்கிறார் இயக்குனர். இந்த பாடல் வர...
பரியேறும் பெருமாள் __ விமர்சனம்

பரியேறும் பெருமாள் __ விமர்சனம்

Reviews
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புரையோடிப்போயிருக்கும் ஆதிக்க ஜாதிகளின் அட்டூழியங்களை இந்த அளவு நெஞ்சைத் தொடும் வண்ணம் திரையில் பதிவு செய்த படம் இதற்கு முன்பும் வந்ததில்லை. இதன் பிறகும் இந்த அளவுக்கு வீரியத்துடன் வருமா என்பது சந்தேகமே. அதுவும் கத்தி அரிவாள் ரத்தம் இன்றி சாதித்துக் காட்டியிருக்கும் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு முதலில் ஒரு பாராட்டு. ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த இளைஞன் மகேந்திரன் சட்டக்கல்லூரியில் சேர்கிறார். ஆங்கில வழிக்கல்வி அவரை மிரட்சியடையச் செய்கிறது. அவரது அப்பாவித்தனமான கேள்விகளையும் யதார்த்தமான பேச்சுக்களையும் கண்ட, சகமாணவியான ஆனந்தி உதவ முன்வருகிறார். எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி நட்புடன் பழகும் இருவரையும், அதே கல்லூரியில் படிக்கும் ஆனந்தியின் ஒன்றுவிட்ட அண்ணனால் ஏற்றுக் கொள்ள முடியில்லை. தன் அக்காவின் திருமணத்துக்கு உடன் படிக்கும் யாரையும் அழைக்காமல்...
சீம ராஜா – விமர்சனம்

சீம ராஜா – விமர்சனம்

Reviews
  சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் வழிவந்த சிவகார்த்திகேயன் வெட்டி ஆபீசராக ஊரை வலம் வந்து கொண்டிருக்கிறார். தந்தை நெப்போலியன் அவ்வப்போது அவரைக் கண்டித்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல், ஜாலியாக இருக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பன் சூரி கணக்குப்பிள்ளை என்ற பட்டத்துடன் அவருடனே ஒட்டிக்கொண்டு ராஜாவுக்கு வணக்கம் போடுபவர்களுக்கெல்லாம் பணத்தைக் கொடுத்தபடி பக்கவாத்தியம் போடுபவராக வலம் வருகிறார். சிங்கம்பட்டி சமஸ்தானத்துக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான நிலங்களையெல்லாம் அந்த ஊரிில் உள்ள நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கே தானமாக சமஸ்தானம் வழங்கிவிட்டதால் ஊருக்கே நல்ல பிள்ளையாக சந்தோஷமாக உலவி வருகிறார் சிவகார்த்திகேயன். சிங்கப்பட்டிக்கு அருகாமையில் உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த பெரும் புள்ளி லால். அந்தப் பகுதியில் காற்றாடி அமைப்பதற்குத் தேவையான நிலங்களை விவசாயிகளிடமிருந்து வாங்கிக்கொடுத்தே பெரும்புள்ளி...
ALPHA (ஆல்ஃபா)

ALPHA (ஆல்ஃபா)

Reviews
ஓநாய் மனிதனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஓநாய் மனிதனையே மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மனிதனும் ஓநாயும் நட்பு பாராட்டி, ஒருங்கிணைந்து செயல்பட்டு, எதிர்கொண்ட இன்னல்களையும் பேரபாயங்களையும் சந்தித்துச் சமாளித்து ஓர் இனத்தை நோக்கிப் பயணிப்பதுதான் ஆல்ஃபா என்கிற இப்படத்தின் கதைக்களம். சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தவர் வேட்டையாடுவதில் வல்லவர்கள்! காட்டெருமைகளை வேட்டையாடுவதில் கைதேர்ந்தவர்கள்! ஒருமுறை, வேட்டைக்குப் புறப்பட்டுச் செல்கிறது அவ்வினத்திலிருந்து ஒரு குழு. முதன்முறையாக இளைஞன் ஒருவனும் அவர்களோடு பயணிக்கிறான். எதிர்பாராத திருப்பங்கள் சிலவற்றால், அவன் காயப்பட்டு மயக்கமுறுகிறான். அவன் இறந்துவிட்டதாகக் கருதி, இதர வேட்டைக்காரர்கள், தம் பயணத்தைத் தொடர்கின்றனர். விழித்தெழும் அவன், நடந்து முடிந்துவிட்ட விபரீதத்தை எ...