Wednesday, November 18

Uncategorized

யோகி பாபுவின் 300ஆவது திரைப்படமான “அர்ஜுனன் பேர் பத்து” பத்து!

யோகி பாபுவின் 300ஆவது திரைப்படமான “அர்ஜுனன் பேர் பத்து” பத்து!

Uncategorized
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” பட டீசர்! *யோகி பாபுவின் 300வது திரைப்படமான “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் டீசரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!* Dev Cinemas Pvt Ltd சார்பில் கிருத்திகா தங்கபாண்டி S தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரின் தொடக்கமே தன் வண்டியை பறிகொடுத்து தவிக்கும் நடுத்தர வர்க்கத்து இளைஞனாக மிகவும் உணர்ச்சிபூர்வமாகதோன்றுகிறார் யோகிபாபு. தன் வண்டியை மீட்க யோகிபாபு போராடுவதும் அதே வண்டியை பலர் உரிமை கொண்டாடுவதும் என பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்த டீஸர் படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.. படம் வெளியானால் பழைய வண்டிகள் வாங்கி விற்பதில் நடக்கும...
பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம்!

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம்!

Uncategorized
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) (Love Insurance Kompany)– ஏப்ரல் 3 உலகளவில் வெளியாகிறது ! தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது வெளியீட்டு அறிவிப்பு, திரை ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், ...
‘துரந்தர்’ திரைப்பட இயக்குநர் வேண்டுகோள்!

‘துரந்தர்’ திரைப்பட இயக்குநர் வேண்டுகோள்!

Uncategorized
நாளை வெளியாகும் துரந்தர் பழிவாங்கல்! ரசிகர்களுக்கு இயக்குநர் ஆதித்யா தர் வைத்த வேண்டுகோள்! நாளை மார்ச் 19 முதல் உலகமெங்கும் வெளியாகும் துரந்தர் பழிவாங்கல் படம்! தயவுசெய்து ஸ்பாய்லர்களை பகிர வேண்டாம் என இயக்குநர் ஆதித்யா தர் வேண்டுகோள்! எண்ட் கிரெடிட்ஸ் முடியும் வரை காத்திருக்கவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள்! ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறியப்படாத மனிதர்களை பற்றிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல் நாளை, மார்ச் 19 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான சிறப்பு கட்டண காட்சிகள் இன்றே தொடங்கி பெரும் புயலை கிளப்பியுள்ளன. இந்த பிரம்மாண்ட வெளியீட்டிற்கு முன்னதாக, அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தை பார்த்த பிறகு ஸ்பாய்லர்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என இயக்குநர் ஆதித்யா தர் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ள...
ஸ்பைடர்-மேன் ‘Spider-Man: Brand New Day’

ஸ்பைடர்-மேன் ‘Spider-Man: Brand New Day’

Uncategorized
ஸ்பைடர்-மேன் 'Spider-Man: Brand New Day' உடன் ஒரு புதிய சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார் – முன்னோட்டம்  வெளியானது! உலகிலேயே முதன்முறையாக, ரசிகர்களாலேயே முன்னெடுக்கப்பட்ட முன்னோட்டத் துணுக்கு (trailer tease) வெளியீட்டிற்குப் பிறகு, நியூயார்க் நகரின் மீது சூரியன் உதித்த வேளையில், ஸ்பைடர்-மேன் மீதான தீவிர பற்று கொண்ட ரசிகர்கள் சூழ, புகழ்பெற்ற 'எம்பயர் ஸ்டேட் கட்டிடம்' (Empire State Building) உச்சியிலிருந்து டாம் ஹாலண்ட் முழுமையான முன்னோட்டத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட்டார். இது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்தது. முன்னோட்டத்தை இங்கே காணுங்கள்: தமிழ் முன்னோட்டம் (YouTube): https://youtu.be/eY5bSz-o5xo ஆங்கில முன்னோட்டம் (YouTube): https://youtu.be/BwntXFBNfOA 'Spider-Man: No Way Home' திரைப்படம் உலகளவில் சாதனை படைக்கும் வெற்றி...
உண்மையான பயத்தை உணர வைக்கும் ‘டிமாண்டி காலனி3’!

உண்மையான பயத்தை உணர வைக்கும் ‘டிமாண்டி காலனி3’!

Uncategorized
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்! முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் ஹாரர் திரைப்படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில், இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் தமிழில் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மூன்றாவது பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியிருப்பது ‘தி லைப்ரரியன்’ என்ற மர்மமான கதாபாத்திரம். புத்தாண்டு தினத்தில் சஸ்பென்சாக வைக்கப்பட்ட, இரண்டாம் பாகத்தின் மர்மமா...

சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம்!

Uncategorized
'இருட்டு', 'தலைநகரம் 2' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர், பிரபல தமிழ் நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்!! 'மோ', 'மாயோன்', 'மெட்ராஸ் மேட்னி', செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர் சி நாயகனாக நடிக்க துரை V.Z. இயக்குகிறார். 'இருட்டு', 'தலைநகரம் 2' படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார். திரைப்படம் குறித்து மேலும் பேசிய அவர், "சுந்தர் சி, துரை V.Z. கூட்டணியில...

பள்ளிப் பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான “யூத்” திரைப்படம்!

Uncategorized
"யூத்" (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு! பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்', 'விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.'யூத்' திரைப்படத்தை முதல் பாடலான 'முட்ட கலக்கி' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'பறந்தனே பெண்ணே' பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான 'ஆச புள்ள' வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் படம் மார...
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் துரந்தர் முதல் பாகம்!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகும் துரந்தர் முதல் பாகம்!

Uncategorized
ரசிகர்களின் மாபெரும் வரவேற்பால் உலகளவில் 1000-க்கும் மேற்பட்ட திரைகளில் ரீ-ரிலீஸ் ஆகும் துரந்தர் முதல் பாகம்!* இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய ரீ-ரிலீஸ்களில் ஒன்றாக, உலக அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படமான துரந்தர் முதல் பாகம் இன்று மார்ச் 13 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது. இதன் இரண்டாம் பாகமான துரந்தர் பழிவாங்கல் வரும் மார்ச் 19ம் தேதி வெளியாவதை முன்னிட்டு இந்த மாபெரும் ரீ-ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உலகளவில் 500 திரைகளில் மட்டுமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து வந்த அபரிமிதமான தேவையால், தற்போது இது இருமடங்காக அதிகரிக்கப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது. தனது முதல் வெளியீட்டின் போது பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்த இந்த திரைப்படம், அதன் அசாதாரண பயணத்தில் தற்போது ...
சர்வதேச மகளிர் தினத்தில் ‘மயிலா’ திரைப்பட டீசர் வெளியீடு!

சர்வதேச மகளிர் தினத்தில் ‘மயிலா’ திரைப்பட டீசர் வெளியீடு!

Uncategorized
சர்வதேச மகளிர் தினத்தில் ‘மயிலா’ டீசர் வெளியீடு — IFFR Premiere மற்றும் NETPAC பரிந்துரைக்கு பிறகு புதிய கவனம்! சென்னை, மார்ச் 8: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, “மயிலா” திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெண்களின் வலிமை, பொறுமை மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் காட்டும் துணிச்சலை பிரதிபலிக்கும் கதையை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது. மயிலா படத்தை எழுதி இயக்கியவர் செம்மலர் அன்னம்.தமிழ் நாட்டின் கிராமப்புற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள “மயிலா”, சுயமரியாதை, நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைப் போராட்டத்திற்காக முயற்சி செய்யும் ஒரு வேலைக்குப் போகும் சாதாரண பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அவளுடைய சிறிய மகளின் பார்வையில் கூறுகிறது. இந்தப் பார்வையின் மூலம், குடும்பங்களையும் சமூகங்களையும் அமைதியாக வடிவமைக்கும் பெண்களின் வாழ்வியலை இப்படம் வெளிப்படுத்துகிறது. “மயிலா” உலகத் திரையரங்கி...

திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கிய நடிகர் ரியோ ராஜ்!

Uncategorized
நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியுள்ளார். நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியதை பெருமையுடன் அறிவித்துள்ளார். இது அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான புதிய அத்தியாயமாகும். தனது தொழில்வாழ்க்கையின் தொடக்கம் முதலே புதிய திறமைகளை ஆதரித்து வந்த ரியோ ராஜ், பல அறிமுக இயக்குநர்களுடன் இணைந்து நினைவில் நிற்கும் வெற்றிப் படைப்புகளை வழங்கியுள்ளார். இந்தப் புதிய முயற்சியின் மூலம், அர்த்தமுள்ள மற்றும் ஈர்க்கக்கூடிய கதைகளை சொல்லும் தனது ஆர்வத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். அகமகிழ்ச்சியுடன் ரியோ ராஜ் இதுபற்றிக் கூறும் பொழுது: “இது என் நீண்டநாள் கனவு. என்னை நம்பி என் பயணத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் — என் குடும்பத்தினர், என் பெற்றோர், திரைப்படத் துறையில் உள்ள என் நண்பர்கள், மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும...