
அதிரடி ஆக்சன் எண்டர்டெயினராக உருவாகும் சிவண்ணா படம்!
KVN Productions மற்றும் Wadeyar Movies தயாரிப்பில், சிவண்ணா – வெங்கட் கோனங்கி (Venkat Konanki) – பவன் வடேயார் (Pavan Wadeyar) இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் 3 முதல் துவங்குகிறது !
ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள சிவராஜ்குமார் (Shivarajkumar) தற்போது பல படங்களில் வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவண்ணாவின் மற்றொரு புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் ( Sandalwood) பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் ( Pavan Wadeyar) இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக ( Puneeth Rajkumar.) இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற ...